Hyundai Staria EV: கவலைய விடுங்க..! மின்சார எடிஷனில் 9 சீட்டர், 400KM ரேஞ்ச் - 84 kWh பேட்டரியுடன் ஹுண்டாயின் எம்பிவி
Hyundai Staria MPV EV: சர்வதேச ஆட்டோமொபைல் சந்தையில் ஹுண்டாயின் புதிய 9 சீட்டர் எம்பிவி ஆக, ஸ்டாரியா மாடல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Hyundai Staria MPV EV: ஹுண்டாயின் புதிய 9 சீட்டர் எம்பிவி ஆன ஸ்டாரியா, 84 kWh பேட்டரி மூலம் 400 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹுண்டாய் ஸ்டாரியா எம்பிவி EV
பெல்ஜியம் நாட்டின் தலைநகர் ப்ரெஸ்ஸல்ஸ் நகரில் நடைபெற்று வரும் ஆட்டோமொபைல் கண்காட்சியில், ஹுண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஸ்டாரியா எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. சர்வதேச அளவில் அறிமுகப்படுத்தியதன் மூலம், தினசரி பயன்பாட்டிற்கு தற்போதும் எம்பிவி மாடல்களை பரிசீலிக்கும் சந்தைக்கு ஏதுவாக, நிறுவனம் பெரிய மின்சார வாகனங்களை நடைமுறைக்கு உகந்ததாகவும், எளிய அணுகலுடனும் தயாரிக்க திட்டமிட்டுள்ளதை வெளிப்படுத்தியுள்ளது.
ஸ்டாரியா எம்பிவி EV - வடிவமைப்பு விவரங்கள்
தட்டையான ஃப்ளோர், நீளமான வீல் பேஸ் மூலம் இந்த மின்சார வாகனமானது விசாலமானதாகவும், அனைத்து இருக்கை பயனர்களுக்கும் கால் மற்றும் தலைக்கு போதிய இடவசதி கிடைப்பதாகவும் கூறப்படுகிறது. பெரிய ஜன்னல்கள், தாழ்வான பெல்ட் லைன், உயரமான ரூஃப் லைன் ஆகியவை இயற்கையாகவே வாகனம் வெளிச்சமாக இருப்பதை உறுதி செய்கின்றன. ஸ்டாரியாவின் இரண்டு எடிஷன்களுமே பொருத்தமான கார்கோ ஸ்பேஸ், அகலமான ஸ்லைடிங் கதவுகள், எளிய அணுகலுக்காக பெரிய டெயில் கேட் ஆகியவற்றை கொண்டுள்ளது. ஸ்டாரியா இன்ஜின் எடிஷனின் ஒன் - கர்வ் சில் -அவுட்டை தாக்கத்தை கொண்டிருந்தாலும், மின்சார எடிஷனுக்காக தனித்துவமான சில அம்சங்களையும் பெறுகிறது. முன்பகுதி வழக்கமான ஏர் இண்டேக்குகளையும் பெற்றுள்ளது.

ஸ்டாரியா எம்பிவி EV - உட்புற வசதிகள், அம்சங்கள்
தேவைகளுக்கு ஏற்ப இரண்டு இருக்கை வடிவங்களில் ஸ்டாரியாவை வழங்க ஹுண்டாய் திட்டமிட்டுள்ளதாம். 7 சீட்டர் லக்சரி வேரியண்டானது தனிப்பட்ட பயனர்கள் மற்றும் வசதியான காரை வாங்க விரும்புவோருக்காக ஒதுக்கப்படுகிறது. அதேநேரம் பெரிய குடும்பங்கள் மற்றும் குழுவாக பயணிக்க விரும்புவோருக்காக 9 சீட் வேகான் வெர்ஷன் வழங்கப்படுகிறது.
பரந்த கிடைமட்டமான டேஷ்போர்டு இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்திற்கான இரட்டை 12.3-இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளேக்களை ஒருங்கிணைக்கிறது. ஹூண்டாயின் சமீபத்திய கனெக்டட் கார் நேவிகேஷன் காக்பிட், ஓவர் தி ஏர் அப்டேட்கள், வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஒருங்கிணைப்பு மற்றும் க்ளவுட் அடிப்படையிலான சேவைகளை ஆதரிக்கும் வசதிகளும் இடம்பெற்றுள்ளன. வெஹைகிள் டு லோட் செயல்பாடு நடைமுறை வாகனத்திற்கு மதிப்பைச் சேர்க்கும் வேளையில், முழு ஹூண்டாய் ஸ்மார்ட்சென்ஸ் ADAS தொகுப்பு நகர ஓட்டுநர், நெடுஞ்சாலைகள் மற்றும் பார்க்கிங் சூழ்நிலைகளில் விரிவான ஓட்டுநர் உதவியை வழங்குகிறது.

ஸ்டாரியா எம்பிவி EV - பேட்டரி விவரங்கள்
புதிய ஸ்டாரியா மாடலானது 84 kWh பேட்டரி பேக்கை கொண்டுள்ளது. இதனுடன் சேர்ந்து பணியாற்ற முன்புற ஆக்சிலில் பொருத்தப்பட்டுள்ள மோட்டர் மூலம் அதிகபட்சமாக 218PS ஆற்றலை உற்பத்தி செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முன் சக்கரங்களுக்கு கடத்தப்படுகிறது மற்றும் மின்சார ட்ரைவ்டிரெய்ன் சுத்திகரிப்புக்காக டியூன் செய்யப்பட்டுள்ளது, பல்வேறு பயண சூழலிலும் அமைதியான செயல்பாடு மற்றும் நிலையான ஆற்றல் விநியோகத்தை வழங்கும் என ஹுண்டாய் தெரிவித்துள்ளது.
ஸ்டாரியா எலக்ட்ரிக்கின் மிக முக்கியமான தொழில்நுட்ப அம்சங்களில் ஒன்று அதன் 800-வோல்ட் மின் கட்டமைப்பு ஆகும், இது குறைந்த வெப்ப அழுத்தத்துடன் விரைவான ஆற்றல் ஓட்டத்தை அனுமதிக்கிறது, இது செயல்திறனை சமரசம் செய்யாமல் மீண்டும் மீண்டும் வேகமாக சார்ஜ் செய்யும் அமர்வுகளை செயல்படுத்துகிறது. சரியான DC சார்ஜிங் மூலம் பேட்டரியை வெறும் 20 நிமிடங்களில் 10 முதல் 80 சதவிகிதம் வரை நிரப்ப முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பேட்டரியை முழுமையாக நிரப்பினால் 400 கிலோ மீட்டர் தூரம் ரேஞ்ச் அளிக்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

ஸ்டாரியா எம்பிவி EV - உற்பத்தி, விலை
ஹூண்டாய் எலெக்ட்ரிக் ஸ்டாரியா மாடலின் உற்பத்தி தென் கொரியாவில் உள்ள நிறுவனத்தின் உல்சான் ஆலையில் தொடங்க உள்ளது. நடப்பாண்டின் பாதியில் கொரியா மற்றும் ஐரோப்பாவில் முதலில் விற்பனை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்டாரியாவின் இன்ஜின் எடிஷன் கடந்த ஆண்டே பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது வரை உள்நாட்டில் சந்தைப்படுத்தப்படவில்லை. இதனால், ஸ்டாரியாவின் மின்சார எடிஷன் உடனடியாக இந்தியாவிற்கு வரும் என்று கூறமுடியாது. அப்படி வந்தால் இதன் விலை 65 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.





















