Pongal Gift: பொங்கல் பரிசு ரூ. 3000 வாங்க இன்று கடைசி நாள்.! மிஸ் பண்ணவங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு.?
Pongal Gift: பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு சார்பாக 3ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் பொங்கல் பரிசு கடந்த 5 நாட்களாக வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வரை சுமார் 15 லட்சம் பேர் பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

பொங்கல் கொண்டாட்டம்- தமிழக அரசின் பரிசு
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாட மக்கள் தயாராகி வருகிறார்கள்.உழவர்களின் அறுவடைத் திருவிழாவாகவும், இயற்கைக்கும் சூரியனுக்கும் நன்றி செலுத்தும் விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2022ஆம் ஆண்டு 20 பொங்கல் பொருட்கள் அடங்கிய தொகுப்பும், 2023 மற்றும் 2024ஆம் ஆண்டு ஆயிரம் ரூபாய் ரொக்கப்படத்தோடு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.
கடந்த 2025ஆம் ஆண்டு நிதி நிலை காரணமாக ரொக்கப்பணம் வழங்காமல் பொங்கல் பரிசு தொகுப்பு மட்டும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பாக 3ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் வேட்டி, சேலை, அரிசி, சக்கரை, முழுக்கரும்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
2 கோடியே 22 லட்ச குடும்ப அட்டைகளுக்கு பரிசு
இதற்கு ஏற்ப தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த ஜனவரி 8ஆம் தேதி சென்னை, பட்ரோடு நியாய விலைக் கடையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பினையும், வேட்டி, சேலைகளையும் வழங்கி, தொடங்கி வைத்தார். அப்போதே அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. அந்த வகையில் தமிழ்நாடு அரசு 2,22,91,710 எண்ணிக்கையிலான அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதன் படி பொங்கல் பரிசு தொகுப்பானது ஜனவரி 8ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில் இன்றோடு ஜனவரி 13ஆம் தேதியோடு நிறைவடையவுள்ளது. முதல் நாள் 200 குடும்ப அட்டைத்தாரர்களும், இரண்டாம் நாள் 300 முதல் 400 வரையிலான குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கு ஏதுவாக தொடர்புடைய நியாயவிலைக்கடைப் பணியாளர்களால் டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டது.
இன்றோடு முடிவடையும் பொங்கல் பரிசு.?
கடந்த 5 நாட்களாக பொதுமக்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் ரேஷன்கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசு 3ஆயிரம் மற்றும் வேட்டி, சேலை , அரிசி, சக்கரையோடு முழு கரும்பையும் வாங்கி வருகிறார்கள். அந்த வகையில் மொத்தமாக உள்ளசு 2 கோடியே 22 லட்சத்து 91ஆயிரத்து 710 எண்ணிக்கையிலான அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது வரை 12.1.2026 அன்று வரை 24,924 நியாயவிலை கடைகளில் உள்ள 2,04,10,899 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் ரொக்கத் தொகை ரூ. 6123.26 கோடி விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசு - கூடுதல் நாட்கள் நீட்டிக்கப்படுமா.?
இன்னும் சுமார் 15லட்சம் பேர் பொங்கல் பரிசு தொகுப்பை வாங்காமல் உள்ளனர். சிலர் வெளியூர்களில் பணிபுரிந்து வருகிறார்கள். பொங்கல் பண்டிகையை கொண்டாட ஜனவரி 14 அல்லது 15 ஆம் தேதி தான் சொந்த ஊருக்கு வருவார்கள். எனவே பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கும் காலம் நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அந்த வகையில் பொங்கல் பரிசு தொகுப்பை பெறாதவர்களுக்கு வாய்ப்பு வழங்கிடும் வகையில் நாளை வரை சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கூடுதல் நாட்கள் நீட்டிப்பது தொடர்பாக இன்று மாலை அறிவிப்பு வெளியாகும் என தலைமைச்செயலக வட்டாரம் தெரிவித்துள்ளது.





















