மேலும் அறிய
Advertisement
"ஒருவரை போல் ஒருவர் வாழ முடியாது. அது அவசியமும் இல்லை" - கல்லூரியில் கனிமொழி எம்.பி.
”ஒவருவரை போல் ஒவர் வாழ முடியாது. அது அவசியம் இல்லை. அதனால் உங்கள் வழியில் சிறப்பாக பயணம் செய்து வெற்றியடையுங்கள்" - கனிமொழி எம்.பி., வாழ்த்து.
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அமெரிக்கன் கல்லூரியின் 142 -வது ஆண்டுவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் எம்.பி., கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். முன்னதாக கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார்.
தொடர்ந்து கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட நிகழ்ச்சி மேடையில் கனிமொழி எம்.பி., பேசுகையில்..," மதுரை வரும் போதெல்லாம் அழகான அமெரிக்கன் கல்லூரியில் காணவேண்டும் என நினைத்திருக்கிறேன். பசுமை சூழல் நிறைந்த கல்லூரிக்குள் வந்தது மனம் நிறைவாக இருக்கிறது. ரவீந்திரநாத், கலைஞர் கருணாதி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வந்த கல்லூரி என்பது பெருமையாக உள்ளது. இந்த கல்லூரியில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளது. அமெரிக்கன் கல்லூரி ஒடுக்கப்பட்ட, கல்வி மறுக்கப்பட்டவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து பலருக்கும் கல்வி வாய்ப்பை கொடுத்து வருகிறது.
கல்வி படிக்க வந்ததை எவ்வளவு கஷ்டப்பட்டு வருகிறோம் என்று ஒவ்வொரு நாளும் மாணவர்கள் நினைக்க வேண்டும். ஒவ்வொரு மாணவர்கள் கையிலேயே உலகம் உள்ளது. சாதனங்கள் உங்களை அதிகப்படியாக வளர்ச்சிக்க்கு கொண்டு செல்கிறது. மாணவர்களுக்கு பிடித்தது, தாங்கள் சமூகத்தில் மாற்ற நினைப்பது என்பதை நினைத்து அதை நோக்கி பயணிக்க வேண்டும். ஒடுக்கப்பட்டவர்கள் அனைவரும் படிக்க வேண்டும் என பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் போராடினார்கள். அந்த கல்வியை வைத்து முன்னேற வேண்டும். மதுரையில் மாணவர்கள் குரல் எழுப்பிய பின் தான் கிளர்ச்சி அடைந்து ஒன்றிய அரசு திரும்பி பார்த்து ஜல்லிக்கட்டிற்கு அனுமதி கொடுத்தது. ஒவருவரை போல் ஒவர் வாழ முடியாது. அது அவசியம் இல்லை. அதனால் உங்கள் வழியில் சிறப்பாக பயணம் செய்து வெற்றியடையுங்கள்" என வாழ்த்தினார்.
மதுரை விமான நிலையத்தில் கனிமொழி எம்.பி., பேட்டியளிக்கையில்
ஊழல் பட்டியல் விவகாரம் குறித்த கேள்விக்கு
திமுக ஏற்கனவே வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. நிச்சயமாக நானும் வழக்கு தொடர்வேன் அதற்கு அவர் பதில் சொல்ல வேண்டும்.
ஸ்டெர்லைட் விவகாரம் குறித்த கேள்விக்கு
ஸ்டெர்லைட் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. தொடர்ந்து திமுக அரசு ஸ்டெர்லைட்டை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்காடி வருகிறது. மக்களுடைய குரலை எதிரொலிக்கிறது, நிச்சயமாக நியாயமான தீர்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறோம் என்றார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - பேருந்தில் ஏற்ற மறுத்த நடத்துனர் - மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டன் சச்சின் சிவா மதுரை காவல் ஆணையரிடம் புகார்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
சென்னை
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion