'திராவிட மாடல் அரசு போல ஒரு நல்ல மாடலாக திருமண வாழ்க்கை அமைய வேண்டும் ' - மணமக்களுக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
திராவிட மாடல் அரசு போல ஒரு நல்ல மாடலாக திருமண வாழ்க்கை அமைய வேண்டும். குன்றக்குடியில் நடைபெற்ற திருமண விழாவில் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தினார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள குன்றக்குடியில் தி.மு.க., கல்லல் மேற்கு ஒன்றியச் செயலாளர் சுப்பிரமணியன் மகள் கிருஷ்ணவேணிக்கும் தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் இராம.இளங்கோவனின் மகன் பவித்ரன் திருமணத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைத்தார்.
திராவிட மாடல் அரசு போல ஒரு நல்ல மாடலாக திருமண வாழ்க்கை அமைய வேண்டும்.
— arunchinna (@arunreporter92) May 25, 2023
குன்றக்குடியில் நடைபெற்ற திருமண விழாவில் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தினார் !#sivagangai | @Udhaystalin
| @OfficeOfKRP | @TamilarasiRavi3
| #dmk `| @LPRABHAKARANPR3 |.. pic.twitter.com/WVtHU3VvTi


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்





















