மேலும் அறிய
Advertisement
சிவகங்கை : அங்கன்வாடியில் 26-வது ஆண்டு விழா.. ஆசிரியை முத்துலட்சுமியின் நெகிழ்ச்சி கதை..
அங்கன்வாடியில் ஆண்டு விழாவை நடத்தி குழந்தைகளிடத்தும் பெற்றோரிடத்தும் ஊர் மக்களிடத்தும் நன்மதிப்பை பெற்று வருகிறார்.
சிவகங்கை மாவட்டத்தில் காளையார் கோவிலின் விரிவாக்க பகுதியாகவும் முன்பு தனித்த சிற்றூராக விளங்கிய மேட்டுப்பட்டியில் அங்கன்வாடியில் 26-வது ஆண்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஆண்டுவிழாக்கள் பெரும்பாலும் பள்ளி கல்லூரிகளில் கொண்டாடப்படுவது வழக்கம், ஆனால் தொடர்ச்சியாக அங்கன்வாடியில் ஆண்டு விழாவை நடத்தி குழந்தைகளிடத்தும் பெற்றோரிடத்தும் ஊர் மக்களிடத்தும் நன்மதிப்பை பெற்று வருகிறார், மேட்டுபட்டி அங்கன்வாடி பணியாளர் முத்துலட்சுமி
ஆண்டு விழாக்கள் பள்ளி கல்லூரிகளில் மாணவர்களின் படிப்பு மற்றும் விளையாட்டுத் திறனை வெளிப்படுத்தும் விதமாக போட்டிகள் நடத்தப்பட்டு கலைநிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டு உள்ளாட்சி பிரதிநிதிகள், சிறப்பு அழைப்பாளர்கள், கல்வித்துறை அலுவலர்கள் ஆகியோரின் வழி பரிசுகள் வழங்கப்படும். இது பள்ளி கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அனைவருக்கும் உந்து சக்தியாக விளங்குவதோடு கல்வி நிறுவனத்தின் திறனை வெளிப்படுத்தும் விதமாகவும் அமையும்.
அங்கன்வாடியில் 26-வது ஆண்டுவிழா !
— Arunchinna (@iamarunchinna) May 30, 2022
சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் அருகே மேட்டுப்பட்டி பகுதியில் உள்ள அங்கன்வாடியில் 26-வது ஆண்டுவிழா நடைபெற்றுள்ளது. பள்ளி, கல்லூரியைப் போல் அங்கன்வாடியில் ஆண்டுவிழா நடைபெற்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.@SRajaJourno |
| @SivagangaiODFC pic.twitter.com/UXm6Ni8TY7
அவ்வகையில் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் வட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி அங்கன்வாடி மையத்தில் தொடர்ச்சியாக உள்ளாட்சி பிரதிநிதிகள், கல்வியாளர்கள், துறை அலுவலர்களை கொண்டு அங்கன்வாடி குழந்தைகள் மற்றும் அவ்வூரைச் சார்ந்த குழந்தைகளை சேர்த்து ஊர் திருவிழா போல அங்கன்வாடியின் 26வது ஆண்டு விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இவ்வங்கன்வாடியில் 25 குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர், அவர்களின் திறமையை வெளிப்படுத்தும் விதமாக பாட்டு, கதை, நடனம் ஆகியவை இடம்பெற்றன, ஆண்டு விழாவில் கலந்து கொண்ட ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சிவசண்முகம், ஆசிரியர் பயிற்றுநர் புலவர் கா.காளிராசா, காளையார்கோவில் ஒன்றிய கவுன்சிலர் கஸ்தூரி குருநாதன், இப்பகுதியை சேர்ந்த கலைச்செல்வன், கண்ணமங்கலம் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் கா. சேதுராமன், ஆகியோர் இந்நிகழ்வில் குழந்தைகளை வாழ்த்தி பேசினர். ஆசிரியர் பயிற்றுநர் புலவர் கா.காளிராசா, கண்ணமங்களம் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் கா.சேதுராமன் ஆகியோர் குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினர். முன்னதாக அங்கன்வாடி பணியாளர் முத்துலட்சுமி வரவேற்றார். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை பொதுமக்களின் பங்களிப்போடு அங்கன்வாடி பணியாளர் முத்துலெட்சுமி செய்திருந்தார். அங்கன்வாடி மாணவர்களின் முன்னேற்றத்தில் சிறப்பாக பணியாற்றும் பணியாளர் முத்துலட்சுமி அவர்களை அனைவரும் பாராட்டினர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மதுரை : கி.பி 9-ஆம் நூற்றாண்டை சேர்ந்த குமிழித்தூம்பு கல்வெட்டு கண்டுபிடிப்பு..
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
மயிலாடுதுறை
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion