மேலும் அறிய

இன்னும் 13 நாட்களே... விஜய் தலைமையில் 20 லட்சம் பேர் எதிர்பார்ப்பு! தேதி மாற்றம் ஏன்?

மதுரையில் தவெக 2வது மாநில மாநாடு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 13 நாட்களே உள்ள நிலையில் முழு வீச்சில் மாநாடு ஏற்பாடு பணிகள் தீவிரமடைந்துள்ளது.

மதுரை மாநாடு: விஜய் தலைமையில் பிரம்மாண்ட ஏற்பாடுகள்! 20 லட்சம் பேர் எதிர்பார்ப்பு, தேதி மாற்றம் ஏன்? - முழுமையாக படிக்கவும்.

த.வெ.க., மதுரை மாநாடு
 
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள சூழ்நிலையில் அதனை எதிர்கொள்ளும் வகையில் தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வருகிறது. விக்கிரவாண்டியில் முதலாவது மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய த.வெ.க. தலைவர் விஜய், இரண்டாவது மாநில மாநாடு வருகிற 21-ந் தேதி மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எலியார்பத்தி சுங்கச்சாவடி அருகே பாரபத்தி பகுதியில் நடைபெறுகிறது. ஏற்கனவே 25-ம் தேதி மதுரை மாநாடு நடைபெறும் என சொல்லிருந்த சூழலில் விநாயகர் சதுர்த்தி காரணமாக தேதி மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
பாதுகாப்பு ஏற்பாடு
 
எத்தனையோ அரசியல் கட்சிகள் மாநில மாநாடுகளை நடத்தியிருந்த போதிலும், இப்படியொரு மாநாட்டை யாரும் பார்த்திராத வகையில் மாநாட்டை நடத்துவதற்கான ஆலோசனைகளை விஜய் வழங்கியிருக்கிறார். இந்த மாநாட்டிற்காக கடந்த மாதம் 16-ந்தேதி கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தலைமையில் பூமி பூஜை பந்தக்கால் நடத்தப்பட்டது. அன்றைய தினமே இதற்கு போலீசார் பாதுகாப்பு மற்றும் அனுமதி வழங்கக்கோரி பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த்தை சந்தித்து மனு அளித்தார்.
 
தொடர் கண்காணிப்பில் புஸ்ஸி ஆனாந்த்
 
இதையடுத்து மாநாட்டிற்கான முன்னேற்பாடு பணிகள் ஜோரூராக தொடங்கியது. வெளியூர்களில் இருந்து மாநாட்டு பந்தல், மேடை, ஆர்ச்சுகள் அமைப்பதற்கான உபகரணங்கள், பொருட்கள் லாரிகள் மற்றும் கண்டெய்னர்களில் வந்து இறங்கின. த.வெ.க. மாநாட்டிற்கு இன்னும் 13 நாட்கள் உள்ள நிலையில் மாநாட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 20 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மாநாட்டிற்காக 506 ஏக்கர் பரப்பளவிலான இடம் வாடகைக்கு பெறப்பட்டுள்ளது. 20-க்கும் மேற்பட்ட பொக்லைன் எந்திரங்கள் மூலம் நிலம் செம்மைப்படுத்தப்பட்டு முதற்கட்ட பணிகள் தொடங்கி வேகமாக நடந்து வருகிறது. இந்த பணிகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தங்குவதற்கும், ஓய்வு எடுப்பதற்கும் தற்காலி அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கான அடிப்படை வசதிகள் அனைத்து செய்து தரப்பட்டுள்ளது. இந்த பணிகளை உள்ளூர் நிர்வாகிகள் கண்காணித்து வருகிறார்கள். அவ்வப்போது மதுரைவரும் த.வெ.க., பொதுச்செயலாளர் என்.ஆனந்த் நேரில் வந்து பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கிச் செல்கிறார்.
 
rampwalk way மேடை
 
பிரம்மாண்டமாக மாநாடு  மேடை, விஜய் நடந்து செல்லும்  rampwalk way மேடை, தடுப்பு வேலிகள், ஒலி ஒளி கருவிகள் பொருத்துவதற்கான கேலரிகள் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. அதேபோல மாநாடு வரும் தொண்டர்களின் வசதிக்கேற்ப குடிநீர் தொட்டிகள் பொருத்தும் பணிகளும் , சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களும், மருத்துவ பாதுகாப்பு அறைகள், கழிப்பறைகள்,  ஏற்படுத்தும் பணிகளும் ஒரு புறம் துவங்கியுள்ளது. மாநாடு பகுதிக்கு எதிரே உள்ள 200 ஏக்கர்  நிலமும் தேர்வு செய்யப்பட்டு மாநாடு வரும் தொண்டர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் இடம் தயார் செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது. அதேபோல மாநாடு திடலில் பிரம்மாண்ட கொடி கம்பம் ஒன்று அமைக்கப்பட உள்ளதாகவும்  மாநாடன்று விஜய் தவெக கொடியினை ஏற்றுவார் எனவும் கூறப்படுகிறது.  
 
தலைப்பு செய்திகள்

தமிழக தொழில் துறை 17-க்கு சரிவு.. ஆர்.பி. உதயகுமார் த.வெ.க., மீது கொந்தளிப்பு !
தமிழக தொழில் துறை 17-க்கு சரிவு.. ஆர்.பி. உதயகுமார் த.வெ.க., மீது கொந்தளிப்பு !
மதுரை சிறையில் அன்வர்தீன் மரணம்: பழனி கோயில் நில மோசடி வழக்கில் திருப்பம்!
மதுரை சிறையில் அன்வர்தீன் மரணம்: பழனி கோயில் நில மோசடி வழக்கில் திருப்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
கள்ளுக்கான தடையை மறு ஆய்வு செய்ய கோரி மனு.. உள்துறை முதன்மைச் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு !
கள்ளுக்கான தடையை மறு ஆய்வு செய்ய கோரி மனு.. உள்துறை முதன்மைச் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு !

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
TASMAC Liquor Bottles : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
Gold rate today : ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
Embed widget