(Source: ECI/ABP News/ABP Majha)
எடப்பாடி பழனிசாமி திமுகவிற்கு பி- டீமாக செயல்படுகிறார் - டி.டி.வி.தினகரன்
என்.டி.ஏ கூட்டணியில் அனைவரும் ஒன்று சேர்ந்து கடுமையாக பணி செய்து தீய சக்தி தி.மு.கவை வெற்றி பெறுவதை முறியடிக்க, அனைத்து விதமான முயற்சிகளையும் செய்து வருகிறோம்.
எடப்பாடி பழனிசாமி தி.மு.க.வு.க்கு சாதகமாக இருப்பதாகவும், எடப்பாடி பழனிசாமி தி.மு.க.வின் பி-டீம் மாக செயல்படுவதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் குற்றம் சாட்டினார்.
தி.மு.க.,வை தோற்கடிக்க முயற்சி
TTV Dinakaran: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள காந்தி சிலை பகுதியில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் மணமக்களை வாழ்த்திய பின்னர் செய்தியாளர்களிடம் சந்தித்து பேசினார். அப்போது, "விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வாக்குகள் எல்லாத்தையும் விலைக்கு வாங்கும் முயற்சிகளை முறியடிக்கும் விதமாக என்.டி.ஏ., கூட்டணியின் சார்பில் பா.ம.கவின் அன்புமணி போட்டியிடுகிறார். என்.டி.ஏ கூட்டணியில் அனைவரும் ஒன்று சேர்ந்து கடுமையாக பணி செய்து, தீய சக்தி தி.மு.கவை வெற்றி பெறுவதை தடுக்க அனைத்து விதமான முயற்சிகளையும் செய்து வருகிறோம்.
தமிழகத்திற்கான உரிமைகளை பெறலாம்
தமிழ்நாட்டில் குடிநீர் பிரச்னை தலை விரித்து ஆடுகிறது. பிரதானமான காவிரி டெல்டா பகுதியில் காவிரி பாசன பகுதிகளில் விவசாயத்தை கடுமையாக பாதிக்கிறது. மாதாமாதம் கொடுக்க வேண்டிய தண்ணீரை தருவதில்லை. மேகதாது பகுதியில் அணை கட்டுவது என்று, கர்நாடகாவின் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் சூளுரைத்து வருகின்றனர். இதனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் ஓட்டு வாங்க வேண்டும், என்பதற்காக காங்கிரஸில் கூட்டணி வைத்திருக்கிறார். மு.க.ஸ்டாலின் நினைத்தால் காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தியிடம் கர்நாடகா முதலமைச்சர் துணை முதலமைச்சர் நிர்பந்தித்து தமிழகத்திற்கான உரிமைகளை பெறலாம்.
எடப்பாடி பழனிசாமி தி.மு.க.வின் பி-டீம்
மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறப்பார்கள் எந்த வித முயற்சி எடுக்கலாம். 40 தொகுதிகளும் பண நாயகம் வெற்றுள்ளது. 300, 500 ரூபா ஆயிரமும் கொடுத்து ஏழை எளிய மக்களை பலிகடா ஆக்கும் இந்த வெற்றி நேர்மையான வெற்றி அல்ல, தவறான முறையில் பெற்ற வெற்றி. தேனி தொகுதிகள் ஒரு ரூபாய் கூட கொடுக்கல அப்படி இருந்தும் நான் மூன்று லட்சம் வாக்குகள் பெற்று இருக்கிறேன். அங்கே ஏ.டி.எம்.கே டெபாசிட் போய் இருக்கு” என்றார்.
மேலும் எடப்பாடி பழனிசாமி தி.மு.க.வு.க்கு சாதகமாக இருப்பதாகவும், எடப்பாடி பழனிசாமி தி.மு.க.வின் பி-டீம் மாக செயல்படுவதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டினார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ஆம்புலன்ஸ் கூட போக முடியாது: ரூ.7 லட்சம் செலவில் சாலையை விரிவாக்கம் செய்து கொண்ட பொதுமக்கள்
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - STSS: "48 மணி நேரத்தில் மரணம்" - ஜப்பானில் பரவும் பாக்டீரியா.. உலகை அலறவிடும் மர்ம நோய்!