மேலும் அறிய

3 மாதத்தில் முடி வளர்ச்சியில் வித்தியாசம் தெரியனுமா ? - இந்த டிப்சை மறக்காம ஃபாலோ பண்ணுங்க...!

முன் நெற்றியில் வழுக்கை இருக்கும். சில பேருக்கு தலை முழுவதும் முடி கம்மியாதான் இருக்கும். தலை முடி வளர்ப்பதில் உங்களுக்கு பிரச்சனை இருந்தால் ஒரு ரெமிடி இருக்கு

நிறைய பேருக்கு தலையில் நிறைய முடி இருக்கும். முன் நெற்றியில் வழுக்கை இருக்கும். சில பேருக்கு தலை முழுவதும் முடி கம்மியாதான் இருக்கும். தலை முடி வளர்ப்பதில் உங்களுக்கு பிரச்சனை இருந்தால், வீட்டில் இருந்தபடியே சுலபமாக ஒரு ரெமிடி இருக்கு. அது என்னன்னு இன்னைக்கு நாமும் தெரிஞ்சுக்கலாம். இந்த டிப்ஸை தொடர்ந்து நீங்க ஃபாலோ பண்ணி பாருங்க. நிச்சயமாக 3 மாதத்தில் முடி வளர்ச்சியில் வித்தியாசம் தெரியும்.
 
3 மாதத்தில் முடி வளர்ச்சியில் வித்தியாசம் தெரியனுமா ? - இந்த டிப்சை மறக்காம ஃபாலோ பண்ணுங்க...!
 
முதலில் முடிக்கும் ஒரு ஆயில் மசாஜ் கொடுக்க வேண்டும். ஒரு சிறிய கிண்ணத்தில் பாதாம் எண்ணெய் – 1 ஸ்பூன், விளக்கெண்ணெய் – 1 ஸ்பூன், தேங்காய் எண்ணெய் – 1 ஸ்பூன், இந்த மூன்றையும் சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த எண்ணெயை டபுள் பாய்லிங் மெத்தடில் வெதுவெதுப்பாக சூடு செய்து கொள்ள வேண்டும். அதாவது அடுப்பில் தண்ணீரை வைத்து சூடு செய்து கொள்ள வேண்டும். அந்த சுடு தண்ணீரில் மேலே இந்த எண்ணெயை வைத்து லேசாக சூடு செய்தால் போதும். எண்ணெய் வெதுவெதுப்பாக இருக்கும்போது உங்களுடைய மண்டையோட்டில் தடவி உங்களுடைய விரல்களை வைத்து நன்றாக மசாஜ் செய்து கொடுங்கள்.
 
3 மாதத்தில் முடி வளர்ச்சியில் வித்தியாசம் தெரியனுமா ? - இந்த டிப்சை மறக்காம ஃபாலோ பண்ணுங்க...!
 
அதன் பின்பு இந்த எண்ணெயை முன்நெற்றியில் வழுக்கை இருக்கும் இடத்திலும் தடவி மசாஜ் செய்து கொள்ள வேண்டும். கூடுமானவரை எண்ணெய் முகத்தில் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். விளக்கெண்ணை முகத்தில் பட்டால் சில பேருக்கு பிம்பிள்ஸ் வர வாய்ப்புகள் உள்ளது. இந்த எண்ணெயை தடவி விட்டு மூன்றிலிருந்து நான்கு மணி நேரம் கழித்து தலைக்கு குளித்து விடலாம். முடிந்தால் இரவு முழுவதும் கூட இந்த எண்ணெய் தலையில் இருக்கட்டும். மறுநாள் காலை எழுந்து தலைக்கு குளித்து விடுங்கள். இது முதல் டிப்ஸ்.

3 மாதத்தில் முடி வளர்ச்சியில் வித்தியாசம் தெரியனுமா ? - இந்த டிப்சை மறக்காம ஃபாலோ பண்ணுங்க...!
 
அடுத்த டிப்ஸ். ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் தோலுரித்த சின்ன வெங்காயம் – 5 லிருந்து 6, அலோ வேரா ஜெல் – 1 ஸ்பூன், வல்லாரை பொடி – 1 ஸ்பூன், இந்த மூன்று பொருட்களையும் போட்டு அப்படியே அரைத்தால் போதும். உங்களுக்கு ஒரு பேக் கிடைத்துவிடும். சின்ன வெங்காயத்தில் இருந்து தண்ணீர் விடும் அல்லவா. அப்படியே அரைத்து கொள்ளலாம். தேவைப்பட்டால் 1 ஸ்பூன் அளவு தண்ணீர் ஊற்றி இந்த பேக்கை தயார் செய்து கொள்ளுங்கள். இந்த பேக்கை உங்களுடைய மயிர்க் கால்களில் படும்படி தலை முழுவதுமாக அப்ளை செய்து, நன்றாக மசாஜ் செய்து கொடுக்க வேண்டும். அதன்பின்பு முன்நெற்றியில் எங்கெல்லாம் வழுக்கை இருக்கிறதோ அந்த இடத்தில் நன்றாக தடவிக் கொள்ளுங்கள். 20 லிருந்து 30 நிமிடம் போல இந்த பேக் அப்படியே தலையில் இருக்கட்டும். அதன் பின்பு நீங்கள் எப்போதும் போல ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு தலைக்குக் குளித்து விடலாம்.
 
3 மாதத்தில் முடி வளர்ச்சியில் வித்தியாசம் தெரியனுமா ? - இந்த டிப்சை மறக்காம ஃபாலோ பண்ணுங்க...!
 
வாரத்தில் ஒரு நாள் மேலே சொன்ன மூன்று எண்ணெய்களையும் சேர்த்து ஆயில் மசாஜ் எடுத்துக் கொள்ளுங்கள். வாரத்தில் ஒரு நாள் இந்த ஹேர் பேக்கை போடுங்க. (ஒரு நாள் ஆயில் மசாஜ் செய்து மூன்று நாள் கழித்தும் ஹேர் பேக் போட்டுக் கொள்ளலாம் தவறு கிடையாது.) நிச்சயமா மூன்றே மாதத்தில் உங்களுடைய முடி வளர்ச்சியில் வித்தியாசம் தெரியும். குறிப்பாக முன்நெற்றி வழுக்கையில் முடி வளரும். ட்ரை பண்ணி பாருங்க.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC: அடுத்த சிச்ஸரை அடித்த டிஎன்பிஎஸ்சி; 48 நாளிலேயே தேர்வு முடிவுகளை வெளியிட்டு அசத்தல்!
TNPSC: அடுத்த சிச்ஸரை அடித்த டிஎன்பிஎஸ்சி; 48 நாளிலேயே தேர்வு முடிவுகளை வெளியிட்டு அசத்தல்!
Annamalai Challenge Udhayanidhi: அண்ணாசாலைக்கு தனியா வர்றேன்..முடிஞ்சா தடுத்துப் பார்..உதயநிதிக்கு அண்ணாமலை பதில் சவால்...
அண்ணாசாலைக்கு தனியா வர்றேன்..முடிஞ்சா தடுத்துப் பார்..உதயநிதிக்கு அண்ணாமலை பதில் சவால்...
DMK vs BJP: அண்ணாமலை vs உதயநிதி மோதல்; இப்படியா பேசுறது? அநாகரீக, அடாவடி அரசியலுக்கு அடித்தளமா?
DMK vs BJP: அண்ணாமலை vs உதயநிதி மோதல்; இப்படியா பேசுறது? அநாகரீக, அடாவடி அரசியலுக்கு அடித்தளமா?
RRB Recruitment 2025: வாவ்... 32 ஆயிரம்+ பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு; ரயில்வே அசத்தல் அறிவிப்பு!
RRB Recruitment 2025: வாவ்... 32 ஆயிரம்+ பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு; ரயில்வே அசத்தல் அறிவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Marina Police vs Lady : ’’இருட்டுல என்ன பண்றீங்க?’’அநாகரிகமாக விசாரித்த போலீஸ் மெரினாவில் பெண் ஆவேசம்!Delhi New CM | டெல்லியின் புதிய முதல்வர்! பெண் MLA விற்கு அடித்த ஜாக்பாட்! யார் இந்த ரேகா குப்தா?Article 370 முதல் அயோத்தி வரை..  அமித்ஷாவின் RIGHT HAND !  யார் இந்த ஞானேஷ் குமார் ?K Pandiarajan : தவெக-வுக்கு தாவும் மாஃபா? திமுகவில் இணையும் OPS MLA? சூடுபிடிக்கும் தமிழக அரசியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC: அடுத்த சிச்ஸரை அடித்த டிஎன்பிஎஸ்சி; 48 நாளிலேயே தேர்வு முடிவுகளை வெளியிட்டு அசத்தல்!
TNPSC: அடுத்த சிச்ஸரை அடித்த டிஎன்பிஎஸ்சி; 48 நாளிலேயே தேர்வு முடிவுகளை வெளியிட்டு அசத்தல்!
Annamalai Challenge Udhayanidhi: அண்ணாசாலைக்கு தனியா வர்றேன்..முடிஞ்சா தடுத்துப் பார்..உதயநிதிக்கு அண்ணாமலை பதில் சவால்...
அண்ணாசாலைக்கு தனியா வர்றேன்..முடிஞ்சா தடுத்துப் பார்..உதயநிதிக்கு அண்ணாமலை பதில் சவால்...
DMK vs BJP: அண்ணாமலை vs உதயநிதி மோதல்; இப்படியா பேசுறது? அநாகரீக, அடாவடி அரசியலுக்கு அடித்தளமா?
DMK vs BJP: அண்ணாமலை vs உதயநிதி மோதல்; இப்படியா பேசுறது? அநாகரீக, அடாவடி அரசியலுக்கு அடித்தளமா?
RRB Recruitment 2025: வாவ்... 32 ஆயிரம்+ பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு; ரயில்வே அசத்தல் அறிவிப்பு!
RRB Recruitment 2025: வாவ்... 32 ஆயிரம்+ பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு; ரயில்வே அசத்தல் அறிவிப்பு!
Delhi CM Swearing In: டெல்லி முதல்வராக ரேகா குப்தா, 6 கேபினட் அமைச்சர்கள் பதவியேற்பு...
டெல்லி முதல்வராக ரேகா குப்தா, 6 கேபினட் அமைச்சர்கள் பதவியேற்பு...
"புராணங்கள் உண்மையா? வரலாற்றை மாற்ற பாக்குறாங்க" மோடி அரசை விளாசிய பினராயி விஜயன்!
IND vs BAN: கேட்ச்சை விட்ட ரோகித்.. தண்ணி காட்டும் தெளகித்.. சிதறவிடும் ஜாகர் அலி
IND vs BAN: கேட்ச்சை விட்ட ரோகித்.. தண்ணி காட்டும் தெளகித்.. சிதறவிடும் ஜாகர் அலி
தைரியமிருந்தால் அண்ணாசாலை பக்கம் வரட்டும்: அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த உதயநிதி ஸ்டாலின்
தைரியமிருந்தால் அண்ணாசாலை பக்கம் வரட்டும்: அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த உதயநிதி ஸ்டாலின்
Embed widget