மேலும் அறிய

TNEB : உங்க பகுதியில் திடீர் மின்தடை? அப்போ இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க..!

மழை மற்றும் காற்றினால் இணைப்பு துண்டிக்கப்படும். இது போன்ற மின் தடை பிரச்னைகள் இரவு நேரங்களில் ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது  தெரியாத நிலை  உள்ளது.

இன்றிருக்கும் நவீன தொழில் நுட்பத்தின் உயிர் நாடியாக இருந்து வருகிறது மின்சாரம். மின் சார தேவை என்பது கிராம மற்றும் நகர் பகுதிகளில் அதன் தேவைக்கேற்ப மாறுபடும். அதேபோல மின்சார பணிகளில் ஈடுபடும் ஊழியர்களும் மிகுந்த பணிச்சுமைக்கும் ஆளாகின்றனர். அப்படி  அதிக பணிச்சுமையின் போது பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் ஏற்படும் மின் தடை சார்ந்த பல்வேறு பிரச்னைகளுக்கு மின்சாரத்துறை பணியாளர்களை அனுகுவதுண்டு. அப்படி வரும் புகார்களை மின்சாரத்துறை ஊழியர்கள் பல்வேறு பகுதிகளில் அலட்சியமாக செயல்படுவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளும் எழுந்து வருகிறது.

TNEB :  உங்க பகுதியில் திடீர் மின்தடை? அப்போ இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க..!

குறிப்பாக உங்களது வீடுகளிலோ, கடைகளிலோ இருக்கும் மின் இணைப்பு சில சமயங்களில் கம்பத்தில் பீஸ் போய் விடும். அல்லது மின் இணைப்பு விட்டு, விட்டு கிடைக்கும். மழை மற்றும் காற்றினால் இணைப்பு துண்டிக்கப்படும். இது போன்ற மின் தடை பிரச்னைகள் இரவு நேரங்களில் ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது  தெரியாத நிலை  உள்ளது.

இதையும் படிங்க : Annamalai on 2026 Election: தமிழ்நாட்டில் ரூ.2,500-க்கு மேல் மகளிர் உரிமைத் தொகை.. லீக்கான பாஜக தேர்தல் வாக்குறுதி..

பெரும்பாலும் நமக்கு தெரிந்தது EB அலுவலகம் சென்று எழுதி வைத்து விட்டு வரவேண்டும். அல்லது அப்பகுதி லைன்மேன் தெரிந்தவராக இருந்தால் அவரிடம் அழைத்து சொல்லுவீர்கள். உடனே வேலையாகும். அதுவும் கிராமங்களில் உள்ள வீடுகள் எவ்வளவு அவசரம் என்றாலும், பொழுது இறங்கிய பிறகே வந்து வேலையை செய்து கொடுத்து விட்டு செல்வார்கள்.

TNEB :  உங்க பகுதியில் திடீர் மின்தடை? அப்போ இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க..!

இப்பொழுது மின்சார வாரிய ஊழியர்களிடம் இப்படி எல்லாம் அலைய வேண்டியதில்லை. வேலையும் உடனே ஆகணும். அதுக்கு ஒரு நல்ல யோசனை உள்ளது தெரிந்து கொள்ளுங்கள். தமிழ்நாட்டில் எந்த மூலையில் இருந்தாலும்  மின்சார வாரியம் தொடர்பான அனைத்து சேவைகளுக்கான தொலைபேசி எண் : TN EB CUSTOMER CARE : 9498794987

இதையும் படிங்க : டெல்லியின் அடுத்த முதல்வர் ரேகா குப்தா.. பாஜகவின் அதே ஃபார்முலா.. ஓகே சொன்ன மோடி!

என்ற இந்த எண்ணுக்கு அழைத்து உங்கள் முழு மின் இணைப்பு எண்ணையும் தெரிவித்து உங்களுக்கு என்ன  புகாரோ அதை தெரிவித்தால் போதும். தெரிவித்து ஐந்து நிமிடத்தில் மாவட்ட தலைநகரிலிருந்து அழைத்து உங்கள் தேவை என்னவென்று கேட்கிறார்கள். அவர்கள் அழைத்த பத்து நிமிடத்தில் உள்ளூரில் உள்ள மின்சார வாரிய தலைமை ஊழியர் நம்மிடம் அழைத்துப் பேசுகிறார். இவர் அழைத்துப் பேசிய ஐந்து நிமிடத்தில் லைன்மேன் உங்களிடம் அழைத்துப் பேசுகிறார்.

TNEB :  உங்க பகுதியில் திடீர் மின்தடை? அப்போ இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க..!

அரை மணி நேரத்தில் அனைத்து வேலையும் முடிந்து விடும். அனைத்து வேலையும் முடிந்த பிறகு மீண்டும் மாநிலத் தலைநகர் சென்னையிலிருந்து சேவை மைய ஊழியர் அழைத்து மின்சார வாரிய ஊழியர் நம்மிடம் செய்த வேலைகள் குறித்து தகவல் கேட்ட பிறகே புகாரை முடித்து வைக்கிறார்கள். இந்த மின்சார வாரிய சேவை மைய தொடர்பு எண், மின் இணைப்பை சரி செய்வதற்கு மட்டுமல்ல, வீடுகளின் மேல் செல்லும் லைனை மாற்றி போடுதல் மற்றும் கம்பத்தை மாற்றி போடுதல், பழுதடைந்த கம்பம், புதிய இணைப்பு, தற்காலிக இணைப்பு உட்பட அனைத்து மின்சார வாரிய சேவைகளை பெறலாம்.  இந்த சேவை மையத்தின் மூலமாக சேவைகளை பெற்றாலே யாரும் பணம் கேட்பதும் இல்லை. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS ADMK: நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Divyabharathi: கோட் படத்தில் ஆபாச பேச்சு, இயக்குனரின் அநாகரீகம்? உதவாத நடிகர் - திவ்யபாரதி குற்றச்சாட்டு
Divyabharathi: கோட் படத்தில் ஆபாச பேச்சு, இயக்குனரின் அநாகரீகம்? உதவாத நடிகர் - திவ்யபாரதி குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS ADMK: நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Divyabharathi: கோட் படத்தில் ஆபாச பேச்சு, இயக்குனரின் அநாகரீகம்? உதவாத நடிகர் - திவ்யபாரதி குற்றச்சாட்டு
Divyabharathi: கோட் படத்தில் ஆபாச பேச்சு, இயக்குனரின் அநாகரீகம்? உதவாத நடிகர் - திவ்யபாரதி குற்றச்சாட்டு
Honda Car: பொறுத்தது போதும்.. சர்வதேச மாடலை இறக்கிட வேண்டியது தான் - ஹோண்டாவின் 4 புதிய கார்கள்
Honda Car: பொறுத்தது போதும்.. சர்வதேச மாடலை இறக்கிட வேண்டியது தான் - ஹோண்டாவின் 4 புதிய கார்கள்
EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
SETC Special Buses: வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
Sundar Pichai: ‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
Embed widget