Dindigul: ஆயுத பூஜைக்காக குவிக்கப்பட்ட வாழைதார்கள்.. செவ்வாழை ஒரு தார் ரூ 1300 வரை விற்பனையா..?
வத்தலக்குண்டில் ஆயுத பூஜை விற்பனைக்கு ஆயிரக்கணக்கில் குவிக்கப்பட்ட வாழை தார்கள்செவ்வாழை ஒரு தார் ரூபாய் 1300 வரை விற்பனையானது.
![Dindigul: ஆயுத பூஜைக்காக குவிக்கப்பட்ட வாழைதார்கள்.. செவ்வாழை ஒரு தார் ரூ 1300 வரை விற்பனையா..? Thousands of banana tars piled up for Ayudha Puja sale Mars 1300 per tar Dindigul: ஆயுத பூஜைக்காக குவிக்கப்பட்ட வாழைதார்கள்.. செவ்வாழை ஒரு தார் ரூ 1300 வரை விற்பனையா..?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/21/7c6254066f0f68f8603fe1db49be74011697898611759739_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கல்விக்கு அதிபதியாக இருப்பவர் சரஸ்வதி என்று நம்பப்படுகிறது. விஜய தசமி நாளில் சரஸ்வதியை வழிபட்டு முதன்முதலில் படிப்பை தொடங்கும் ‘வித்யாரம்பம்’ நிகழ்வுகள் நடைபெறும். முந்தைய நாள் ஆயுத பூஜை. ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்ற சொல்லாடல் இருக்கிறது இல்லையா. ஆம். தொன்மையான விசயங்களில் ஒன்று தொழில் செய்வதற்கு, உயிர் வாழ்வதற்கு ஆதாரமாக இருக்கும் ஆயுதங்களை பூஜித்து வழிபடுவது. இது பழங்காலத்தில் இருந்தே வழக்கமாக உள்ளது.
இந்த நிலையில் பூஜை பொருட்கள் மற்றும் பூஜைக்கு தேவைப்படும் பொருட்கள் அதிகளவில் விற்பனையாகி வருகிறது. பூஜை பொருட்களில் முக்கியத்துவம் பெறும் பொருட்களில் வாழைப்பழமும் உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் வாழைத்தார் விற்பனைக்கு என்று தனியாக சந்தைகள் செயல்பட்டு வருகின்றது. வாரம் இருமுறை செயல்படும் இந்த சந்தைகளில் தேனி, திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் விளைவிக்கப்படும் வாழைத்தார்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்நிலையில் வரும் ஆயுத பூஜை திருநாளை யொட்டி விவசாயிகளால் அதிகப்படியான வாழைத்தார்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.
இருப்பினும் தேவை அதிகமாக இருந்த காரணத்தினால் வியாபாரிகள் வாழைத்தார்களை போட்டி போட்டு ஏலத்தில் எடுத்தனர். வரத்து அதிகம் இருந்த போதிலும் ஒவ்வொரு வாழைத்தார்களின் தன்மைக்கு ஏற்ப போதிய விலை கிடைத்தது. செவ்வாழை தார் ஒன்று ரூபாய் 300 முதல் ரூபாய் 1300 வரை விற்பனையான. துரஸ்தாளி தார் ஒன்று ரூபாய் 200 முதல் 800 வரை விற்பனையானது. கற்பூரவல்லி தார் ஒன்று ரூபாய் 150 முதல் ரூபாய் 600 வரை விற்பனையானது. இதேபோல் பூவன் தார் ஒன்று ரூபாய் 100 முதல் ரூபாய் 500 வரை விற்பனையானது .
Omni Buses: அதிக கட்டணம் வசூலித்த 102 ஆம்னி பேருந்துகள்.. போக்குவரத்து துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!
இதே போல் நாழிப்பூவன் மற்றும் ஒட்டு நாடு வாழைத்தார்கள் ரூபாய் 50 முதல் ரூபாய் 250 வரை விற்பனை செய்யப்பட்டது. வத்தலக்குண்டு வாழைத்தார் சந்தையில் இருந்து சில்லறை விற்பனைக்காக சுமார் 35 ஆயிரம் வார்த்தைகள் ஒரே நாளில் விற்பனையாகி ஏற்றுமதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)