விஜயுடன் சேர வாய்ப்பு உள்ளதா? பொறுத்திருந்து பாருங்கள் - ட்விஸ்ட் வைத்த திருமாவளவன்
என்றைக்கு தமிழக மக்கள் விடுதலை சிறுத்தை கட்சி மீது நம்பிக்கை வைக்கிறார்களோ அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஆட்சி அதிகாரத்தை ஒப்படைப்பார்கள்.
ஆட்சி அதிகாரம் என்பது மக்கள் அளிக்கும் தீர்ப்பு - என்றைக்கு தமிழக மக்கள் விடுதலை சிறுத்தை கட்சி மீது நம்பிக்கை வைக்கிறார்களோ அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஆட்சி அதிகாரத்தை ஒப்படைப்பார்கள் என்று பழனியில் திருமாவளவன் பேட்டியளித்தார்.
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வருகை தந்தார். முன்னதாக பழனி முருகன் கோயிலுக்கு சென்று திருமாவளவன் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து மலை அடிவாரத்தில் உள்ள புலிப்பாணி ஆசிரமத்தில் சென்று தொட்டிச்சி அம்மன் மற்றும் புலிப்பாணி ஜீவசமாதியில் வணங்கினார். திருமாவளவனுக்கு பழனி போக ஆதீனம் சிவானந்த புலிப்பாணி சுவாமிகள் வரவேற்று பிரசாதங்களை வழங்கினார். தொடர்ந்து பத்திரிகையாளர்களை திருமாவளவன் சந்தித்து பேசினார்.
அமைச்சர் எ.வ.வேலு சென்ற விமானம் அவசரம் அவசரமாக தரையிறக்கம் - என்னாச்சு?
ஆட்சி அதிகாரம் என்பது மக்கள் அளிக்கும் தீர்ப்பு- என்றைக்கு தமிழக மக்கள் விடுதலை சிறுத்தை கட்சி மீது நம்பிக்கை வைக்கிறார்களோ அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஆட்சி அதிகாரத்தை ஒப்படைப்பார்கள், ஆதவ் அர்ஜுனா அவருடைய விருப்பத்தை தெரிவித்துள்ளார் ஆட்சி அதிகாரம் என்பது உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் மக்கள் அழைக்கும் அங்கீகாரம் என தொல்.திருமாவளவன் தெரிவித்தார். மேலும் அன்புமணி ராமதாஸ், ரேஷன் அரிசி கடத்தப்படுவது சம்பந்தமாக தெரிவித்துள்ள கருத்திற்கு பதில் அளித்த திருமாவளவன், அன்புமணி ராமதாஸ் எதிர்க்கட்சி என்ற வகையில் விமர்சனம் செய்து உள்ளாரா ? எந்த ஆதாரத்தின் அடிப்படையில் ரேஷன் அரிசி கடத்தப்படுவது குறித்து தெரிவித்துள்ளார் என்பது தெரியவில்லை என்றும், ரேஷன் அரிசி கடத்தப்படுவது சம்பந்தமாக ஆதாரங்கள் இருப்பின் அதனை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஓசூரில் வழக்கறிஞர் படுகொலை மற்றும் ஆசிரியை படுகொலை சம்பந்தமாக கேட்ட கேள்விக்கு பதில் அளித்த திருமாவளவன் எதிர்பாராமல் நடந்த சம்பவம் மிகுந்த வருத்தம் அளிக்கிறது. வருங்காலத்தில் இதுபோன்ற துயர் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Jasprit Bumrah: பாண்டியா மீதான கடுப்பு.. காரணம் இது தானா.. மெளனம் கலைத்த பும்ரா..
பழனியில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் பள்ளிகள் கல்லூரிகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் தகுதியான ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், நீதிமன்ற ஆணை என்பதை காரணம் காட்டி பழனி மலை அடிவாரத்தில் வியாபாரிகள் பாதிக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது, பழனி மேற்க ரத வீதியில் அருந்ததியர் சமூகத்திற்கு சொந்தமான மடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் 2026 இல் விஜயுடன் சேர வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கும் பொறுத்திருந்து பாருங்கள், ஜார்கண்ட்டில் தேர்தல் கருத்துகணிப்புகள் பா.ஜ.க வெற்றி பெரும் என்ற தகவல்களுக்கு பதில் தெரிவித்த திருமாவளவன் கருத்துகணிப்புகள் பெரும்பாலும் பொய்த்து போய்ருக்கின்றது என்றார்