மேலும் அறிய

Gold Rate Dec.16th: கொஞ்சமாச்சும் கருணை காட்டுனியே.! சவரனுக்கு ரூ.1,320 குறைந்த தங்கத்தின் விலை - இன்றைய விலை என்ன.?

தங்கத்தின் விலை நேற்று ஒரு லட்சம் ரூபாயை தாண்டி பெரும் அதிர்ச்சியை கொடுத்த நிலையில், இன்று ஒரே நாளில் 1,320 ரூபாயை குறைந்து சற்று கருணை காட்டியுள்ளது. இன்றைய விலையை பார்க்கலாம்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று இருமுறை உயர்ந்து, சவரன் ஒரு லட்சம் ரூபாயை தாண்டியதால் பொதுமக்கள் மிகுந்த கவலையடைந்தனர். தங்கம் விலை தொடர்ந்து அதிகரிக்குமோ என பயந்த நிலையில், இன்று காலையில் அதிரடியாக சவரனுக்கு 1,320 ரூபாய் குறைந்துள்ளது. தங்கத்தின் தற்போதைய விலை என்ன என்பதை பார்க்கலாம்.

சவரன் ஒரு லட்சம் ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை

தங்கத்தின் விலை படிப்படியாக உயர்ந்துகொண்டே வந்து, நேற்று சவரன் ஒரு லட்சம் ரூபாயை தாண்டியது. கடந்த 9-ம் தேதி சரியாக 96,000 ரூபாயாக இருந்த நிலையில், 10-ம் தேதி சற்று விலை உயர்ந்து, ஒரு கிராம் 12,030 ரூபாய்க்கும் ஒரு சவரன் 96,240 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. 11-ம் தேதி மீண்டும் விலை உயர்ந்து, ஒரு கிராம் 12,050 ரூபாயாகவும், ஒரு சவரன் 96,400 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், 12-ம் தேதி காலை அதிரடியாக கிராமிற்கு 200 ரூபாயும், சவரனுக்கு 1,600 ரூபாயும் உயர்ந்தது தங்கததின் விலை. அதன்படி, காலையில் ஒரு கிராம் 12,250 ரூபாயாகவும், ஒரு சவரன் சரியாக 98,000 ரூபாயாகவும் விற்பனையானது. தொடர்ந்து, மாலையில் மீண்டும் விலை உயர்ந்து உச்சத்திற்கு சென்றது. அதன்படி, கிராமிற்கு மேலும் 120 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 12,370 ரூபாய்க்கு எகிறியது. சவரனுக்கு மேலும், 960 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு சவரன் 98,960 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது.

13, 14 தேதிகளில் அதே விலையில் நீடித்த தங்கம், நேற்று காலை மாலை என இரு வேளைகளிலும் விலை உயர்ந்து, ஒரு லட்சம் ரூபாயை தாண்டியது. அதன்படி, காலை கிராமிற்கு 90 ரூபாய் விலை உயர்ந்த தங்கம், ஒரு கிராம் 12,460 ரூபாயை எட்டியது. சவரனுக்கு 720 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு சவரன் 99,680 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இந்நிலையில், பிற்பகலில் கிராமிற்கு மீண்டும் 55 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 12,515 ரூபாய்க்கும், சவரனுக்கு 440 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு சவரன் 1,00,120 ரூபாய்க்கு விற்பனையானது.

இன்று காலையிலேயே சவரனுக்கு ரூ.1,320 குறைந்த தங்கம் விலை

தங்கம் விலை ஒரு லட்சம் ரூபாயை தாண்டியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்திருந்த நிலையில், அதற்கு சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக, இன்று சவரனுக்கு 1,320 ரூபாயை குறைந்துள்ளது.

அதன்படி, கிராமிற்கு 165 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 12,350 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,320 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 98,800 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

வெள்ளி விலையும் ரூ.4 குறைந்தது

இதேபோல் வெள்ளி விலையும் கிராமிற்கு 4 ரூபாய் குறைந்துள்ளது. கடந்த 9-ம் தேதி கிராம் 199 ரூபாயாக இருந்த வெள்ளி, 10-ம் தேதியன்று 207 ரூபாயாக அதிரடியாக உயர்ந்தது. தொடர்ந்து, 11-ம் தேதி மீண்டும் விலை உயர்ந்து ஒரு கிராம் 209 ரூபாய்க்கு விற்கப்பட்டது. 12-ம் தேதி கிராமிற்கு அதிரடியாக 7 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 216 ரூபாயை எட்டியது.

பின்னர், 13-ம் தேதி 6 ரூபாயை விலை குறைந்து, ஒரு கிராம் 210 ரூபாய்க்கு விற்கப்பட்டது. 14-ம் தேதியும் அதே விலையில் நீடித்தது. இந்நிலையில், நேற்று காலை கிராமிற்கு 3 ரூபாயை விலை உயர்ந்து, ஒரு கிராம் 213 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், பிற்பகலில் மீண்டும் 2 ரூபாயை விலை உயர்நது, ஒரு கிராம் வெள்ளி 215 ரூபாய்க்கு விற்பனையானது.

இந்த நிலையில், இன்று காலை கிராமிற்கு 4 ரூபாய் விலை குறைந்து ஒரு கிராம் 211 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

 

 

தலைப்பு செய்திகள்

Gold and silver rate today : தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்தது.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.!! நகைப்பிரியர்கள் குஷி
தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்தது.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.!! நகைப்பிரியர்கள் குஷி
Gold Rate June 26th: ஒரே நாளில் இரு முறை ஷாக் கொடுத்த தங்கம், வெள்ளி; மாலையிலும் விலை உயர்வு; தற்போது விலை என்ன.?
ஒரே நாளில் இரு முறை ஷாக் கொடுத்த தங்கம், வெள்ளி; மாலையிலும் விலை உயர்வு; தற்போது விலை என்ன.?
Gold rate today : ஒரே நாளில் ரூ.5000 உயர்ந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு ஷாக் - இன்றைய விலை என்ன.?
ஒரே நாளில் ரூ.5000 உயர்ந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு ஷாக் - இன்றைய விலை என்ன.?
Passport Price Hike: அடுத்த ஷாக்..! பாஸ்போர்ட் கட்டணத்தை உயர்த்தி அரசு அறிவிப்பு - எந்த பிரிவிற்கு எவ்வளவு?
அடுத்த ஷாக்..! பாஸ்போர்ட் கட்டணத்தை உயர்த்தி அரசு அறிவிப்பு - எந்த பிரிவிற்கு எவ்வளவு?

வீடியோ

TVK Reels Viral Video : எம்.எல்.ஏ CHAIR-ல் தவெகவினர்! தொடரும் ரீல்ஸ் அட்டூழியம்.. வைரல் வீடியோ
CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: அந்த துயரத்திற்கு பிறகு! அடுத்த வாரம் கரூர் செல்லப்போகும் முதலமைச்சர் விஜய்?
CM Vijay: அந்த துயரத்திற்கு பிறகு! அடுத்த வாரம் கரூர் செல்லப்போகும் முதலமைச்சர் விஜய்?
Minister Ghilli Sarath : ’போதைப்பொருள் புகார்’ தவெக அமைச்சர் சரத் நீக்கம்..? – தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய் அணி..!
’போதைப்பொருள் புகார்’ தவெக அமைச்சர் சரத் நீக்கம்..?
பாக்யராஜூக்கு நிம்மதியாக அஞ்சலி கூட செலுத்த விடல...மீடியாவின் இரக்கமற்ற செயல்..ராதிகா வேதனை
பாக்யராஜூக்கு நிம்மதியாக அஞ்சலி கூட செலுத்த விடல...மீடியாவின் இரக்கமற்ற செயல்..ராதிகா வேதனை
Udhayanidhi Stalin: எம்எல்ஏக்கள் purchase; Extreme ஆன ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல்- உக்கிரமான உதயநிதி
Udhayanidhi Stalin: எம்எல்ஏக்கள் purchase; Extreme ஆன ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல்- உக்கிரமான உதயநிதி
Upcoming Smartphones in July: ஸ்மார்ட்போன் வாங்கப் போறீங்களா.? சாம்சங் முதல் மோட்டோரோலா வரை; ஜூலையில் வெளியாகும் பவர்வுல் போன்கள்
ஸ்மார்ட்போன் வாங்கப் போறீங்களா.? சாம்சங் முதல் மோட்டோரோலா வரை; ஜூலையில் வெளியாகும் பவர்வுல் போன்கள்
சூர்யாவுக்கு ஆரசியல் வரும் எண்ணம் இல்லை..நற்பணி இயக்கம் அறிக்கை
சூர்யாவுக்கு ஆரசியல் வரும் எண்ணம் இல்லை..நற்பணி இயக்கம் அறிக்கை
23 மாதக் குழந்தை மீது சக குழந்தையே கொடூர தாக்குதல்; 25 இடங்களில் கடி- 14 நிமிட பயங்கரம்!
23 மாதக் குழந்தை மீது சக குழந்தையே கொடூர தாக்குதல்; 25 இடங்களில் கடி- 14 நிமிட பயங்கரம்!
M.R. Vijayabhaskar Political Journey : செந்தில் பாலாஜிக்கே சவால்.. கரூரையே கண்ட்ரோல் செய்தவர் - யார் இந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர்?
செந்தில் பாலாஜிக்கே சவால்.. கரூரையே கண்ட்ரோல் செய்தவர் - யார் இந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர்?
Embed widget