கந்தசஷ்டி திருக்கல்யாண வைபவம்.... 3 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போன மாங்கல்யம் தேங்காய்
திருமாங்கல்யம் வைக்கப்பட்ட ஒற்றைத் தேங்காய் ஏலம் கேட்கப்பட்டதில் ரூபாய் 6001 தொகையில் தொடங்கிய ஏலம் படிப்படியாக ஒரு உயர்ந்து ஒரு லட்சத்தை தாண்டியது.
போடி அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவினை முன்னிட்டு திருக்கல்யாண வடிவம் நிகழ்ச்சி நடைபெற்றது. திருக்கல்யாணத்தில் மாங்கல்யம் சுத்தி வைக்கப்பட்ட தேங்காய் 3 லட்சத்தி 3000 ரூபாய்க்கு ஏலம் போனது.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகரின் மையப்பகுதியில் அமைந்தது அருள்மிகு பாலசுப்ரமணியம் திருக்கோவில் சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு பழனியில் இருந்து பிடி மண் எடுத்து வரப்பட்டு போடிநாயக்கனூர் ஆண்ட ஜமீன்தார்களால் கட்டப்பட்டதாக கூறப்படும். இந்த திருக்கோவில் தற்போது இந்து அறநிலைத்துறை நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இங்கு கந்த சஷ்டி சூரசம்கார விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. சூரசம்காரம் நிறைவுற்ற நிலையில், முருகனுக்கும் இந்திரனுடைய மகளான தேவயானிக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.
உலகமே அழிந்திருக்கிறது; ஆலமரம் அழியாதா? - உதயநிதியை அட்டாக் செய்த செல்லூர் ராஜூ
கந்தசஷ்டி கலச வேல்வியில் கும்ப கலசத்தில் வைக்கப்பட்டுள்ள தேங்காயில் திருக்கல்யாண திருமாங்கல்யம் வைக்கப்பட்டு பூசிக்கப்படுகிறது. திருக்கல்யாணம் வைபவம் நிறைவடைந்ததும் திருமாங்கல்யம் வைக்கப்பட்டுள்ள ஒற்றைத் தேங்காய் ஏலத்தில் விடப்படுகிறது. இந்த ஆண்டு திருக்கல்யாண வைபவம் நிறைவு பெற்றதும் திருமாங்கல்யம் வைக்கப்பட்ட ஒற்றைத் தேங்காய் ஏலம் கேட்கப்பட்டது. ரூபாய் 6001 தொகையில் தொடங்கிய ஏலம் படிப்படியாக ஒரு உயர்ந்து ஒரு லட்சத்தை தாண்டியது.
Breaking News LIVE 8th Nov 2024: கங்குவா படத்தை வெளியிடத் தடையில்லை - சென்னை உயர்நீதிமன்றம்
தண்டித்த ஆசிரியர்; விபரீத முடிவெடுத்த பள்ளி மாணவர் - மயிலாடுதுறையில் அதிர்ச்சி
மேலும் பக்தர்கள் ஏலம் கேட்பதில் ஆர்வமாக தொகையை அதிகரித்து சென்றதில் ஒரு லட்சம் இரண்டு லட்சம் ஆக மாறி 2 லட்சம் மூன்று லட்சமாக மாறி நிறைவாக ஒற்றைத் தேங்காய் ரூபாய் 3 லட்சத்து 3 ஆயிரத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது. போடிநாயக்கனூர் ரங்கநாதபுரத்தைச் சேர்ந்த முருகேசன் தம்பதியினர் மூன்று லட்சத்து 3 ஆயிரத்திற்கு ஒற்றை தேங்காயை ஏலத்தில் எடுத்தனர். கடந்த கந்த சஷ்டி விழா நிறைந்து நடைபெற்ற முருகன் திருக்கல்யாணம் ஏலம் விடப்பட்ட ஒற்றை தேங்காயின் ஏலத்தொகை ரூபாய் 36 ஆயிரத்திற்கு ஏலம் கேட்டு எடுக்கப்பட்டது இந்த ஒரே தேங்காய் தற்போது மூன்று லட்சத்து 3 ஆயிரத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டது மிக அதிகபட்ச உச்சபட்ச தொகையாகும்.
சென்ற ஆண்டு கந்த சஷ்டி விழாவில் திருக்கல்யாணத்தில் மாங்கல்ய சுற்றப்பட்ட தேங்காய் 68,000 ரூபாய்க்கு ஏழு போனது குறிப்பிடத்தக்கதாகும் . சுவாரசியமாக நடைபெற்ற இந்த ஏலத்தில் பக்தர்கள் அனைவரும் ஏலத் தொகையை மூன்று லட்சத்தி மூன்று ஆயிரம் தொகை என்பதை அறிந்து மெய்சிலிர்த்து அரோகரா கோஷமிட்டு முருகப் பெருமானை வணங்கி வழிபட்டனர்.