மேலும் அறிய

Theni: முல்லை பெரியாறு அணையிலிருந்து முதல் போக நெல் சாகுபடிக்கு இன்று முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயத்திற்கு முல்லை பெரியாறு அணையிலிருந்து முதல் போக நெல் சாகுபடிக்கு இன்று முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு.

தென்மாவட்டங்களின் உயிர் நாடியாக விளங்குகிறது முல்லைப் பெரியாறு அணை. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு முக்கிய நீர் ஆதாரமாக முல்லை பெரியாறு அணை விளங்கி வருகிறது. முல்லைப் பெரியாறு அணை நீரை கொண்டு தேனி மாவட்டத்தில் 14 ஆயிரத்தி 707 ஏக்கர் நிலங்களில் இருபோக நெல் சாகுபடி விவசாயம் நடைபெற்று வருகிறது. முல்லை பெரியாற்று நீரைக்கொண்டு விளை நிலங்களுக்கு, ஆண்டு தோறும் முதல் போக சாகுபடி நாற்று நடவுக்காக ஜூன் முதல் வாரம் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பது வழக்கம்.

Theni:  முல்லை பெரியாறு அணையிலிருந்து முதல் போக நெல் சாகுபடிக்கு இன்று முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு

இந்த ஆண்டு மழை பருவ மழை மற்றும் கோடை மழை போதுமான அளவு பெய்யாததால் அனணயில் தண்ணீர் மட்டம் குறைந்தே காணப்படுகிறது. முதல்போக விவசாயத்திற்கு ஜூன் முதல்நாள் தண்ணீர் திறக்க விவசாயிகள் முதல்வருக்கு கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இன்று முதல் முல்லைப்பெரியாறு அணையிலிருந்து முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையடுத்து இன்று காலை மதியம் 3 மணிக்கு முல்லைப்பெரியாறு அணையிலிருந்து விவசாயத்திற்காக தண்ணீர் திறக்கும்  நிகழ்வு நடைபெற்றது. கேரள மாநிலம் குமுளி அருகே உள்ள தேக்கடியில் தமிழக பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே உள்ள தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும் தலைமை  மதகு பகுதியில் நடைபெற்றது.

Theni:  முல்லை பெரியாறு அணையிலிருந்து முதல் போக நெல் சாகுபடிக்கு இன்று முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி சுரங்க வாய்கால் பகுதியிலுள்ள ஷட்டரை இயக்கி, அணையின் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தை பெறுத்து 120 நாட்களுக்கு சாகுபடிக்காக 200 கன அடி நீரும், குடிநீருக்கு 100 கன அடி நீரும் சேர்த்து 300 கன அடியாக தண்ணீரை திறந்து விட்டார். விவசாயிகள் அனைவரும் தமிழகப்பகுதிக்கு வரும் தண்ணீரில் மலர்தூவி வரவேற்றனர்.

Theni:  முல்லை பெரியாறு அணையிலிருந்து முதல் போக நெல் சாகுபடிக்கு இன்று முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு

மேலும் விவசாயிகளிடம் கூறுகையில் குறுகிய கால பயிர்களை நடவு செய்தும், அணையில் போதுமான நீர்மட்டம் இல்லாத நிலையில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என அமைச்சர் கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில், தேனி மாவட்ட ஆட்சியர்  சஜீவனா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கம்பம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ ராமகிருஷ்ணன் விவசாயிகள் உட்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். தற்போதைய நிலவரப்படி  முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 118 அடியாக உள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!

Breaking News LIVE, June 5: திடீரென எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பு விடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் - என்ன காரணம்?

Kohli Rohit: விண்ணை பிளந்த முழக்கம் - கோப்பையுடன் கோலி & ரோகித் செய்த சம்பவம், ரசிகர்கள் குஷி - வைரல் வீடியோ

கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
Breaking News LIVE, June 5: திடீரென எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பு விடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் - என்ன காரணம்?
Breaking News LIVE, June 5: திடீரென எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பு விடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் - என்ன காரணம்?
Kohli Rohit: விண்ணை பிளந்த முழக்கம் - கோப்பையுடன் கோலி & ரோகித் செய்த சம்பவம், ரசிகர்கள் குஷி - வைரல் வீடியோ
Kohli Rohit: விண்ணை பிளந்த முழக்கம் - கோப்பையுடன் கோலி & ரோகித் செய்த சம்பவம், ரசிகர்கள் குஷி - வைரல் வீடியோ
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
Rasipalan: கும்பத்துக்கு பக்தி, மீனத்துக்கு மகிழ்ச்சி -  உங்கள் ராசிக்கு என்ன பலன் தெரியுமா?

பக்தியோட சென்ற சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.. முதல்வருக்கு பறந்த புகார்! சிக்கிய பாதிரியார்!

Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!

எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு

Embed widget