மேலும் அறிய

Flight Ticket: இனி மொத்த காசும் போகாது..! விமான டிக்கெட் கேன்சல் செய்வதில் மாற்றம் - எவ்வளவு திரும்ப கிடைக்கும்?

Flight Ticket Cancellation: முன்பதிவு செய்த விமான டிக்கெட்டை கடைசி நேரத்தில் ரத்து செய்தால், இனி மொத்த கட்டணத்தையும் இழக்க வேண்டிய கட்டாயம் இருக்காது என தகவல் வெளியாகியுள்ளது.

Flight Ticket Cancellation: முன்பதிவு செய்த விமான டிக்கெட்டை கடைசி நேரத்தில் ரத்து செய்தால், புதிய நடைமுறையை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாம்.

விமான டிக்கெட் ரத்து விதியில் மாற்றம்:

விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துவிட்டு புறப்படுவதற்கு சில மணி நேரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், சில தவிர்க்க முடியாத காரணங்களால் அதனை ரத்து செய்தால், மொத்த கட்டண தொகையையும் இழக்க வேண்டியுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் நிதி இழப்புகளை எதிர்கொள்கின்றனர். இதனை தவிர்க்கும் பொருட்டு, விமான டிக்கெட்டுடன் சேர்த்து பயண காப்பீடு நடைமுறையை அமலுக்கு கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாம். அடுத்த 2-3 மாதங்களில் அமலுக்கு வர வாய்ப்புள்ள இந்த திட்டத்தால், கடைசி நேரத்தில் டிக்கெட்டை ரத்து செய்தாலும் சுமார் 80 சதவிகிதம் வரை கட்டண தொகையை பயனர்கள் திரும்பப் பெறமுடியும் என கூறப்படுகிறது.

தற்போதைய நடைமுறை என்ன?

தற்போதைய நடைமுறையின்படி, விமானம் புறப்படுவதற்கு மூன்று மணி நேரங்களுக்கு முன்பாக டிக்கெட் ரத்து செய்யப்பட்டால், அதற்கான கட்டணத்தொகையை திரும்ப பயணிக்கு செலுத்தும் வசதி என்பது கிடையாது. ஒருவேளை தனது உடல்நிலை காரணமாகவே கடைசி நேரத்தில் டிக்கெட்டை ரத்து செய்ததாக பயணி முழுமயாக நிரூபித்தால், அவரது கட்டணம் முற்றிலுமாக திரும்ப வழங்கப்படும். ஆனால், அது முற்றிலும் நிறுவனத்தைச் சார்ந்த முடிவாகவே உள்ளது. இந்நிலையில் தான் விமான போக்குவரத்து துறை செயலாளர், டிக்கெட்டுடன் கூடிய பயண காப்பீட்டை நடைமுறைக்கு கொண்டு வருவது குறித்து, இந்திய விமான சேவை நிறுவனங்களுடன் ஆலோசித்து வருகிறாராம்.

டிக்கெட் ரத்து - ரீஃபண்டிற்கான காலக்கெடு

காப்பீட்டு நிறுவனங்களுடனான ஒப்பந்தத்தின் மூலம் விமான நிறுவனங்கள் பிரீமியத்தை ஏற்கின்றன. மறுபுறம், காப்பீடு என்பது பயணிகள் அதைத் தேர்வுசெய்தால் வாங்கக்கூடிய ஒரு கூடுதல் சேவையாகும். ஒவ்வொரு டிக்கெட்டிலும் சுமார் ரூ. 50 என்ற நியாயமான பிரீமியத் தொகை வசூலிக்கப்பட்டு, புறப்படும் நேரத்திற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பு வரை ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகளில் 80% வரை பணத்தைத் திரும்பப் பெற வழிவகுக்கும் என்பது ஆரம்பகட்ட மதிப்பீடுகளாக உள்ளது. பயணம் செய்ய முடியுமா என்ற நிச்சயமற்ற தன்மை, பின்னர் பணத்தை இழக்க நேரிடும் அல்லது பணத்தைத் திரும்பப் பெறுவதில் சிக்கலை எதிர்கொள்ள நேரிடும் என்ற பயம், பலர் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதைத் தவிர்ப்பதற்கு பெரிய காரணியாக உள்ளது. புதிய நடைமுறை அந்த அச்சத்திற்கான தீர்வாக அமையும் என நம்பப்படுகிறது.

தொடரும் சிக்கல்களுக்கான தீர்வு:

விமான நிறுவனங்களிடமிருந்து ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கான பணத்தை திரும்பப் பெறுவது பயணிகளிடையே ஒரு முக்கிய பிரச்னையாக மாறியுள்ளது. குறிப்பாக பயன்படுத்தப்படாத டிக்கெட்டுகளுக்கான பணத்தை திரும்பப் பெறுவதில் தாமதம்,  ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு எதிராக விமான நிறுவனங்கள் திருப்பிச் செலுத்தும் தொகையின் அளவு மற்றும் டிக்கெட் தொகையைத் திருப்பி கொடுக்காமல் குறிப்பிட்ட காலத்திற்கு அதே விமான நிறுவனத்தில் எதிர்கால பயணத்தின்போது டிக்கெட் வாங்க சலுகை ஆகியவை பிரச்னைகளாக நிலவுகிறது. இதனை உணர்ந்த விமான போக்குவரத்து துறை, புதிய காப்பீடு நடைமுறை மட்டுமின்றி, தற்போதைய பணத்தைத் திரும்பப் பெறும் விதிகளை பயணிகளுக்கு எளிதானதாக மாற்றும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளதாம்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?
PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
டெக் பிரியர்களுக்கு செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Embed widget