எம்பி ரவீந்திர நாத்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - தங்க தமிழ்செல்வன் வனத்துறையிடம் மனு
தேனி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் இன்று வனத்துறை அதிகாரி சமர்தாவிடம் புகார் மனுஒன்றை அளித்தார்.
பெரியகுளம் அருகே கைலாசபட்டி பகுதியில் தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் தோட்டத்தில் சமீபத்தில் சிறுத்தை இறந்த வழக்கில் தோட்டத்தில் கிடை அமத்தியவர் மற்றும் தோட்ட மேலாளர்கள் இருவர் என மூவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தோட்டத்தின் உரிமையாளர் ஓபி ரவீந்திரநாத் மீதும் வழக்கு பதிவு செய்யக்கோரி திமுக மாவட்ட செயலாளர் தங்க தமிழ் செல்வன் வனத்துறை அதிகாரியிடம் இன்று மனு அளித்தார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு லட்சுமிபுரம் சொர்க்கம் பகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மூத்த மகன் தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத்துக்கு சொந்தமான தோட்டத்தில் சோலார் வேலியில் சிறுத்தை சிக்கி உயிரிழந்த சம்பவத்தில் தோட்டத்தின் உரிமையாளரான ரவீந்திரநாத் மீது வழக்கு பதிவு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. தற்காலிகமாக ஆட்டுமந்தை அமைத்த அலெக்ஸ் பாண்டியன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்த சம்பவம் சர்ச்சை ஏற்படுத்தியது.
இதற்கு தமிழ்நாடு கால்நடை வளர்ப்பு சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ரவீந்திரநாத் தோட்டத்தில் சிறுத்தை வேளியில் சிக்கி இருந்த பகுதி மற்றும் சிறுத்தையை பிரேத பரிசோதனை செய்து எரிக்கப்பட்ட இடம் உள்ளவற்றை நேரில் பார்வையிட்டனர். கால்நடை வளர்ப்போர் சங்கத்தினர் சார்பாக கூறியபோது வனத்துறையினர் தங்களை தற்காத்துக் கொள்ள அப்பாவிகள் மீது பொய் வழக்கு பதிவு செய்து அடித்து துன்புறுத்தி சித்திரவதை செய்து ஒத்துக் கொள்ள வைத்ததாகவும், இது மனித உரிமை மீறல் என்றும் இது தொடர்பாக தமிழகம் முழுவதும் உள்ள கால்நடை வளர்ப்போர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.
இந்த சூழலில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத் குமாருக்கு சொந்தமான நிலத்தின் வேலியில் சிக்கி சிறுத்தை இறந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு ஆட்டுக் கிடை உரிமையாளர் அலெக்ஸ் பாண்டியன் என்பவரை கைது செய்திருந்தது. ரவீந்திரநாத் நிலத்தின் மேலாளர்களாக பணியாற்றும் தங்கவேல் மற்றும் ராஜவேல் ஆகிய மேலும் இருவரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை பின் அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஒப்படைத்து சிறையில் அடைத்தனர். நிலத்தின் உரிமையாளர் ரவீந்திரநாத் மீதும் வன உரிமைச்சட்டப்படி வழக்கு பதிவு செய்யவுள்ளதாகவும் வன அலுவலர் தெரிவித்திருந்த நிலையில் தற்போது வரையில் தேனி எம்பி ரவீந்திர நாத் மீது வழக்குபதிவு செய்யாமல் இருந்ததால்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேனி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்கதமிழ்செல்வன் தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத்துக்கு சொந்தமான தோட்டத்தில் சிறுத்தை உயிரிழந்துள்ளது. அதனால் சிறுத்தை உயிரிழப்பிற்கு தோட்ட உரிமையாளரும் காரணம் எனக் கூறி தோட்டத்தின் உரிமையாளர் ரவீந்திரநாத் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி தேனி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் இன்று வனத்துறை அதிகாரி சமர்தாவிடம் புகார் மனு ஒன்றை அளித்து தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்