பாறை மீது மோதிய ரோப் கார்...பழனி முருகன் கோயிலில் பரபரப்பு...!
பழனி மலை முருகன் கோயிலுக்கு செல்லும் ரோப் கார் அதிக பாரம் காரணமாக பாறை மீது மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.
![பாறை மீது மோதிய ரோப் கார்...பழனி முருகன் கோயிலில் பரபரப்பு...! Theni: rope car service going to Palani Hill Murugan temple hit a rock due to heavy load causing a stir பாறை மீது மோதிய ரோப் கார்...பழனி முருகன் கோயிலில் பரபரப்பு...!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/14/8188bcb28bb53093c1c7be7862b67feb1665753407503193_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு செல்லும் பக்தர்கள், படிப்பாதை, யானை பாதை, மின்இழுவை ரயில், ரோப் கார் சேவை மூலமாக மலைக்கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ரோப்கார் சேவை மாதத்திற்கு ஒருநாளும் வருடத்திற்கு ஒரு மாதமும் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
5 மடங்கு பெரியதாகும் சென்னை... விரிவாக்கத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஒப்புதல்
ரோப்கார் சேவை காலை 7 மணிக்கு துவங்கி இரவு 9 மணி வரை செயல்படுகிறது. ஒரு பெட்டிக்கு நான்கு பேர் விதம் நான்கு பெட்டிகளில் 16 பேர் பயணம் செய்யலாம். இந்நிலையில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நேற்று மதியம் நவபாஷாண சிலை பாதுகாப்பு குழுவினர் திருக்கோயில் தலைமை அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது. பின்னர் உச்சிகால பூஜையில் தரிசனம் செய்வதற்காக குழுவினர் மலைக்கு சென்றனர்.
பெண் காவலருடன் நெருக்கம்.....டிஎஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு அதிரடி மாற்றம்
இவர்கள் மலைக்கோயிலுக்கு ரோப்காரில் சென்ற அடுத்த 20 நிமிடத்தில் பக்தர்கள் மலைக்கோயிலுக்கு சென்ற போது அதிகபாரம் ஏற்றி சென்றதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ரோப் கார் பாறையில் மோதியதாகவும் கூறப்படுகிறது. இதனால் பாதி வழியில் நின்றதையடுத்து ரோப் கார் ஊழியர்கள் உடனடியாக பார்வையிட்டனர். இதனையடுத்து பெட்டிகளில் சிறிய சேதம் ஏற்பட்டது. இதனால் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Sivakarthikeyan: அடுத்தடுத்து வெளியான பிரின்ஸ் பட அப்டேட்...! குஷியில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்
பழனி கோயிலுக்கு 15 பேர் கொண்ட நவபாசன சிலை பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டு மலைக்கோயிலுக்கு சென்ற சிறிது நேரத்திலேயே ரோப்கார் பாறையில் மோதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் தான் பழைய பெட்டிகள் நீக்கபட்டு புதிய பெட்டிகள் பொருத்தபட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)