தேனி : அமமுக கட்சி செயல்வீரர்கள் கூட்டத்திற்கு வந்த டிடிவி தினகரனை வரவேற்ற ஓபிஎஸ் ஆதரவாளர்கள்..!
அமமுக கட்சி சார்பாக தேனியில் டிடிவி தினகரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது . ஆலோசனை கூட்டத்திற்கு வருகை தந்த டிடிவி தினகரனை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வரவேற்றனர்.
அமமுக கட்சியின் செயல்வீரர் கூட்டம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் தேனியில் உள்ள தனியார் திருமண மஹாலில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அமமுக கட்சியின் நிர்வாகிகள் லந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை தலைமை ஏற்று நடத்த டிடிவி தினகரன் தேனிக்கு வருகை தந்தார். தேனி ஆண்டிபட்டி அருகே வரும் பொழுது ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருக்கும் தேனி மாவட்ட அதிமுக செயலாளர் இருந்து வரும் சையதுகான் மற்றும் கம்பம் நகர செயலாளர் ஜெகதீஷ் ஆகியோர் டிடிவி தினகரனை வரவேற்றனர்.
ஓபிஎஸ் வீட்டை சூறையாட வேட்டி கட்டிய ஆம்பளையாக இருந்தால் வந்து பார்க்கட்டும் - சையது கான் சவால்
அதிமுகவின் உட்கட்சி விவகாரம் உச்சகட்டத்தில் உள்ள நிலையிலும், தேனி மாவட்டத்தில் ஏற்கனவே சசிகலாவை அதிமுகவில் இணைக்க தீர்மானம் கொண்டு வந்தவர்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது . இந்த நிலையில் அதிமுகவில் பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினர் பிரிந்து செயல்பட்டு வரும் சூழலில் அதிமுகவில் வழி நடத்துவதற்கு சசிகலா மீண்டும் இணைய வேண்டும் என ஏற்கனவே பல்வேறு தொடர் தீர்மானங்களை ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்து வரும் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
அப்போ.. ‘Go back Modi', இப்போ 'Come back Modi'-ஆ.. ஆர்.பி.உதயகுமார் காட்டம்
இந்த சூழலில்தான் தேனி மாவட்டத்திற்கு அமமுக கட்சியின் ஆலோசனை கூட்டத்திற்கு வந்த டிடிவி தினகரனை ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் வரவேற்றது கவனிக்கப்பட்டது. இந்த நிகழ்வைத் தொடர்ந்து தேனி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட டிடிவி தினகரன் அமமுக நிர்வாகிகள் மற்றும் கட்சியின் வளர்ச்சி குறித்து பல்வேறு கருத்துக்களை முன்வைத்து பேசினார்.
CWG Gold : காமன்வெல்த்தில் இந்தியாவுக்கு இன்னொரு தங்கம்..! பளுதூக்குதலில் இந்திய வீரர் அசத்தல்..!
நிகழ்ச்சி முடிவில் பத்திரிகையாளர்கள் டிடிவி தினகரனிடம் அதிமுகவின் பிரிவை சரி செய்து மீண்டும் அதிமுக தனித்துவம் காணுமா? ஓபிஎஸ் தரப்பில் சசிகலா இருவரும் இணைவார்களா என்று கேள்வி கேட்டதற்கு தங்கள் யூகத்திற்கு எல்லாம் பதில் அளிக்க முடியாது என பதில் அளித்தார். மேலும் ஓபிஎஸ் ஆதரவாளர் சையது கான் டிடிவி தினகரன் சந்தித்தது குறித்து கேள்வி கேட்டபோது சையதுகான் எனது நீண்ட கால நண்பவர் ஆதலால் சந்தித்தோமே தவிர அரசியல் சார்ந்த எந்த சந்திப்பும் இல்லை எனவும் குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்