வரையாடுகள் கணக்கெடுப்பிற்கு சென்ற இருவரை தாக்கிய காட்டுமாடு - கூடலூரில் அதிர்ச்சி
கணக்கெடுப்பு பணிக்காக சென்ற வனத்துறை சார்ந்தவர்கள் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழக - கேரள எல்லைப் பகுதியில் உள்ள வனப் பகுதியில் வரையாடுகள் கணக்கெடுப்பிற்கு சென்ற வனத்துறை சார்ந்த இருவரை காட்டுமாடு தாக்கியதில் படுகாயம் அடைந்தனர். அவர்கள் கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
வாக்கு எண்ணும் மையத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ன? - ராதாகிருஷ்ணன் விளக்கம்
தேனி மாவட்டம் கூடலூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு வரையாடுகள் கணக்கெடுக்கும் பணி துவங்கியது. இதற்காக வனத்துறையைச் சார்ந்தவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் ஒரு குழுவில் கூடலூர் வனச்சரகத்தை சார்ந்த வனவர் பூபதி மற்றும் வேட்டை தடுப்பு காவலர் சுமன் உள்ளிட்ட வனத்துறை சார்ந்தவர்கள் தமிழக வனப்பகுதியான வண்ணத்திப்பாறை பீட் பகுதியில் கண்ணகி கோவில் அருகே கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Sivakarthikeyan: என்னோட லவ் பாதியிலேயே புட்டுக்குச்சு... காதல் அனுபவம் பகிர்ந்த சிவகார்த்திகேயன்!
அப்போது அப்பகுதியில் சுற்றித்திரிந்த காட்டுமாடு ஒன்று திடீரென ஆவேசமாக வந்து வனவர் பூபதி மற்றும் வேட்டை தடுப்பு காவலர் சுமன் ஆகியோரை பலமாக தாக்கியுள்ளது. இதில் சுமன் என்பவருக்கு இடுப்பு பகுதிக்கு கீழாக பலமாக கொம்பை வைத்து காட்டுமாடு தாக்கியுள்ளது. மேலும் அருகே இருந்த பூபதி காட்டுமாடிடம் இருந்து தப்பித்து கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அருகே இருந்தவர்கள் காட்டுமாட்டை விரட்டியதும் வனப்பகுதிக்குள் ஓடிச் சென்றது. பின்னர் காயம் அடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு உடன் சென்ற வனத்துறையைச் சார்ந்தவர்களும் மற்றும் கேரள மாநில வனத்துறை சார்ந்தவர்களும் சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
KKR vs DC LIVE Score: ஆரம்பமே அசத்தல்..டாப் ஆர்டர்களை காலி செய்யும் கொல்கத்தா!
Theni Public Holiday: தேனி மாவட்டத்திற்கு மே 10ம் தேதி விடுமுறை அறிவிப்பு - காரணம் என்ன?
அங்கு அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்த தேனி மாவட்ட வனத்துறை இணை இயக்குனர் ஆனந்த் கம்பம் அரசு மருத்துவமனைக்கு வந்து காயமடைந்தவர்களை பார்த்து ஆறுதல் கூறினார். மேலும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார். இச்சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணக்கெடுப்பு பணிக்காக சென்ற வனத்துறை சார்ந்தவர்கள் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.