மாற்றுத்திறனாளிகளால் தயாரிக்கப்பட்ட தேங்காய் ஓட்டிலிருந்து கைவினைப் பொருட்கள் விற்பனை துவக்கம்
தேங்காய் ஓட்டிலிருந்து தயாரித்த கைவினைப் பொருட்களில் முதல் விற்பனையை துவக்கி வைத்து ஆன்லைன் விற்பனை செயலியை அறிமுகப்படுத்தி வைத்தார் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத் துணை வேந்தர்.
மாற்றுத்திறனாளிகள் தேங்காய் ஓட்டிலிருந்து தயாரித்த கைவினைப் பொருட்களில் முதல் விற்பனையை துவக்கி வைத்து ஆன்லைன் விற்பனை செயலியை அறிமுகப்படுத்தி வைத்தார் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத் துணை வேந்தர்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள அரசு தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் சார்பாக மாற்றுத்திறனாளிகளை சிறு தொழில் முனைவோராக மாற்றம் செய்து வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் வகையில் தேங்காய் ஓட்டில் கைவினைப் பொருட்கள் செய்வது குறித்த பயிற்சி வகுப்புகள் கடந்த ஏப்ரல் மாதம் முதல் பயிற்சி வழங்கப்பட்டது.
மத்திய அரசின் 3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு: திமுக உண்ணாவிரத போராட்டம் நிறைவு!
இந்த பயிற்சி வகுப்பில் தேங்காய் ஓட்டில் இருந்து பெண்கள் அணியும் தோடுகள், சமையல் கரண்டி, சாவிக் கொத்து, வீட்டின் அலங்காரப் பொருட்கள், செல்போன் ஸ்டாண்ட், உள்ளிட்ட முப்பதுக்கு மேற்பட்ட கைவினைப் பொருட்கள் செய்வது எப்படி, கைவினைப் பொருட்கள் சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட ஆலோசனை மற்றும் பயிற்சிகள் கடந்த மூன்று மாதங்கள் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பயிற்சிகளை முடித்த மாற்றுத்திறனாளிகள் இயற்கையை பாதிக்காத வகையில் தேங்காய் ஓட்டிலிருந்து கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் பெரியகுளம் அரசு தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் தேங்காய் ஓட்டில் இருந்து தயாரிக்கும் கைவினைப் பொருட்களை தமிழ்நாடு அரசு வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் கீதாலட்சுமி பார்வையிட்டு பங்கேற்ற மாற்றுத்திறனாளிகளை உற்சாகப்படுத்தினார்.
Union Budget: புதிய நாடாளுமன்றத்தில் முதல் முழு பட்ஜெட் தாக்கல் - தேதியை அறிவித்த மத்திய அரசு
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் உற்பத்தி செய்த கைவினைப் பொருட்களின் முதல் விற்பனை மற்றும் கைவினைப் பொருட்களை ஆன்லைனில் சந்தைப்படுத்துவதற்கான பிரத்தியேக செயலையும் அறிமுகப்படுத்தி மாற்றுத்திறனாளிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் ராஜாங்கம், தோட்டக்கலை தொழில் முனைவோர் மேம்பாட்டு மைய இயக்குனர் முனைவர் சோமசுந்தரம், தொழில் முனைவோர் மேம்பாட்டு மைய பேராசிரியர் வசந்த் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர் .
Olympics 2024: தூத்துக்குடி நீளம் தாண்டுதல் வீரர் பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி - குவியும் வாழ்த்து
மேலும் பயிற்சி பெற்று சிறு தொழில் முனைவராக மாறிய மாற்றுத்திறனாளி ராஜேஸ்வரி கூறுகையில், தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு உதவித்தொகை வழங்கி வந்தாலும் வாழ்க்கையில் எங்களாலும் சிறு தொழில் முனைவோராக மாற்றி சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்து பயிற்சி கொடுத்து தற்பொழுது ஆன்லைன் சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனையை துவக்கி வைத்துள்ளது எங்களாலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளதால் பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவிக்கின்றனர்.