ஆண்டிபட்டி அருகே 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டியர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு
முதுகலை தமிழ் ஆசிரியரும் , தொல்லியல் ஆர்வலருமான செல்வம் மயிலாடும்பாறை பால்வண்ணநாதர் கோவிலில் ஆய்வு செய்த போது கி.பி.13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டை கண்டுபிடித்துள்ளார்.
ஆண்டிபட்டி அருகே மயிலாடும்பாறை பகுதியில் 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டியர் கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பண்டைய வரலாற்றை அரிய தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போதுள்ள தேனி மாவட்டத்தின் பெயர் அப்போது "அழ நாடு" என்ற பெயராலும் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்ட மயிலாடும்பாறை மற்றும் அதனருகே உள்ள வருசநாடு பகுதி ஆகியவை வெவ்வேறு பெயர்களாலும் கல்வெட்டில் எழுதப்பட்டுள்ளதால் இப்பகுதியின் பண்டைய வரலாற்றை அரிய தொல்லியல்துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழ் ஆசிரியரும், தொல்லியல் ஆர்வலருமான செல்வம் மயிலாடும்பாறை பால்வண்ணநாதர் கோவிலில் ஆய்வு செய்த போது கி.பி.13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டை கண்டுபிடித்துள்ளார். இந்த கல்வெட்டு குறித்து தொல்லியல் ஆர்வலர் செல்வம் கூறுகையில்,
தற்போதுள்ள தேனி மாவட்டம் பண்டைய காலத்தில் 'அழநாடு' என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்துள்ளது என்றும் பிற்காலத்தில் நிர்வாக காரணங்களுக்காக அழநாட்டை பல வள நாடுகளாக பிரித்தனர் என்றும், அதனடிப்படையில் மலைகள் சூழ்ந்த குறிஞ்சி நிலமான இன்றைய வருசநாடு பகுதியை வரிசை நாடு என்று பெயரிட்டு அழைத்தனர் என்றும், வரிசை நாட்டு ஒரோமில் என கல்வெட்டில் வருவதால் மயிலாடும்பாறை பகுதி ஒரோமில் என அழைக்கப்பட்டதாகவும், ஒரோமில் என்றால் அங்கு இருக்கும் இறைவனின் பெயர் ஒரோமிஸ்வரம் உடைய நாயனார் என்பதை அறிய முடிகிறது என்றும் ( தொண்டைமான் என்ற தளபதி கி.பி 13 ஆம்நூற்றாண்டில் இந்தப் பகுதியை ஆட்சி செய்து வந்துள்ளார்.
"உதவி அல்ல.. உரிமை" விவாகரத்து பெற்ற இஸ்லாமிய பெண்ணும் ஜீவனாம்சம் கோரலாம்.. உச்ச நீதிமன்றம் அதிரடி!
அவருடைய மனைவி தேவனால்வாள் என்பவர் இந்த கோவிலுக்கு நில தானம் செய்து பூஜைகள் செய்வதற்கு உதவியுள்ளார் என்ற செய்தி இதில் உள்ள எழுத்துக்கள் மூலம் தெரிவதாகவும் ஒரோமில் என்ற பெயரில் இருந்த தற்போதுள்ள மயிலாடும்பாறை பகுதி ரோமானியர்கள் தங்கி வணிகம் செய்த பகுதியாக இருந்துள்ளதாகவும், மிக பழமையாக விளங்கியுள்ள இந்த மயிலாடும்பாறை பகுதியை சுற்றிலும் நுண்கற்காலம், புதிய கற்காலம், பெருங்கற்காலம், இரும்பு காலம், வரலாற்று காலம், தற்காலம் வரை தொடர்ந்து சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், மயிலாடும்பாறை சுற்றியுள்ள இந்த பகுதிகளில் தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய தமிழக அரசு வழிவகை செய்தால் இந்தப்பகுதியின் பழமை வெளிப்படும் என கோரிக்கை விடுத்துள்ளார்.