பசிக்கிற மாதிரி இருக்கா...? ....10 ரூபாய்க்கு பல வகையான ஸ்நாக்ஸ் இருக்கு.. எங்கு தெரியுமா..?
வாழ்க்கையில போராடினால் ஜெயிக்க முடியும். பசிக்கிட்ட போராடினால் ஜெயிக்க முடியுமா? 10 ருபாய்க்கு வித விதமான ஸ்நாக்ஸ்!
பள்ளிக்கூடம் போகும்போது ரோட்டோர கடைகளில் ஏதாவது தீன்பண்டம் வாங்கி சாப்பிடுறதும் அதுலயும் ரோட்டுல ஏதாவது பாட்டியோ இல்ல தாத்தாவோ யாராவது தள்ளுவண்டி கடைய பாத்துட்டா போதும் ஓடிப் போய் மிட்டாயோ இல்ல ஏதாவது பழங்கள வாங்கி சாப்பிட்டத நாம மறக்க முடியாது. அப்படி சாலையோர தாத்தா பாட்டியோட தள்ளுவண்டி கடைகள பாக்குறது இப்ப ரொம்பவே சிரமமா இருக்கு. இப்ப இருக்க பாஸ்ட் புட் உணவு வகைகள், வீட்டிலேயே மாதத்துக்கு ஒரு தடவ எதாவது ஒரு பேக்கரில போய் மொத்தமா தின்பண்டம் வாங்கி ஸ்டாக் வச்சுட்டு பள்ளிக்கூடம் போகும் குழந்தைகளுக்கு கொடுத்து விடுறாங்க பெற்றோர்கள்.
அதுலயும் இப்ப இருக்க பிள்ளைங்கலாம் ரோட்டோர கடைகள்ல வாங்கி சாப்பிடறதும் குறைந்து போச்சு. எங்கயாவது ஒரு கிராமங்கள்ள இருக்க பள்ளிக்கூடங்கள்ளதா தள்ளுவண்டி கடைகள பாக்க முடியுது. தேனி மாவட்டம் கம்பத்துல குமுளி தேசிய நெடுஞ்சாலையில சாலையோரமா நிக்குற வண்டிகள பாத்தப்போ ஒரு வண்டிமட்டும் கொஞ்சம் வித்யாசமா தெரிஞ்சது. என்னெனு கிட்ட போய் பாக்குறப்ப அது தின்பண்டம் விக்குற தள்ளுவண்டி கடைனு தெரிஞ்சது. சரி ரோட்டுல விக்குறத யாரு வாங்கி சாப்பிட போறாங்க அப்படி என்ன விக்குறாங்கனு போய் பாக்குறப்ப அந்த தள்ளுவண்டி கடையில சிப்ஸ் பாக்கெட் தொங்கிட்டு இருந்தது.
அத அந்த வண்டியோட ஓனர் ஒருத்தர் பல வெரைட்டிகள்ள கடலை பருப்பு , மிச்சர், சேவு, பக்கோடா , காராச் சேவு, இனிப்பு சேவு, கடலை முருக்கு, வட்ட அப்பளம், சதுர அப்பளம், காராபூந்தி, பூந்தி, எல்லு உருண்டை, பொம்மை பிஸ்கட் இன்னும் நிறைய வகையான தின்பண்டங்கள சின்ன சின்ன கவர்ல பேக் பன்னிட்டு இருந்தத பாக்க முடிஞ்சது. நாமளும் ஒரு சிப்ஸ்ச வாங்கி சாப்டுவோம்னு கிட்ட போய் ஒரு சிப்ஸ் பாக்கெட்ட வாங்கி சாப்ட்டுட்டே அவர்ட்ட பேச்சு கொடுத்தோம். ஐயா இந்த தள்ளுவண்டி கடையில உங்களுக்கு போதுமான வருமானம் கிடைக்குமா? தள்ளுவண்டி கடைகள்ள இப்ப யாரும் வாங்கி சாப்பிடுறது விரும்புறதே இல்லையே அப்டினு கேட்டோம். அதுக்கு அந்த ஐயா யாரையும் நம்பாம என்னால முடிஞ்சத எனக்கும் என்னோட மனைவிக்கும் தினசரி சாப்டுறதுக்கு போதுமான வருமானம் கிடைக்குது.
இதுல இருக்கிறது பிளாஸ்டிக் உணவு பொருட்கள் இல்ல. பிளாஸ்டிக் பை போட்டு பொட்டலம்தான் கட்டி விக்கிறேன். கண்ட கண்ட பிளாஸ்டிக் பைல பேக்கிங் போட்டு நோய் வர்ற அளவுக்கு கடைகள்ல விக்குற தின்பண்டத்த வாங்கி குழந்தைகளுக்கு நோய் வாங்கி கொடுக்குறத விட உங்க கண்முன்னாடியே இந்த தின்பண்டங்கள நான் பேக் செஞ்சு விக்கிறேன். கொரோனாவுல என்னோட பிஸ்னஸ் பாதிச்சு நிறைய கடன் பட்டு சாப்பாட்டுக்கு கூட வழியில்லாம இருந்தேன். நான் சாப்பாட்டோட அருமைய பார்த்தேன். அதுனாலதான் என்னோட தள்ளுவண்டில கூட வாழ்க்கையில போராடினா ஜெயிக்கலாம் பசிகிட்ட போராடினா ஜெயிக்கலாமானு எழுதி போட்ருக்கேன். இந்த தின்பண்டங்கள் எல்லாமே ஒரு நாலுல வித்துடும்.
இரண்டு நாளைக்கு மேல பழச வச்சு நான் விக்கிறது இல்ல. அளவான தொழில்தான் ஆன மனசுக்கு பிடிச்சுருக்கு நிம்மதியா இருக்கேனு சந்தோசமா சொல்றத கேக்க முடிஞ்சது. எவ்ளோ பெரிய ஹோட்டல்கள்லயும் பெரிய பெரிய பேக்கரிகள்லயும் ஸ்னாக்ஸ் வாங்கி சாப்பிறதும் நம்ம குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்குறதும் நாம செஞ்சாலும் நம்ம கண்முன்னாடி இதுபோல விக்குற தள்ளுவண்டி கடைகள அதுலயும் சுத்தமான உணவுகள மிஸ் பன்றோம் அப்படிங்குறதுதான் உண்மை.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
and tablets