தேனி: ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு தரக்கோரி முதிய தம்பதி காந்தி சிலை முன்பு தர்ணா போராட்டம்
96 வயது முதியவரின் 50 செண்ட் இடத்தை அபகரித்து கொண்டு கொலை மிரட்டல் விடும் நபரிடம் இருந்து தனது விவசாய நிலத்தை மீட்டு தர கோரி காந்தி சிலை முன் அமர்ந்து முதியவர் தர்ணா .
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா வேப்பம்பட்டி ஊராட்சியை சேர்ந்த ராமசாமி என்ற 96 வயது முதியவர் வயது முதிர்வின் காரணமாக தனது நிலத்தை கடந்த 2021 ம் வருடம் பாலசுப்பிரமணி என்பவருக்கு விற்பனை செய்துள்ளார் .
TN Weather Update: நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெப்பநிலை.. இனி வறண்ட வானிலையே இருக்கும்..
2022 ம் வருடம் பாலசுப்பிரமணி என்பவர் ராமசாமியிடம் வாங்கிய நிலத்தை குருசாமி என்பவருக்கு விற்பனை செய்துள்ளர். பாலசுப்பிரமணியிடம் வாங்கிய நிலத்துடன் சேர்த்து பாலசுப்பிரமணிக்கு விற்பனை செய்யாத முதியவர் ராமசாமி நிலத்தில் 50 செண்ட் நிலத்தை சேர்த்து குருசாமி அபகரித்து வைத்து கொண்டுள்ளார் எனவும், பாதித்தப்பட்ட முதியவர் குருசாமியிடம் நீங்கள் அபகரித்த தனது நிலத்தை விட்டு வெளியேறுமாறு பல முறை தெரிவித்துள்ளார்.
முதியவரின் பேச்சை கேட்காமலும் தனது தோட்டத்தில் பாதுகாப்பு பணியில் உள்ள பாலாஜி என்பவர் மூலம் முதியவர் குடும்பத்தாருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த பலனும் இல்லை என்பதால் சின்னமனூர் நகரில் உள்ள காந்திசிலை முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் 96 வயதான முதியவர் நிலத்தை அபகரித்த குருசாமி என்பவர் அரசு துறையில் பணி செய்து ஓய்வு பெற்றதாகவும் இதனால் அரசு அலுவலர்களுடன் தொடர்பில் இருப்பதால் தங்களுக்கு அரசு அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவதாகவும் தங்களது நிலத்தை மீட்க தொடர்ந்து போராட்டம் நடத்த போவதாகவும் தெரிவித்தார்.
96 வயதான முதியவர் ராமசாமி கடந்த ஒரு வருடமாக தனது நிலத்தை மீட்க போராடி வருவதாகவும் பல முறை நிலத்தை அளவீடு செய்ய சர்வேயருக்கு மனு அளித்தும் சம்மந்தபட்ட சர்வேயர் நிலத்தை அளவீடு செய்ய குருசாமிக்கு பல முறை தபால் அளித்தும் இதுவரை அளவீடு செய்ய வர வில்லை எனவும் தனது நிலத்தை அளவீடு செய்ய வரும் சர்வேயர் அவர்களை நிலத்திற்குள் அனுமதிக்காமல் எங்கள் மீது கொலை மிரட்டல் விடுத்து வரும் குருசாமி மற்றும் அவரது தோட்ட பணியாளர் பாலாஜி என்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தங்களது நிலத்தை மீட்டு தர முதியவரும் அவர்களது குடும்பத்தார்களும் கோரிக்கை விடுத்தனர்.