பழி தீர்க்க ஸ்கெட்ச் போட்டு கொலை முயற்சி; 3 பேரை தூக்கிய போலீஸ் - மீதமுள்ளவர்கள் எஸ்கேப்
மர்ம நபர்கள் மூன்று இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் செல்வம் என்பவர் கடைக்குள் புகுந்து வெட்ட முயற்சித்த போது செல்வம் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.
தேனி: குண்டர் சட்டத்தில் சிறை சென்றவரும் கொலை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய நபரை அரிவாள் மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் தாக்க வந்த ஒன்பது நபர்களில் 3 நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் மீதமுள்ள ஆறு நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற கொலையில் பழிக்குப் பழி தீர்க்க உறவினர்கள் முயற்சி செய்ததாக காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளதாக விளக்கம் அளித்ததோடு இதில் யாரும் கூலிப்படையினரை சேர்ந்தவர்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்தி உள்ளனர் காவல் துறையினர்.
"உதவி அல்ல.. உரிமை" விவாகரத்து பெற்ற இஸ்லாமிய பெண்ணும் ஜீவனாம்சம் கோரலாம்.. உச்ச நீதிமன்றம் அதிரடி!
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஜி.கல்லுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் செல்வம் என்பவருக்கு திருமணமாகி மங்கையர்க்கரசி என்ற மனைவியும் நிஷாத்ராஜ், கிஷாந்த் என்ற இரண்டு மகன்களும் ரீனா என்ற ஒரு மகளும் உள்ளார். இந்நிலையில் செல்வம் ஜி.கல்லுப்பட்டி பகுதியில் நடத்திவரும் ஜெராக்ஸ் மற்றும் கம்மங் கூழ் நடத்தி வரும் இவர் கொலை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இரண்டு முறை குண்டர் சட்டத்தில் சிறை சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மூன்று இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் செல்வம் என்பவர் கடைக்குள் புகுந்து வெட்ட முயற்சித்த போது செல்வம் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.
Gautam Gambhir: புதிய பயிற்சியாளர் கவுதம் கம்பீர் முன் உள்ள சவால்கள் என்னென்ன? ஓர் அலசல்
இந்நிலையில் செல்வம் மற்றும் அவரது உறவினர்கள் கெங்குவார்பட்டி - வத்தலகுண்டு சாலையில் ஆயுதங்களுடன் தாக்க வந்த நபர்களை கைது செய்ய கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து அங்கு வந்த தேவதானப்பட்டி காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் ஆயுதங்களுடன் வந்த ஒன்பது நபர்களில் மூன்று நபர்களை கைது செய்தனர். தேவதானப்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காமாகப்பட்டியைச் சேர்ந்த இவர்கள் சந்துரு, புவனேஸ்வரன், ரோகித் ஆகிய மூன்று இளைஞர்களை கைது செய்துள்ளனர். மேலும் இதில் மீதமுள்ள ஆறு நபர்களை காவல்துறை என தேடி வருகின்றனர்.
Breaking News LIVE: மக்களவைத் தேர்தல் தோல்வி: அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் ஆலோசனை
மேலும் கடந்த ஆண்டு கெங்குவார்பட்டி பகுதியில் ஜெகதீஸ்வரன் என்ற நபரை கொலை செய்த வழக்கில் தொடர்புடைய செல்வம் மற்றும் அவரது மகன் ரிசாத் ராஜ் ஆகிய இருவரையும் பழி தீர்க்க கொலை செய்யும் நோக்கத்தோடு அருவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் இறந்த நபரின் உறவினர்கள் வந்ததாகவும், இதில் யாரும் கூலிப்படை சேர்ந்தவர்கள் இல்லை என்பதை காவல்துறையினர் உறுதிப்படுத்தி உள்ளனர்.