Breaking News LIVE: ஆளுநர் கையெழுத்திட மறுப்பதன் பின்னணியில் அண்ணாமலை இருக்கிறார்" - எம்.பி. ஜோதிமணி
Breaking News LIVE, July 10, 2024: நாடு முழுவதும் நடைபெற உள்ள பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் காணலாம்.
LIVE
Background
- விக்கிரவாண்டி தொகுதியில் இன்னும் சற்று நேரத்தில் இடைத்தேர்தல் தொடங்க உள்ளது.
- விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு அந்த தொகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளது.
- விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு, அந்த தொகுதி மக்கள் காலை முதலே வாக்களிக்க ஆர்வமாக குவிந்து வருகின்றனர்.
- கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்
- ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ராமதாஸ் நேரில் ஆறுதல்
- காஞ்சிபுரம் மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் – காஞ்சிபுரத்தில் பெரும் பரபரப்பு
- தமிழ்நாடு முழுவதும் 18 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்
- பிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் உயரிய விருது வழங்கிய அந்நாட்டு அதிபர் புதின்
- ரஷ்ய சுற்றுப்பயணத்தை முடித்த இந்திய பிரதமர் மோடி ஆஸ்திரியா சென்றார்
- அமைதியை நிலைநாட்டத் தயார் – ரஷ்ய அதிபர் புதினிடம் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை
- உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 41 பேர் உயிரிழப்பு – பெரும் பரபரப்பு
- காசா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் – ஏராளமானோர் உயிரிழப்பு
- யூரோ கோப்பை கால்பந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஸ்பெயின்
- ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இன்று இந்தியா மோதல்
ஆளுநர் கையெழுத்திட மறுப்பதன் பின்னணியில் அண்ணாமலை இருக்கிறார்" - கரூர் எம்.பி. ஜோதிமணி பரபரப்பு பேட்டி
"எம்.ஆர். விஜய பாஸ்கருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஆளுநர் கையெழுத்திட மறுப்பதன் பின்னணியில் அண்ணாமலை இருக்கிறார்" - கரூர் எம்.பி. ஜோதிமணி பரபரப்பு பேட்டி
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 82.48% வாக்குகள் பதிவு!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 82.48% வாக்குகள் பதிவு!
சிறைக்குள் வீட்டு உணவை அனுமதிக்கக்கோரி நடிகர் தர்ஷன் உயர் நீதிமன்றத்தில் மனு
சிறைக்குள் அளிக்கப்படும் கைதிகளுக்கான உணவால் வயிற்றுப்போக்கு ஏற்படுவதாகவும், வீட்டு உணவை அனுமதிக்கக்கோரி நடிகர் தர்ஷன் உயர் நீதிமன்றத்தில் மனு
Hooch : சேலத்தில் சுமார் 400 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் கைப்பற்றப்பட்டு அழிப்பு
சேலம்: வாழப்பாடி அருகே பெரிய கல்வராயன் மலைப் பகுதியில் உள்ள பாச்சாடு கிராமத்தில் 2 பேரல்களில் இருந்த சுமார் 400 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் கைப்பற்றப்பட்டு அழிப்பு
திமுக அளித்த புகாரில் ஷோபா மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு.
பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு சம்பவத்தில் தமிழ்நாட்டை தொடர்புபடுத்தி பேசிய வழக்கில் ஒன்றிய இணையமைச்சர் ஷோபாவுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க உயர் நீதிமன்றம் மறுப்பு.
திமுக அளித்த புகாரில் ஷோபா மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு. அந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார் "குண்டு வைத்த நபர் தமிழ்நாட்டில் பயிற்சி எடுத்தது முன்னதாகவே தெரிந்திருக்கும் பட்சத்தில், பொறுப்பான குடிமகன் என்ற முறையில் போலீசாருக்கு தகவல் அளித்திருக்க வேண்டும்" - நீதிபதி வழக்கின் விசாரணை நாளை மறுதினம் ஒத்திவைப்பு