மேலும் அறிய

தேனியில் ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் சிறுவன் உள்பட இருவர் உயிரிழந்த சோகம்

முந்தி செல்ல முற்பட்டபோது ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் நான்கு வயது சிறுவன், ஆட்டோ ஓட்டுனர் என இருவர் சம்பவ இடத்தில் உயிரிழப்பு.

முன்னே சென்ற பயணிகள் ஆட்டோவை முந்தி செல்ல முற்பட்டபோது, ஆட்டோவின் மீது கார் மோதிய விபத்தில் நான்கு வயது சிறுவன், ஆட்டோ ஓட்டுனர் என இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், நான்கு பெண்கள் காயமடைந்தனர்.

TN Assembly: சாதிவாரி கணக்கெடுப்புக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல.. தமிழ்நாடு முதலமைச்சர் திட்டவட்டம்..


தேனியில் ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் சிறுவன் உள்பட இருவர் உயிரிழந்த சோகம்

விபத்து நடந்த போது அவ்வழியாக சென்ற தேனியை பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் காயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக வத்தலகுண்டு அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரை  தேவதானப்பட்டி காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே தேனி - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் பரசுராமபுரம் பகுதியில் பயணிகளை ஏற்றி சென்ற ஆட்டோவை பின்னே வந்த கார் முந்தி செல்ல முற்பட்டபோது, ஆட்டோவின் மீது கார் மோதிய விபத்தில் ஆட்டோ சாலையில் தலை குப்புற கவிழ்ந்து  விபத்துக்குள்ளானது.

தீவிரமாகும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்; 4-வது நாளாக இன்றும் கைது!


தேனியில் ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் சிறுவன் உள்பட இருவர் உயிரிழந்த சோகம்

இந்த விபத்தில்  ஆட்டோவில் பயணித்த 4 வயது சிறுவன் பவின்பாண்டி, ஆட்டோ ஓட்டுநர் அய்யனார் (வயது 50) தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஆட்டோவில் பயணித்த நான்கு பெண்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த நிலையில் அவ்வழியாக சென்ற தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஓ.பி ரவீந்திரநாத் விபத்தில் காயமடைந்த பெண்களை உடனடியாக வத்தலகுண்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். மேலும் விபத்தில் பலியான சிறுவன் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் இருவரின் உடலை பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து முகத்தில் பலியான குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். 

TN Assembly: காவிரி விவகாரம்.. சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த எடப்பாடி பழனிசாமி..

காவல்துறை விசாரணையில், கொடைக்கானலை சேர்ந்த ரமேஷ் மற்றும் அவரது உறவினர்கள் வத்தலகுண்டில் உறவினர்களின்  திருமண விழாவிற்கு செல்வதற்காக நேற்று கெங்குவார்பட்டி வந்த உறவினர்கள் வீட்டில் தங்கிய நிலையில் இன்று காலை திருமண விழாவிற்கு அவரது உறவினரான ஆட்டோ ஓட்டுனர் அய்யனார்  ஆட்டோவில்  பெண்கள் மற்றும் குழந்தைகளை  அனுப்பி வைத்துவிட்டு  ரமேஷ் மற்றும் மேலும் அவரது உறவினர்கள் காரில் பின் தொடர்ந்து சென்று உள்ளனர். அப்பொழுது பரசுராமன் புறம் பகுதியில்  உறவினர்கள் சென்ற ஆட்டோவை  ரமேஷ் மற்றும் உறவினர்கள் சென்ற கார் முந்திச் செல்ல முற்பட்ட போது இந்த விபத்து நடந்து சிறுவன் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் பலியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது

தலைப்பு செய்திகள்

ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
மதுரை: கீழ்மதுரையில் நிற்காத ஆடி அமாவாசை சிறப்பு ரயில்; ஊழியர்கள் மீது நடவடிக்கை!
மதுரை: கீழ்மதுரையில் நிற்காத ஆடி அமாவாசை சிறப்பு ரயில்; ஊழியர்கள் மீது நடவடிக்கை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Upcoming Cars:
Upcoming Cars: "மஹிந்திரா முதல் ஸ்கோடா வரை.." ரெண்டே மாசத்துல இந்தியாவுக்குள் வரப்போகும் 6 கார்கள்!
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Embed widget