மேலும் அறிய

தேனி : மீண்டும் கலெக்டர் பெயரில் வாட்ஸ் அப் கணக்கு - மர்ம நபருக்கு சைபர் க்ரைம் வலைவீச்சு

தேனி மாவட்ட ஆட்சியர் பெயரில் வாட்ஸ்-அப் கணக்கு தொடங்கி போலியான உத்தரவை அனுப்பி மீண்டும் பணம் பறிக்க முயன்ற மர்மநபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரனின் பெயரில் மர்ம நபர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு போலியான வாட்ஸ்-அப் கணக்கு தொடங்கினார். அதில் மாவட்ட ஆட்சியரின் பெயர், புகைப்படத்தை பயன்படுத்தி அரசு அலுவலர்களிடம் நலம் விசாரிப்பது போன்று குறுஞ்செய்திகள் அனுப்பி பணம் பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இந்த தகவல் ஆட்சியர் முரளிதரனுக்கு கிடைத்தவுடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

AIADMK single leadership : ஓபிஎஸ் நீதிமன்றத்தை நாடினால் சந்திக்கத் தயார்.. அதிரடிக்கு தயாரான இபிஎஸ்!

தேனி : மீண்டும் கலெக்டர் பெயரில் வாட்ஸ் அப் கணக்கு - மர்ம நபருக்கு சைபர் க்ரைம் வலைவீச்சு

அதன்பேரில் தேனி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர். இந்நிலையில் தேனி ஆட்சியரின் பெயரில் நேற்று மேலும் ஒரு மர்ம நபர் மற்றொரு தொலைபேசி எண்ணில் போலியான வாட்ஸ்-அப் கணக்கு தொடங்கி பணம் பறிக்க முயன்றார். மேலும் அந்த நபர் ஆட்சியரின் பெயரில் போலியான உத்தரவு ஒன்றை தயாரித்தும் ஊராட்சி மன்ற தலைவர்களிடம் பணம் பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

Chennai: தன் விருப்பத்தின் படி பாலியல் தொழிலில் ஈடுபட்டால் விட்டுடுங்க...! - காவல்துறைக்கு சென்னை நீதிமன்றம் அறிவுரை..!

தேனி : மீண்டும் கலெக்டர் பெயரில் வாட்ஸ் அப் கணக்கு - மர்ம நபருக்கு சைபர் க்ரைம் வலைவீச்சு

தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரனின் புகைப்படத்தை முகப்பு படமாக கொண்டு 8088765749 என்ற எண்ணில் இருந்து வாட்ஸ்-அப் மூலம் குறுஞ்செய்தி அனுப்பியது தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதேபோன்று தற்போது மாவட்ட ஆட்சியரின் புகைப்படத்தை முகப்பு படமாக வைத்து 7207912008 என்ற எண்ணில் இருந்து மர்ம நபரால் பலருக்கும் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. அந்த குறுஞ்செய்திகளில் அரசு அலுவலர்களை நலம் விசாரிப்பது போன்றும், இணையதள வர்த்தகத்திற்கு பணம் அனுப்பக் கேட்டும் தகவல்கள் அனுப்பப்பட்டு வருகிறது. மேலும், சில ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு அரசு திட்டத்தின் கீழ் வீடு வழங்குவதற்கு ஒதுக்கீடு ஆணை வழங்கப்படும் என்றும் அதற்கு பணம் செலுத்த வேண்டும் என்றும் போலியான ஒரு உத்தரவை மாவட்ட ஆட்சியர் அனுப்புவது போல் குறுஞ்செய்தி அனுப்பி உள்ளதாகவும் தெரிய வருகிறது. இதுதொடர்பாக உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தேனி : மீண்டும் கலெக்டர் பெயரில் வாட்ஸ் அப் கணக்கு - மர்ம நபருக்கு சைபர் க்ரைம் வலைவீச்சு
மாவட்ட ஆட்சியர் அரசால் வழங்கப்பட்ட (சி.யூ.ஜி. எண்) 9444172000 என்ற செல்போன் எண் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே வேறு எண்ணில் இருந்து ஆட்சியரின் பெயரில் தவறான செய்திகள் மற்றும் தவறான வேண்டுகோள்கள் ஏதேனும் வந்தால் ஊராட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் நம்ப வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஆட்சியரின் பெயரில் மீண்டும் பணம் பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ambedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget