மேலும் அறிய

நெருங்கு அட்சய திருதியை - தேனியில் குழந்தை திருமணங்களை தடுக்க குழு அமைத்த ஆட்சியர்

குழந்தை திருமணம் நடக்காமல் தடுக்க தேனி ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் குழந்தை திருமணங்களை தடுக்க தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

அட்சய திருதியையொட்டி தேனி மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடக்காமல் தடுக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டுள்ளனர். தமிழகத்தில் குழந்தை திருமணம் அதிக அளவில் நடக்கும் மாவட்டங்களில் முதன்மை மாவட்டமாக தேனி திகழ்கிறது. அதில் பல திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்ட போதிலும், வெளியே தெரியாமல் பல திருமணங்கள் நடக்கின்றன. அவ்வாறு திருமணமாகும் சிறுமிகள் பிரசவத்துக்கு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட பின்னரே இந்த விவகாரம் வெளியே தெரிய வருகின்றன.

தஞ்சை தேர் திருவிழாவில் சோகம்: மின்சாரம் பாய்ந்து 11 பேர் உயிரிழப்பு!

நெருங்கு அட்சய திருதியை - தேனியில் குழந்தை திருமணங்களை தடுக்க குழு அமைத்த ஆட்சியர்

குறிப்பாக கடந்த கால கட்டங்களில் முக்கிய பண்டிகை காலங்கள் மற்றும் அட்சய திருதியை பண்டிகை காலகட்டத்தில் அதிக எண்ணிக்கையில் குழந்தை திருமண ஏற்பாடுகள் நடந்ததாக கூறப்படுகிறது. இதனால், வரும் மே மாதம்  3ஆம் தேதி வரவுள்ள அட்சய திருதியை பண்டிகையையொட்டி குழந்தை திருமணத்தை தடுக்கும் பொருட்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட சமூக பாதுகாப்பு அலுவலர், மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை துணை இயக்குனர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர், தொழிலாளர் உதவி ஆணையர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், சைல்டு லைன் இயக்குனர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Prashant Kishore : கட்சியில் சேர பிரசாந்த் கிஷோர் மறுத்துவிட்டார் : காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரந்தீப் சுர்ஜேவாலா

நெருங்கு அட்சய திருதியை - தேனியில் குழந்தை திருமணங்களை தடுக்க குழு அமைத்த ஆட்சியர்

இந்த குழுவின் மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான முன்திட்டமிடல் குறித்த கூட்டம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் இந்த குழுவில் இடம் பெற்றுள்ள துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில், அட்சய திருதியை பண்டிகையையொட்டி வருகிற 3 ஆம் தேதி வரை கிராம ஊராட்சி, வட்டாரம் மற்றும் நகர அளவில் குழந்தை திருமணம் தடுத்தல் தொடர்பான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்துதல், பள்ளி இடையின்ற மாணவிகளை கண்டறிந்து அவர்களின் பெற்றோருக்கு ஆலோசனை வழங்குதல், முக்கிய இடங்களில் விழிப்புணர்வு பதாகைகள் வைத்தல், வாகனங்களில் ஒலிபெருக்கி மூலம் பிரசாரம் செய்தல், பள்ளிகளில் காலை வழிபாட்டு கூட்டத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மே ஒன்றாம் தேதி நடக்கும் கிராமசபை கூட்டத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.

Breaking News LIVE: சேலம் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொன்றவனுக்கு தூக்குத்தண்டனை - போக்சோ நீதிமன்றம்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
 
ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூப்பில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Vs Vijay: “அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
“அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
Putin Warns Ukraine: “அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
“அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
TN government free laptop: இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
ABP Premium

வீடியோ

”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Vs Vijay: “அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
“அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
Putin Warns Ukraine: “அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
“அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
TN government free laptop: இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
TVK Vijay: தவெகவுக்கு வரும் முக்கிய அரசியல் தலைவர்கள்.. ஈரோட்டில் விஜய் கொடுத்த அப்டேட்!
TVK Vijay: தவெகவுக்கு வரும் முக்கிய அரசியல் தலைவர்கள்.. ஈரோட்டில் விஜய் கொடுத்த அப்டேட்!
Maruti eVitara: மாருதி சுசூகியின் முதல் மின்சார வாகனத்தில் என்ன இருக்கிறது.? இ விதாராவின் அம்சங்கள் விரிவாக..
மாருதி சுசூகியின் முதல் மின்சார வாகனத்தில் என்ன இருக்கிறது.? இ விதாராவின் அம்சங்கள் விரிவாக..
Indian Cars Export Record: வெளிநாடுகளில் பட்டையை கிளப்பும் இந்திய கார்கள்; சாதனையை நோக்கி நடைபோடும் ஏற்றுமதி
வெளிநாடுகளில் பட்டையை கிளப்பும் இந்திய கார்கள்; சாதனையை நோக்கி நடைபோடும் ஏற்றுமதி
உஷார்... ரூ.25,000 முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம்.! 22ஆம் தேதி முதல் செக் - வெளியான முக்கிய அறிவிப்பு
உஷார்... ரூ.25,000 முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம்.! 22ஆம் தேதி முதல் செக் - சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு
Embed widget