Breaking News LIVE: காங்கிரஸில் சேர பிரஷாந்த் கிஷோர் மறுப்பு - காங்கிரஸ்
Breaking News LIVE: இன்றைய முக்கிய மற்றும் ப்ரேக்கிங் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.
LIVE
Background
உலக பணக்காரர்கள் வரிசையில் அடிக்கடி சில மாற்றங்கள் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. அந்தவகையில் தற்போது உலகளவில் முதல் 5 இடங்களை பிடித்துள்ள பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் ஒரு மாற்றம் நடைபெற்றுள்ளது. இம்முறை உலகளவில் டாப் 5 பணக்காரர்கள் பட்டியலில் இந்தியர் தொழிலதிபர் அதானி இடம்பிடித்துள்ளார்.
உலக பணக்காரர்கள் பட்டியலில் 5-ஆம் இடத்தில் இருந்த வாரன் பஃப்ஃபட்டை அதானி பின்னுக்கு தள்ளியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி கௌதம் அதானியின் மொத்த சொத்த மதிப்பு 123 பில்லியன் டாலர்களாக இருந்துள்ளது. இது வாரென் பஃப்ஃபட்டின் சொத்து மதிப்பான 121.7 பில்லியன் டாலர்களைவிட அதிகமாகியுள்ளது. இதன்காரணமாக பணக்காரர்கள் பட்டியலில் அதானி 5-ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார் என்று கருதப்படுகிறது.
ப்ளூம்பெர்க் மில்லியனர்கள் அறிக்கையின் படி 2022ஆம் ஆண்டில் தற்போது வரை அதானி 43 பில்லியன் டாலர் சொத்தை சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை அவருடைய சொத்து மதிப்பில் சுமார் 56% உயர்வை ஏற்படுத்தியுள்ளதாக அறிக்கை தெரிவித்துள்ளது.
காங்கிரஸில் சேர பிரஷாந்த் கிஷோர் மறுப்பு - காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரந்தீப் சுர்ஜேவாலா..
காங்கிரஸில் சேர பிரஷாந்த் கிஷோர் மறுப்பு - காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரந்தீப் சுர்ஜேவாலா..
அரசுப்பள்ளி மாணவர்களை ராகிங் செய்த விவகாரம் : 5 மாணவர்கள் தற்காலிக இடைநீக்கம்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் உள்ள அரசுப்பள்ளி வகுப்பறையில் மாணவர்களை ராகிங் செய்த 5 மாணவர்கள் தற்காலிக இடைநீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டார்
நடிகர் விமல் புகார்... மன்னர் வகையறா பட தயாரிப்பாளர் சிங்காரவேலன் கைது..
தனது பெயரை பயன்படுத்தி தயாரிப்பாளர் சிங்காரவேலன் பணமோசடி செய்ததாக நடிகர் விமல் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோடநாடு வழக்கு தொடர்பாக அதிமுக நிர்வாகி சஜீவனிடம் தனிப்படை காவல் துறையினர் விசாரணை
கோடநாடு வழக்கு தொடர்பாக அதிமுக நிர்வாகி சஜீவனிடம் தனிப்படை காவல் துறையினர் விசாரணை
6 முதல் 12 வயதுக்குட்பட்டவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி போட அனுமதி
6 - 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த மத்திய மருந்து கட்டுப்பாட்டு மையம் ஒப்புதல் வழங்கியுள்ளது. பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசி செலுத்த ஒப்புதல்