ஆவினில் நடந்த ஒட்டு மொத்த ஊழலும் விரைவில் வெளியாகும் "Wait and See" : அமைச்சர் நாசர்
தேனி மாவட்டத்தில் உள்ள ஆவின் நிலையங்கள் மற்றும் ஆவின் பால் உற்பத்தி நிலையங்களில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆய்வுகள் மேற்கொண்டார்.
ஆவினில் நடந்த ஒட்டு மொத்த ஊழலும் அதிமுக., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியால்தான். பொறுத்திருங்கள். விரைவில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என பால்வளத்துறை அமைச்சர் நாசர் பேட்டி.
பால்வளத்துறை அமைச்சர் நாசர் இன்று தேனி மாவட்டத்தில் உள்ள ஆவின் நிலையங்கள் மற்றும் ஆவின் பால் உற்பத்தி நிலையங்களில் ஆய்வுகள் மேற்கொண்டார். ஆய்வுகளுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழகத்தில் கடந்த ஆட்சியில் நடைபெற்ற ஊழல் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார். அதனடிப்படையிலே தற்போது தமிழகம் முழுவதும் ஆய்வுகள் மேற்கொண்டு வரப்படுகிறது.
நாளை தஞ்சைக்கு வரும் முதல்வர் - வலுப்பெறும் கும்பகோணம் தனிமாவட்ட கோரிக்கை
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்ற சோதனையில் 83 கோடி ரூபாய் சிக்கியுள்ளது. அவரிடம் கைப்பற்றப்பட்ட டைரியில் முன்னாள் 10 அமைச்சர்கள் பெயர் உள்ளது. அதில் எடப்பாடி பழனிச்சாமி பெயரும் உண்டு.
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது பல வழக்கு உள்ளது. விசாரணையில் 3 கோடி ரூபாய் ராஜேந்திர பாலாஜி வாங்கியது தெரியவந்துள்ளது.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai Taste | பர்மா இடியாப்பம்.. அவித்த காய்கறி குருமா.. இறைச்சி க்ரேவி.. மதுரையில் இப்படி ஒரு Foodie சொர்க்கம்
யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்பட்டும். ஆவினில் நடந்த ஒட்டு மொத்த ஊழலும் அதிமுக., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியால்தான். பொறுத்திருங்கள். "வெயிட் அண்ட் சீ." விரைவில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க தமிழ காவல் துறை சார்பாக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. விரைவில் ராஜேந்திர பாலாஜி பிடிபடுவார் எனவும் தெரிவித்தார்.