’தமிழகத்தின் செயல்பாடுகளை பார்த்து ஒட்டுமொத்த நாடே பாராட்டுகின்றது’ - உதயநிதி ஸ்டாலின் !
உதயநிதி ஸ்டாலின் கூடிய விரைவில் அமைச்சராக உள்ளார் ! உதயநிதி ஸ்டாலினின் தொண்டனாக அவர் நினைப்பதை நாங்கள் நிறைவேற்றுவோம் - அமைச்சர் மூர்த்தி பேச்சு
மதுரை ஆனையூர் பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான முத்தரையர் சிலை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் தனி விமானம் மூலம் வந்து கலந்து கொண்டார். இந்த விழாவிற்காக பத்திர பதிவு துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதற்காக மதுரை மாவட்டம் முழுவதும் இருந்து திமுக தொண்டர்கள் வந்திருந்தனர். பின்னர் ஆணையூர் பகுதிக்கு வந்த உதயநிதி ஸ்டாலின் சிலையை திறந்து வைத்துவிட்டு மேடைக்கு வந்து மேடையின் மீது இருந்த மற்றொரு காட்சி சிலைக்கு மாலை அணிவித்தார். அப்போது சரியான ஸ்டூல் இல்லாததால் அச்சப்பட்டு உதயநிதி ஸ்டாலின் முதலில் மாலை அணிவிக்க ஏறாமல் மறுத்தனர், பின்னர் அமைச்சர்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் பிடித்துக்கொள்ள அவர் மேலே ஏறி மாலை அணிவித்தார். பின்னர் உதயநிதி ஸ்டாலினுக்கு செங்கோல் வழங்கப்பட்டது. இந்த விழாவில் பள்ளி கல்லூரிகளில் மகேஷ் மெய்யாமொழி, சுற்றுசூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகிய மூன்று அமைச்சர்களும் உடன் இருந்தனர்.
மேடையில் பேசிய அமைச்சர் பி.மூர்த்தி ”இன்னும் சில நாட்களில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்பார். எங்களை அமைச்சாரக்கியவர் உதயநிதி ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினின் தொண்டனாக அவர் நினைப்பதை நாங்கள் நிறைவேற்றுவோம். ஸ்டாலின் உத்தரவை போல உதயநிதியின் பேச்சிற்கும் நாங்கள் கட்டுப்படுவோம். உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டை வழிநடத்த தகுதியான தலைவராக உள்ளார். எந்த இயக்கத்திலும் இல்லாத வகையிலான இளைஞர் உதயநிதி. உதயநிதி ஸ்டாலினோடு யாரும் ஒப்பிட்டு பார்க்க இயலாது, அமைச்சர் பொறுப்பை ஏற்க உள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு என வாழ்த்துக்கள்” என்றார்.
தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் ”மதுரை என்றாலே மகிழ்ச்சி அன்பு பாசம் மட்டும் தான். முத்தரையர் சிலை திறப்பு விழாவிற்கு வருகைதரும்போது உற்சாக வரவேற்பு அளித்தனர். உள்ளாட்சி தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை மதுரை மாநகர மக்கள் தந்தமைக்கு நன்றி. என்னை முதன்முதலாக மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேடையில் ஏறி பேசினேன். முத்தரையரை போன்று நாடாளுமன்ற, சட்டமன்றம், நகர்புற உள்ளாட்சி என தொடர்ந்து வெற்றியை பெற்றவர் ஸ்டாலின். கருணாநிதியின் பேரனாக , ஸ்டாலினின் மகனாக இங்கு வந்து சிலையை திறந்துவைத்துள்ளேன்.
5 மாதத்திற்கு முன்பே என்னிடம் சொல்லி அனுமதி வாங்கியிருந்தார். அதிமுக ஆட்சி இந்த சிலையை திறக்கவிடாமல் தடுத்தனர் அதையும் மீது நாம் திறந்துள்ளோம் அது உங்களுக்கான வெற்றி. திமுக அரசின் நிதி பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டையும், தமிழகத்தின் செயல்பாடுகளையும் பார்த்து ஒட்டுமொத்த நாடே பாராட்டுகின்றது. நம்பர் - 1 முதல்வராக ஸ்டாலின் உருவாகியுள்ளார். உள்ளாட்சி பிரதிநிதிகள் தவறு ஏதும் செய்யாமல் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்” என கூறினார். அதை தொடர்ந்து அமைச்சர் மூர்த்தி கட்சியின் இளைஞர் அணிக்கு 10 லட்ச ரூபாய் நிதி கொடுத்தார்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - வார்த்தை ஜாலத்தால் எழுதப்பட்ட பகல் கனவு பட்ஜெட் - தமிழ்நாடு பட்ஜெட் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து