நியூட்ரினோ திட்டம்: வனத்துறை ஒப்புதலுக்கு ஆய்வுக்குழு விண்ணப்பம்!

தேனியில் அமைக்கப்படும் நியூட்ரினோ ஆய்வகத்திற்கு தமிழக வனத்துறையிடம் ஒயில்டு லைப் கிளியரன்ஸ் எனும் வன உயிர் வாரிய அனுமதி கோரி   நியூட்ரினோ ஆய்வக திட்டக்குழு விண்ணப்பித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நியூட்ரினோ என்றால் என்ன?


நியூட்ரினோ என்பது ஒரு பொருளை 2, 4 ,8 ,16 என்று துண்டுகளாக்கிக் கொண்டே போனால் மேலும் பிளக்க முடியாத ஒரு பகுதி வரும் அல்லவா அதன் பெயர்தான் ”அணு”. நம்மைச் சுற்றியுள்ள அனைத்து பொருட்களும் அண்டவெளி முழுவதும் இதேபோல் பல அணுக்களால் ஆனது என்பது அறிவியலின் அடிப்படையாகும். விஞ்ஞான வளர்ச்சியில் இந்த  அணுவுக்குள் புரோட்டான், நியூட்ரான் ,எலக்ட்ரான் என்ற மூன்று துகள்கள் இருப்பதாக கண்டறியப்பட்டது. இவை மூன்றும் அடிப்படைத் துகள்கள் என்று அழைக்கப்படுகிறது. இன்றைய நவீன அறிவியலின்படி இம்மூன்று துகள்களோடு  மொத்தம் 60 அடிப்படைத் துகள்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது 60  நுண்துகள்களால் ஆனது தான் ஒரு ”அணு” இதில் ஒரு  நுண்துகள்களால் ஆனது தான் ”நியூட்ரினோ”   


நியூட்ரினோ திட்டம்: வனத்துறை ஒப்புதலுக்கு ஆய்வுக்குழு விண்ணப்பம்!                


 இந்த நியூட்ரினோ துகள்கள் சூரியன் மற்றும் விண்மீன்களில் இருந்து ஒவ்வொரு நொடியும் பல லட்சம் கோடி கணக்கில் வெளிப்பட்டு இப்பிரபஞ்சம் முழுக்க பயணித்து வருகிறது. எல்லா பொருள்களிலும் எளிதில் ஊடுருவிச் செல்லும் திறனுடையது என்கின்றனர் ஆய்வாளர்கள் . நியூட்ரினோ துகள்களில் மின்னூட்டம் இல்லாததால் எந்த பொருள் மீதும் எவ்வித எதிர்வினையும் ,பாதிப்பையும் ஏற்படுத்துவது இல்லை என்றும் கூறுகின்றனர் . இதனால்தான் ஒவ்வொரு நொடியும் நம் உடலை பல லட்சம் நியூட்ரினோக்கள் ஊடுருவிச் செல்வதை நம்மால் உணர முடிவதில்லை எனவே நியூட்ரினோ துகளை ”பிசாசுதுகள் ”என்று வேடிக்கையாக கூறுகிறார்கள்  நவீன அறிவியலாளர்கள்.


இதன் நோக்கமே பிரபஞ்சம் எப்படி உருவானது?  என்ற அடிப்படை கேள்விக்கு அறிவியலால் இதுவரை விளக்க முடியாத கண்டறியப்படாத பல உண்மைகளை நியூட்ரினோ ஆய்வுகள் குறித்தது  கண்டுபிடிக்க முடியும் என்று நம்பப்படுகிறது. எனவே நியூட்ரினோ துகள்கள் பற்றிய ஆய்வில் உலக விஞ்ஞானிகள் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.


நியூட்ரினோ திட்டம்: வனத்துறை ஒப்புதலுக்கு ஆய்வுக்குழு விண்ணப்பம்!


தேனி தேர்வானது ஏன்?


இந்தியாவின் முதல் நியூட்ரினோ ஆய்வுக் கூடமான (INO) தேனி மாவட்டம் பொட்டிபுரம் பஞ்சாயத்தில் உள்ள அம்பரப்பர் மலையில் இத்திட்டமானது நிறுவப்பட உள்ளது. இத்திட்டத்திற்கு மத்திய அரசு 1500 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. இம்மலையின் அடிவாரத்தில் உள்ள 66 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை தமிழக அரசு ஒதுக்கி கொடுத்துள்ளது.  மத்திய வனத்துறை 11.55 ஏக்கர் வனப்பகுதியை ஒதுக்கி கொடுத்துள்ளது. இத்திட்டத்தின்படி அம்பரப்பர் மலையில் 7 மீட்டர் அகலமும் 7 மீட்டர் உயரமும் என்ற அளவில் 2 கிலோமீட்டர் நீளத்திற்கு சுரங்கப்பாதை அமைக்கப்படும் .இதன் மூலம் 150 மீட்டர் நீளம் ,26 மீட்டர் அகலம், 30 மீட்டர் உயரமுள்ள பெரிய சுரங்க அறை கட்டப்படும். அதில் 50,000 டன் எடையுள்ள மின்காந்தப்படுத்தப்பட்ட இரும்பு உணர் கருவி நிறுவி மற்றுமொரு ஐம்பதாயிரம் டன் உணர்கருவி வைப்பதற்கான கூடுதல் இடவசதியும் உருவாக்கப்படும். இது தவிர கூடுதலாக மூன்று சுரங்களும் அமைக்கப்படும். அப்படி அமைக்கப்படும் இந்த ஆய்வகத்தில் என்ன செய்யப் போகிறார்கள் என்றால் விண்வெளியிலிருந்து வரும் இயற்கை நியூட்ரினோக்கள் காஸ்மிக் கதிர்கள் உடன் இணைந்து வருவதால் அதிலிருந்து நியூட்ரினோவை மட்டும் வடிகட்டுவதற்காக நான்குபுறமும் ஒரு கிலோ மீட்டர் கனமுள்ள கடின பாறை தேவைப்படுகிறது, இவ்வகை பாறைகள் மேற்கு தொடர்ச்சி மலையில் மட்டுமே உள்ளதால் இந்த அம்பரப்பர் மலையை தேர்வு செய்துள்ளனர் என கூறப்படுகிறது .


நியூட்ரினோ திட்டம்: வனத்துறை ஒப்புதலுக்கு ஆய்வுக்குழு விண்ணப்பம்!


மேலும் இந்தியாவின் முதல் நிலத்தடி ஆய்வகம் என்பதால் உலகமே தேனி மாவட்டத்தை திரும்பிப் பார்க்கும் உலக வரைபடத்தில் தேனிமாவட்டம் இடம்பெறும் என்றும் பெருமையாக அதன் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.  இந்த நியூட்ரினோ ஆராய்ச்சியானது அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ் ரஷ்யா, இங்கிலாந்து, ஸ்வீடன் ,சீனா உட்பட பத்துக்கும் மேற்பட்ட நாடுகளில் நியூட்ரினோ ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. அதாவது உலகெங்கும் சுமார் 25 ஆய்வகங்களில் நியூட்ரினோ ஆய்வுகள் குறித்து ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. ஆனால் இந்த அனைத்து ஆராய்ச்சிக் கூடங்களிலும் நியூட்ரினோ ஆராய்ச்சியானது வெவ்வேறு விதமாக நடைபெறுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.


இத்திட்டம் இங்கு அமைக்கப்படுவதற்கு ஏன் காலதாமதம் ஆகிறது இதில் உள்ள பிரச்சினைகள் என்னென்ன என்றால் இந்த நியூட்ரினோ ஆய்வகத் திட்டம் அமைப்பதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இந்த அம்பரப்பர் மலையை சுற்றி சுமார் 6 க்கு மேற்பட்ட கிராமங்கள் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருந்து வருகிறது. இப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு பிரதான தொழிலாக விவசாயம் மற்றும் ஆடு மாடுகளை மேய்ப்பது என பாரம்பரியமாக இருந்து வருகின்றனர் . இந்தப் பகுதியின் முக்கிய தொழிலாகவே ஆடு மாடுகளை மேய்ப்பது சுமார் 30 ஆயிரம் மாடுகளும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகளும் தொழு மாடுகளும் அதிகமாக இப்பகுதியில் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த ஆய்வகத்தின் கட்டுமானப் பணிகளால் இயற்கையான ஆடு, மாடுகள் மேய்ச்சல் நிலம் பாதிக்கப்படும் எனவும் விளை நிலங்களும் மற்றும் அழிந்துவிடும் என இப்பகுதி மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். மற்றும் பல்வேறு காரணங்களும் எழுகின்றதால் எதிர்ப்புகள் கிளம்பின.


நியூட்ரினோ திட்டம்: வனத்துறை ஒப்புதலுக்கு ஆய்வுக்குழு விண்ணப்பம்!


அம்பரப்பர் மலையில் அமைக்கப்படும் இந்த நியூட்ரினோ ஆய்வகத் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு அறிக்கை முறையாக வாங்காமல்  நியூட்ரினோ ஆய்வக குழு தனியார் அமைப்பு மூலம் பொய் சான்றிதழ் பெற்றதாக கூறி   நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு நியூட்ரினோ ஆய்வகத் திட்டம் அமைப்பதற்கு இடைக்கால தடை இருந்து வந்த நிலையில் தற்போது ஒயில்டு லைப் கிளியரன்ஸ் எனப்படும் வன உயிர் வாரிய அனுமதி கோரி தமிழ்நாடு வனத்துறையிடம் நியூட்ரினோ ஆய்வகத் திட்ட குழு விண்ணப்பித்துள்ளது.

Tags: theni Goverment nutrino pottipuram western gatz

தொடர்புடைய செய்திகள்

மதுரையில் ஐம்பொன் சிலை திருட்டு; காவல்துறையினர் தீவிர விசாரணை!

மதுரையில் ஐம்பொன் சிலை திருட்டு; காவல்துறையினர் தீவிர விசாரணை!

காவல்துறையினர் அச்சுறுத்தப்படும் விவகாரங்களை சாதாரணமாக விடப்போவதில்லை - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

காவல்துறையினர் அச்சுறுத்தப்படும் விவகாரங்களை சாதாரணமாக விடப்போவதில்லை   - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

மூன்றாம் அலை ஆபத்துக்கு வழிவகுக்கிறதா மதுரை? கொரோனா அப்டேட் !

மூன்றாம் அலை ஆபத்துக்கு வழிவகுக்கிறதா மதுரை?  கொரோனா அப்டேட் !

‛அதிகரித்த ஆக்சிஜன் படுக்கைகள் ; குறைந்த கொரோனா’ மதுரை நிலவரம் என்ன ?

‛அதிகரித்த ஆக்சிஜன் படுக்கைகள் ; குறைந்த கொரோனா’  மதுரை நிலவரம் என்ன ?

ABP நாடு Impact: மதுரை எரிவாயு மயானம் பயன்பாட்டிற்கு வந்தது!

ABP நாடு Impact: மதுரை எரிவாயு மயானம் பயன்பாட்டிற்கு வந்தது!

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : தேவையில்லாமல் மக்கள் வெளியே நடமாடக்கூடாது - சென்னை உயர் நீதிமன்றம்

Tamil Nadu Coronavirus LIVE News :  தேவையில்லாமல் மக்கள் வெளியே நடமாடக்கூடாது - சென்னை உயர் நீதிமன்றம்

‛உன் உருவமும்... உன் கலரும்...’ குக் வித் கோமாளி தீபா சங்கர் சந்தித்த சங்கடங்கள்!

‛உன் உருவமும்... உன் கலரும்...’ குக் வித் கோமாளி தீபா சங்கர் சந்தித்த சங்கடங்கள்!

தமிழ்நாடு குடிமகன்கள் கூல்... புதுச்சேரியில் மது டோர்டெலிவரிக்கு அனுமதி!

தமிழ்நாடு குடிமகன்கள் கூல்... புதுச்சேரியில் மது டோர்டெலிவரிக்கு அனுமதி!

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை பாழாக்கும் சோப்பு தொழிற்சாலைகள்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை பாழாக்கும் சோப்பு தொழிற்சாலைகள்