Madurai: கோயிலில் முதல் மரியாதை வாங்குவதில் பிரச்னை ; முன்னாள் அதிமுக எம்எல்ஏ, திமுக கிளை செயலாளர் கைது
கோயிலில் முதல் மரியாதை அளிப்பதில் இரு தரப்பினரிடையே மோதல் - முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ மற்றும் திமுக கிளை செயலாளர் உள்ளிட்டோர் கைது - கிராமத்தில் காவல்துறை குவிப்பு - பரபரப்பு.
மதுரை மாவட்டம் மந்திகுளம் அருகே கருவனூர் கிராமத்தில் முன்னாள் அ.தி.மு.க., சட்டமன்ற உறுப்பினர் பொன்னம்பலம் அவரது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் கடந்த 2001 - 2006 ஆம் ஆண்டு சமயநல்லூர் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக பதவி வகித்தார். இந்நிலையில் பொன்னம்பலத்தின் சொந்த ஊரான கருவனூரில் உள்ள பாறை கருப்பசாமி கோயிலின் உற்சவ விழா கடந்த ஒரு வாரமாக நடைபெற்று நேற்று முன்தினம் முடிவடைந்தது. இந்நிலையில் கோவிலில் மரியாதை அளிப்பதில் கருவனூர் தி.மு.க., கிளை செயலாளர் வேல்முருகன் தரப்பினருக்கும், முன்னாள் எம்.எல்.ஏ பொன்னம்பலம் தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
#abpnadu | Madurai, karuvanoor House of former ADmk Mla Ponnambalam vandalised, his vehicle set on fire allegedly by the supporters of DMK's Velmurugan after the two sides argued over offering prayers at parai Karuppasamy Temple first.#madurai | @SRajaJourno | @KathirNews .. pic.twitter.com/u1zCC2Bv4T
— arunchinna (@arunreporter92) June 26, 2023
இதனையடுத்து வேல்முருகன் தரப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ பொன்னம்பலத்தின் தரப்பினரும் மாறி மாறி தாக்க தொடங்கினர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ., பொன்னம்பலம வீட்டின் அவரது மனைவி பழனியம்மாள் மற்றும் அவரது குடும்பத்தினர் இருந்தபோது திடீரென வீட்டின் மீது கற்களை எறிந்து தாக்க தொடங்கி வீட்டின் ஜன்னல்களையும், டிவி, ப்ரிட்ஜ், பைக், கார்களை உடைத்தனர். தொடர்ச்சியாக பொன்னம்பலத்தின் காரை பெட்ரோல் ஊற்றி எறித்ததோடு, அருகில் இருந்த வீடுகளையும் கற்களால் எறிந்து உடைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பொன்னம்பலத்தின் உறவினரான விஜய் என்பவருக்கு அரிவாளால் வெட்டப்பட்டதில் வயிற்றில் படுகாயம் ஏற்பட்டதோடு கல்வீச்சில் பழனிக்குமார், வேல்விழி, சுப்பையா ஆகிய 4 பேருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் மற்றொரு தரப்பான வேல்முருகன் தரப்பில் திருப்பதி என்பவருக்கும் படுகாயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கோயில் விழாவில் மரியாதை அளிப்பதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கார் எரிப்பு, வீடுகள் உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சத்திரபட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதனடிப்படையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் குறித்து திமுக கிளை செயலாளர் வேல்முருகன் தரப்பில் திருப்பதி என்பவர் அளித்த புகாரின் கீழ் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்பம்பலம் உட்பட 20 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் முன்னாள் எம்.எல்.ஏ பொன்னம்பலம் அவரது மகன்கள் திருச்சிற்றம்பலம், தில்லையம்பலம் ஆகிய 3பேரை சத்திரபட்டி காவல்துறையினர் கைது செய்தனர். இதேபோன்று இந்த மோதல் தொடர்பாக கருவனூரை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ பொன்னம்பலத்தின் மருமகன் பழனிக்குமார் என்பவர் அளித்த புகாரின் பேரில் கொலை முயற்சி உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் கருவனூரை சேர்ந்த வேல்முருகன் , திருப்பதி உள்ளிட்ட 18பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் திமுக கிளை செயலாளர் வேல்முருகன், செந்தமிழன், ராஜமோகன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
கோயில் விழாவை முன்னிட்டு் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் இருந்தபோதே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டு கார் எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இரு தரப்பு மோதல் காரணமாக கிராமத்தில் உள்ள ஆண்கள் ஏராளமானோர் தலைமறைவாகியுள்ள நிலையில் தற்போது கிராமத்தை சுற்றிலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/