மேலும் அறிய

தேனி: சுருளி அருவியில் குளிக்க ஓரிரு வாரங்களில் அனுமதி? - வனத்துறை அதிகாரிகள் தகவல்

’’கொரோனா கட்டுப்பாடுகளுடன் சுருளி அருவியில் குளிக்க பக்தர்கள், சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டுமென்ற கோரிக்கையும் விடுத்துள்ளனர்’’

தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சுருளி மலையில் கைலாசநாதர் கோயில், பூத நாராயணர் கோயில் உள்ளது. இங்குள்ள சுருளி அருவி தமிழ்நாட்டின் மிக முக்கிய அருவிகளில் ஒன்றாக விளங்குகிறது. சுருளி அருவியில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை, பெளர்ணமி போன்ற  நாட்களில்  ஏராளமான பக்தர்கள் வருகை தந்து தங்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்து, சுருளி அருவியில் குளித்து நீராடி, முன்னோர்களுக்கு வழிபாடு நடத்தி செல்வார்கள்.

தேனி: சுருளி அருவியில் குளிக்க ஓரிரு வாரங்களில் அனுமதி? - வனத்துறை அதிகாரிகள் தகவல்
ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சுருளி அருவி மூடப்பட்டது. தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று குறைய தொடங்கிய இந்நிலையில் தேனி மாவட்டத்தில் பெரும்பாலான சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டது, ஆனால் சுருளி அருவி தற்போது வரை திறக்கப்படாமல் உள்ளது.

தேனி: சுருளி அருவியில் குளிக்க ஓரிரு வாரங்களில் அனுமதி? - வனத்துறை அதிகாரிகள் தகவல்
வார விடுமுறை நாட்கள், கோவில் விஷேச நாட்களில் வனப்பகுதிக்குள்ளும் சுருளி அருவிக்கும் பக்தர்கள் செல்லாமல், சுருளி ஆற்றின் கரையில் திதி, தர்ப்பணம் செய்ய சுருளிப்பட்டி ஊராட்சி நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதனால் சுருளி அருவிக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் சுருளி அருவிக்கு செல்லும் வழியில் உள்ள முல்லை பெரியாற்றில் குளிக்க செல்கின்றனர்.

தேனி: சுருளி அருவியில் குளிக்க ஓரிரு வாரங்களில் அனுமதி? - வனத்துறை அதிகாரிகள் தகவல்
இது குறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில், “சுருளி அருவிக்கு முன்னோர்களுக்கு திதி ,தர்பணம் செய்ய வெளி ஊர்களில் இருந்து வருகிறோம். அருவியில் குளிக்க வனத்துறை அனுமதி அளிக்காத நிலையில் முல்லை பெரியாற்று கரையோரங்களில் ஈமச்சடங்குகளை செய்து திரும்புவதாக கூறுகின்றனர். மேலும் சுற்றுலா பயணிகள் நீண்ட இடைவெளிக்கு பிறகு அருவிக்கு வரும்பொழுது அருவிக்கு செல்ல அனுமதி இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் கட்டுப்பாடுகளுடன் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிரபலமான கொடைக்கானல் பகுதியில் உள்ள வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் சுற்றுலா தளங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில் சுருளி அருவிக்கு மட்டும் கட்டுப்பாடுகள் தொடர்ந்து வருவதாகவும் சுற்றுலா பயணிகள் தெரிவிக்கின்றனர். மேலும் கொரோனா கட்டுப்பாடுகளுடன் சுருளி அருவியில் குளிக்க பக்தர்கள், சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டுமென்ற கோரிக்கையும் விடுத்துள்ளனர். 

தேனி: சுருளி அருவியில் குளிக்க ஓரிரு வாரங்களில் அனுமதி? - வனத்துறை அதிகாரிகள் தகவல்

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், “சுருளி அருவியில் விரைவில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்க உள்ளோம். அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறைந்தது ஒன்று அல்லது இரண்டு வாரத்திற்குள் இது நடக்கும்” என்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
Delhi Air Pollution: கார்களுக்கு தடை, பேருந்துகளும் ஓடாத சூழல் - இன்று முதல் புதிய விதிகள் அமல், மக்கள் குழப்பம்
Delhi Air Pollution: கார்களுக்கு தடை, பேருந்துகளும் ஓடாத சூழல் - இன்று முதல் புதிய விதிகள் அமல், மக்கள் குழப்பம்
Annamalai:
Annamalai: "நான் மோடிக்கு விசுவாசமான நாய்” - தவெகவுக்கு அண்ணாமலை பதிலடி.. நடந்தது என்ன?
ABP Premium

வீடியோ

TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
Delhi Air Pollution: கார்களுக்கு தடை, பேருந்துகளும் ஓடாத சூழல் - இன்று முதல் புதிய விதிகள் அமல், மக்கள் குழப்பம்
Delhi Air Pollution: கார்களுக்கு தடை, பேருந்துகளும் ஓடாத சூழல் - இன்று முதல் புதிய விதிகள் அமல், மக்கள் குழப்பம்
Annamalai:
Annamalai: "நான் மோடிக்கு விசுவாசமான நாய்” - தவெகவுக்கு அண்ணாமலை பதிலடி.. நடந்தது என்ன?
HOLIDAY: 2 நாள் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை
2 நாள் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
TNPSC, SSC, RRB தேர்வு.! தேர்வர்கள் எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
TNPSC, SSC, RRB தேர்வு.! தேர்வர்கள் எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Embed widget