மதுரை - நத்தம் சாலையில் இருந்த தேன் கூட்டை அகற்றிய தீயணைப்புத் துறை
தேன் கூட்டில் உள்ள தேனி பயணிகளை கொட்டிவிடும் என்பதால் தீயணைப்புத் துறையினர் அகற்றினர்.

தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் மதுரை தல்லாகுளம் ஐஓசி அலுவலகம் அருகே இருந்து, நத்தம் வரை 35 கி.மீ.க்கு ரூ.1,028 கோடியில் நான்குவழிச் சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி, 2018 ஆண்டு தொடங்கியது. இந்த சாலையில் மதுரை தல்லாகுளம் முதல் ஊமச்சிகுளம் வரை சுமார் 7.5 கி.மீ.க்கு ரூ.612 கோடியில் பறக்கும் பாலம் கட்டப்பட்டுள்ளது.
மதுரை to நத்தம் பறக்கும் சாலையில், அடிப்புறத்தில் ராட்சத தேன் கூடு ஒன்று கட்டியிருந்தது. அய்யர்பங்களா பகுதியில் கட்டியிருந்த இந்த தேன் கூட்டை மதுரை தீயணைப்புத் துறையினர் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி அகற்றினர்.#பாலம் | @abpnadu | @SRajaJourno | #madurai | @athens_south | #மதுரை . pic.twitter.com/a9OaAYYCCk
— arunchinna (@arunreporter92) April 17, 2023

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்





















