மேலும் அறிய

'கிராமிய கலைகளை தமிழ்நாடு அரசு ஊக்குவித்து வருகிறது’ - நாட்டுப்புற கலைஞர் வேல்முருகன் பேட்டி

"முதல்வரின் ஆட்சி வெகு சிறப்பாக உள்ளது. மக்கள் எப்பொழுதும் தமிழக முதல்வராக இவர்தான் இருக்க வேண்டும் என எண்ணுகின்றனர்."

கோவை வ.உ.சி மைதானத்தில் ’எங்கள் முதல்வர் - எங்கள் பெருமை’ என்ற சிறப்பு புகைப்பட கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியை தமிழ்நாடு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில், நடிகர் சத்தியராஜ் கடந்த 7 ந்தேதி துவக்கி வைத்தார். அன்று முதல், தினமும் புகைப்பட கண்காட்சியை காண ஏராளமான பொதுமக்கள் வந்து பார்த்து செல்கின்றனர். மேலும், மாலையில் தினமும் ஒவ்வொரு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், இன்று நாட்டுப்புற கலைஞர் வேல்முருகன் கண்காட்சியை பார்வையிட்டார்,

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "’எங்கள் முதல்வர் எங்கள் பெருமை’. தமிழகம்  மட்டுமல்ல, உலகம் முழுவதும் வாழும் அத்தனை தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் விதத்தில் அமைந்துள்ளது. முதல்வரின் மிகப்பெரிய வரலாறுகள், அவரின் இளவயது காலகட்டத்தில் இருந்து, ஒவ்வொரு விஷயமும் மிகப்பெரிய வரலாறாக இருந்து வருகின்றது. அத்தனை வரலாறுகளும், இன்றைக்கு தமிழக முதல்வராக இருந்து தன்னை, சாதாரண மனிதனாக ஆக்கி மக்களுக்கு எப்போதும் தொண்டனாக இருக்க வேண்டும். மக்களுடைய தொண்டனாக, இருக்க வேண்டும் என்பதுதான் அவருடைய நோக்கம். பல்வேறு திட்டங்கள் ஒரு சிறிய விஷயங்களை கூட அவர் விட்டதில்லை. 

கிராமிய கலைகளை தமிழ்நாடு அரசு ஊக்குவித்து வருகிறது’ - நாட்டுப்புற கலைஞர் வேல்முருகன் பேட்டி

2  ஆண்டுகளில் கிட்டத்தட்ட எத்தனையோ திட்டங்கள், ஏழை எளிய மக்களுடைய விவசாய திட்டங்கள், கடன் உதவி திட்டங்கள், மருத்துவ காப்பீடு திட்டங்கள், திருமண உதவித் திட்டம், பள்ளி கல்வி, மருத்துவ உதவி என எத்தனையோ திட்டங்களை, கலைஞர் ஆட்சியில் எப்படி இருந்ததோ, அதேபோல முதல்வர் அவருடைய ஆட்சியில், வெகு சிறப்பாக உள்ளது. மக்கள் எப்பொழுதும் தமிழக முதல்வராக இவர்தான் இருக்க வேண்டும் என எண்ணுகின்றனர்.  அவருடைய ஆட்சி, ரொம்ப ரொம்ப வெற்றிவாகை சூடிக் கொண்டிருக்கிறது. எனக்கு மிகப்பெரிய சந்தோஷம் என்னவென்றால், கலைஞர் எழுதிய பாடலை வேல்முருகன் பாட வேண்டும் என்று எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தார். அந்த மேடையில், 23 நாட்டு தலைவர்கள் இருந்த மேடையில் எனக்கு வாய்ப்பு கொடுத்து பாட வைத்தார். உள்ளபடியே மிகப்பெரிய சந்தோசம். 

ஒவ்வொரு காலகட்டங்களிலும் முதல்வரின் பிறந்தநாள் ஆக இருந்தாலும் சரி, கட்சி பல்வேறு நிகழ்ச்சிகளாக இருந்தாலும், கட்சி பாடல்களாக இருந்தாலும் சரி, சமுதாய பாடல்கள் மற்ற பொதுநல பாடல்கள் பாடுவதற்கு ஒவ்வொரு முறையும் முதல்வர் வாய்ப்பு கொடுத்து மக்கள் கலைஞர்களையும் கிராமிய கலைஞர்களையும் ஊக்குவித்து வருகிறார் அதுதான் சென்னை சங்கமம். மிகப்பெரிய வரலாறு கிடைத்தது ஒவ்வொரு நிகழ்வுகளையும் வாய்ப்பு கொடுத்து வருகிறார்.

கோவையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்பாட்டில் அற்புதமான அரங்கத்தை அமைத்து தலைவருடைய சின்ன வயதில் இருந்து தற்போது வரை என்னென்ன திட்டங்கள் செயல்பாடுகள் என காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. முதல்வர் மிசா சிறையில் இருந்ததைப்போல் சிறைச்சாலை கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த சிறைவாசலை பார்த்து பெரியவர்கள் கண்ணீர் விட்டார்கள். சென்னையில் நடைபெற்ற கண்காட்சியில்,  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்து நெகிழ்ந்தார். அதனை பார்ப்பதற்காகவே அங்கு வந்திருந்தார். இந்த தருணத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வரலாறை தெரிந்து கொள்ள வேண்டும். 
என்னுடைய இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. கிராமிய கலைஞர்கள் கிராமத்திலே திருவிழாக்கள் மட்டுமின்றி அரசு விழாக்களில் கலந்து கொள்கிறார்கள். மாநில அளவில், வெளிநாடுகளில் சென்று தங்களுடைய நிகழ்ச்சிகளை நிறைவேற்றி வருகிறார்கள். கலைஞர்களுக்கு ஊக்குவிப்பு ஊக்கத்தொகையை தமிழக முதல்வர் வழங்கி வருகிறார்” எனக் கூறினார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
Doctors Protest :  ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
Doctors Protest : ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Controversy | கைதாகிறாரா கஸ்தூரி? அதிரடி காட்டிய நீதிபதி Aadhav Arjuna ED Raid |ஆதவ் வீட்டில் ED ரெய்டு! சிக்குகிறாரா லாட்டரி மார்டின்? பரபரப்பில் விசிகPriyanka Gandhi Wayanad|ராகுலை தாண்டுவாரா பிரியங்கா?ட்விஸ்ட் கொடுத்த வயநாடு!கதறும் பாஜக, கம்யூனிஸ்ட்DOGE Elon musk | ‘’வாங்க எலான் மஸ்க்..’’ ட்ரம்ப் கொடுத்த ASSIGNMENT! கலக்கத்தில் அமெரிக்கர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
Doctors Protest :  ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
Doctors Protest : ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
“திமுக கூட்டணி பற்றி எதுவும் பேசக் கூடாது” ஆதவ் அர்ஜூனாவிற்கு ஆர்டர் போட்ட திருமா..?
“திமுக கூட்டணி பற்றி எதுவும் பேசக் கூடாது” ஆதவ் அர்ஜூனாவிற்கு ஆர்டர் போட்ட திருமா..?
Kanguva Review: களைகட்டியதா ? கண்ணைகட்டியதா ? சூர்யாவின் கங்குவா முழு திரைவிமர்சனம் இதோ
Kanguva Review: களைகட்டியதா ? கண்ணைகட்டியதா ? சூர்யாவின் கங்குவா முழு திரைவிமர்சனம் இதோ
Dr. Ezhilan : ”திமுக எம்.எல்.ஏ, மருத்துவர் எழிலனை மருத்துவத் துறை அமைச்சராக்குங்கள்” எழுந்தது கோரிக்கை..!
Dr. Ezhilan : ”திமுக எம்.எல்.ஏ, மருத்துவர் எழிலனை மருத்துவத் துறை அமைச்சராக்குங்கள்” எழுந்தது கோரிக்கை..!
TNPSC Group 5A: நாளை கடைசி- டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? தகுதி, ஊதியம், பிற விவரங்கள் இதோ..!
TNPSC Group 5A: நாளை கடைசி- டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? தகுதி, ஊதியம், பிற விவரங்கள் இதோ..!
Embed widget