மேலும் அறிய
Advertisement
தமிழகத்தில் குடிமை பொருட்கள் கடத்தலை தடுப்பதில் திமுக அரசு 100% தோல்வி அடைந்து விட்டது - ஆர்.பி.உதயகுமார்
இந்த கடத்தல் மூலம் இந்த திட்டம் மக்களுக்கு பயள் அளிக்கவில்லை. தற்போது குடிமை பொருள் கடத்தல் தொடர்ந்து நீடித்தால் மக்களே வீதிக்கு வந்து போராடும் நிலை உருவாகும்.
தமிழகத்தில் குடிமை பொருட்கள் கடத்தலை தடுப்பதில் திமுக அரசு 100 சதவீதம் தோல்வி அடைந்து விட்டது என சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில், “தமிழகத்தில் குடிமைப் பொருட்கள் கடத்தல் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கண்ணீர் வடித்து வேதனையில் உள்ளனர். கடந்த ஜனவரி, பிப்ரவரி 2 மாதத்தில் சிவில் சப்ளை சி.ஐ.டி., பிரிவில் உள்ள அதிகாரிகள் 35 லட்சம் மதிப்பில் உள்ள 1.7 லட்சம் கிலோ அரிசி, பாமாயில், பருப்பு ஆகியவற்றை சோதனை நடத்தி பறிமுதல் செய்துள்ளனர். அதை தொடர்ந்து மார்ச் மாதத்தில் 1.06 கோடி மதிப்பில் உள்ள அரிசி, பாமாயில், பருப்பு ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். தினந்தோறும் குடிமை பொருட்கள் கடத்தாத நாட்களே இல்லை. குடிமை பொருட்கள் தடுப்பதில் 100% திமுக அரசு தோல்வியடைந்து விட்டது.
புரட்சித்தலைவி அம்மா ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வண்ணம் மாதம்தோறும் 20 கிலோ அரிசி திட்டத்தை கொண்டு வந்தார்கள். இந்த கடத்தல் மூலம் இந்த திட்டம் மக்களுக்கு பயள் அளிக்கவில்லை. தற்போது குடிமை பொருள் கடத்தல் தொடர்ந்து நீடித்தால் மக்களே வீதிக்கு வந்து போராடும் நிலை உருவாகும்" என கூறினார்.
ரேஷன் பொருள் பதுக்குதல் குறித்தும் மதுரை பொதுமக்கள் 1800 599 5950 என்ற இலவச தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். தகவல் அளிப்பவர் ரகசியம் காக்கப்படும் இதற்காக மாநில சிவில் சப்ளை சிஐடி போலீசில் 24 மணி நேரமும் செயல்படும் காவல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இது சென்னையில் இயங்கும் கூடுதல் டிஜிபி-ன் நேரடி கண்காணிப்பில் செயல்படுகிறது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/ abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Ration Shops : ரேஷன் அரிசி கடத்தலா..? இந்த இலவச எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.. உடனே இதை கவனிங்க..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion