Ration Shops : ரேஷன் அரிசி கடத்தலா..? இந்த இலவச எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.. உடனே இதை கவனிங்க..
”ரேஷன் பொருள் பதுக்குதல் குறித்தும் மதுரை பொதுமக்கள் ”1800 599 5950” என்ற இலவச தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். தகவல் அளிப்பவர் ரகசியம் காக்கப்படும்”
தமிழ்நாடு அரசின் திட்டங்களைப் பெறவும், பொதுவிநியோகக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மலிவு விலை அரிசி, கோதுமை, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட பொருள்களைப் பெறவும் ரேஷன் அட்டை முக்கியமானதாகும். இது பல்வேறு இடங்களில் ஆவணமாகவும் பயன்படுத்தப்படுகிறது. இது, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு அரசின் சார்பாக வழங்கப்படும் அட்டையாகும். குடிமக்களுக்கான இந்த ரேஷன் அட்டையானது முன்பு பேப்பரில் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ஸ்மார்ட் கார்ட் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த குடும்ப அட்டையில் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் பெயர்கள், முகவரி உள்ளிட்ட பல தகவல்களைக் கொண்டிருக்கும். இந்நிலையில் இந்த ரேஷன் அட்டை அடிப்படையில் வழங்கப்படும் ரேஷன் அரிசி வெளியூர்களுக்கு கடத்தப்படுவது வழக்கமாக உள்ளது. ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. ரேஷன் பொருள் பதுக்குதல் குறித்தும் மதுரை பொதுமக்கள் இலவச தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என எண் வெளியிட்டுள்ளனர்.
ரேஷன் அரிசி கடத்தலா ? புகார் தெரிவிக்கலாம் !
— arunchinna (@arunreporter92) February 20, 2023
மதுரையில் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக புகார் அளிக்க இலவச தொலைபேசி எண் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. அதன்படி 1800- 599 -5950 எண்ணில் புகார் செய்யலாம்.@CMOTamilnadu | @r_sakkarapani
| @SRajaJourno | @rajiv_dmk | @VarunKumarIPSTN .... pic.twitter.com/E8Kweq992X
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்