Crime: ரீல்ஸ் மூலம் ஆண் நண்பருடன் பழக்கம்! கொலை வழக்கில் சிக்கிய பெண் இன்ஸ்பெக்டர் கைது - என்ன நடந்தது?
ஶ்ரீவில்லிபுத்தூரில் முதியவர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண் இன்ஸ்பெக்டர் உட்பட இருவர் கோவாவிற்கு தப்பிச்செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டனர்.
![Crime: ரீல்ஸ் மூலம் ஆண் நண்பருடன் பழக்கம்! கொலை வழக்கில் சிக்கிய பெண் இன்ஸ்பெக்டர் கைது - என்ன நடந்தது? The court refused the bail of the female inspector involved in the murder case know details Crime: ரீல்ஸ் மூலம் ஆண் நண்பருடன் பழக்கம்! கொலை வழக்கில் சிக்கிய பெண் இன்ஸ்பெக்டர் கைது - என்ன நடந்தது?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/31/bf2882866fcaa31eaa1386f4adc52c961717138505582184_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கோயில் விழாவில் தகராறு:
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சத்யா நகரைச் சேர்ந்தவர் ராமர்-(60). இவருக்கும் இதே பகுதியைச் சேர்ந்த ராமசாமி-(65) குடும்பத்திற்கும் முன்விரோதம் இருந்துவருகிறது. இந்நிலையில் கடந்த 21-ம் தேதி முத்துமாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு, சிங்கம் சிலை வைக்க வேண்டும் என ராமசாமி மகன் ராம்குமார் கூறியுள்ளார். அதற்கு ராமர் எதிர்ப்பு தெரிவித்ததால், ராமசாமி குடும்பத்திற்கும் இடையே மீண்டும் பிரச்னை வெடித்தது.
அப்போது ராமசாமி அவரது மகன்கள் ராம்குமார், ராஜேந்திரன் மற்றும் இரு பெண்கள் சேர்ந்து கல், இரும்பு என கையில் கிடைத்ததை வைத்து ராமரை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த ராமர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக ராமரின் மனைவி அன்னலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீ வில்லிபுத்தூர் நகர் காவல்துறையினர் ராமசாமி, ராம்குமார், ராஜேந்திரன் மற்றும் இரு பெண்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர்.
பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்:
இந்நிலையில் கடந்த 25-ம் தேதி சிகிச்சை பலனின்றி ராமர் உயிரிழந்தார். இதையடுத்து அந்த வழக்கை கொலை வழக்காக மாற்றிய காவல்துறையினர் ராமசாமி, ராஜேந்திரன், ஜெயலட்சுமி ஆகியோரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய ராம்குமார் மற்றும் மேலும் ஒரு பெண்ணை தீவிரமாக தேடி வந்த நிலையில் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரில் மறைந்திருந்த ராம்குமாரை ட்ரேஸ் செய்த போது கையும் களவுமாக இருவரும் சிக்கினர் என்பதும் குறிப்பிடதக்கது. இதில் ராம்குமார் உடன் கைதான பெண், சத்யசீலா ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருவது தெரியவந்தது. இதையடுத்து கொலை வழக்கில் தொடர்புடைய பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்து ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி., துரை உத்தரவிட்டுள்ளார்.
பெண் இன்ஸ்பெக்டர் பின்னணி
ஜாமின் கோரிய இன்ஸ்பெக்டர் சத்திய சீலா
ஜாமின் வழங்க மறுப்பு
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)