மேலும் அறிய
Savukku Shankar: ஜாமீன் கிடைக்குமா? விரைவில் விசாரணைக்கு வரும் சவுக்கு சங்கர் மனு!
காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் கோவை மாநகர சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

சாவுக்கு சங்கர்
விரைவில் சவுக்கு சங்கர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் கோரிய மனு வரும் 20-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.
கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர்
காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் கோவை மாநகர சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதனிடையே தேனியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கைது செய்வதற்காக வந்த கோவை போலீசாருக்கு உதவியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தேனி மாவட்டம் பழனி செட்டிபட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பாக்கியம் என்பவரை பெண் என்றும் பாராமல், சவுக்கு சங்கர் தரக்குறைவாக பேசியதோடு கீழே தள்ளியதாகவும், சவுக்கு சங்கர் கார் மற்றும் அவரது உதவியாளர் உள்ளிட்டோரிடம் தடை செய்யப்பட்ட 2.5 கிலோ கஞ்சா போதைப்பொருள் வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் மற்றும் அவரது உதவியாளர்கள் ராம்பிரபு, ராஜரத்தினம் மற்றும் கஞ்சா கொடுத்ததாக மகேந்திரன் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குறிப்பாக அரசுப் பணி செய்ய விடாமல் தடுத்தல், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் போதைப்பொருள் புழக்கம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
சவுக்கு சங்கர் ஜாமீன் மனு விசாரணைக்கு
இந்நிலையில் கஞ்சா வைத்திருந்தது தொடர்பாக மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தின் முன் சவுக்கு சங்கர் கடந்த 8ம் தேதி நேரில் ஆஜர்படுத்தப்பட்டார். தொடர்ந்து நீதிபதி செங்கமலச்செல்வன் கஞ்சா வைத்திருந்த வழக்கில் மே 22ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டார். இந்நிலையில் தேனியில் கஞ்சா வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி சவுக்கு சங்கர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் விதித்த நீதிமன்ற காவல் 22ம் தேதியோடு நிறைவடையும் நிலையில் விரைவில் சவுக்கு சங்கர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் கோரிய மனு வரும்20ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - TN Rain: குடையுடன் போங்க! அடுத்த 3 மணி நேரம்.. 9 மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம்?
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Vaikasi: கல்யாணம் பண்ணப் போறீங்களா! வைகாசியில் எத்தனை முகூர்த்த நாட்கள்? முழு விவரம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
அரசியல்
அரசியல்
வேலைவாய்ப்பு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion