மேலும் அறிய

புதுக்கோட்டை தொல்லியல் தலங்களில் சிவகங்கை தொல்நடைக் குழுவினர் தொல்நடைப் பயணம்..

குடுமியான்மலை, சித்தன்னவாசல், புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகம், திருமயம் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்றனர்.

புதுக்கோட்டை தொல்லியல் தலங்களில் சிவகங்கை தொல்நடைக் குழுவினர் தொல்நடைப் பயணம் மேற்கொண்டனர்.
 
சிவகங்கை தொல் நடைக்குழு நிறுவநர் புலவர் கா.காளிராசா செய்தியாளர்களுக்கு தெரிவித்ததாவது, சிவகங்கை தொல்நடைக் குழுவினர்  தொல்லியல் சார்ந்த பொருட்கள் இடங்கள் பற்றி மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொல்நடைப் பயணம் மேற்கொள்ளுதல், பள்ளி கல்லூரிகளில் கருத்தரங்கு நடத்துதல், உலகப் பாரம்பரிய நாள், வாரம் போன்ற  விழாக்களை கொண்டாடுதல், அவ்வப்போது தொல்லியல் சார்ந்த கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி செய்தியாக வெளியிடுதல், தொல்லியல் தலங்களுக்கு பொது மக்களையும் மாணவர்களையும் அழைத்துச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தல் போன்ற பணிகளை தொடர்ச்சியாக செய்து வருகிறது.  தற்போது சிவகங்கை தொல்நடைக்குழு தொல்நடைப் பயணம் 4-ஐ  ஒருங்கிணைத்து குடுமியான்மலை, சித்தன்னவாசல், புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகம், திருமயம் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்றனர்.
 
புதுக்கோட்டை தொல்லியல் தலங்களில் சிவகங்கை தொல்நடைக் குழுவினர் தொல்நடைப் பயணம்..
 
தொல்நடைப் பயணம் தொடங்குவதற்கு முன்பாக தொல்நடைப் பயண கையேடு வெளியிடப்பட்டது இக்கையேட்டை தலைவர் சுந்தரராஜன் துணைத் தலைவர் முனீஸ்வரன் வெளியிட ஓய்வு பெற்ற வேளாண் இணை இயக்குநர் இளங்கோ ஐயா அவர்கள் பெற்றுக் கொண்டார். குடுமியான் மலையில் உள்ள இசைக் கல்வெட்டு மற்றும் ஏழாம் நூற்றாண்டு குடைவரைக் கோவில் அங்குள்ள பாண்டியர் கால கல்வெட்டுகள் சிகா நாதர் திருக்கோவில் நாயக்கர் கால வியத்தகு கற்சிலைகள் ஆகியவற்றைக் கண்டு மகிழ்ந்தனர்.

புதுக்கோட்டை தொல்லியல் தலங்களில் சிவகங்கை தொல்நடைக் குழுவினர் தொல்நடைப் பயணம்..
 
சித்தன்னவாசலில் உள்ள 1200 ஆண்டுகள் பழமையான குடைவரை ஓவியங்களைப் பார்த்து அன்றைய நாளில் எளிய வண்ணங்களைக் கொண்டு இவ்வளவு சிறப்பாக வரைந்திருந்தத திறனைப் பார்த்து வியந்து போயினர். புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் உள்ள பறவைகள் பாம்பினங்கள், கடல் வாழ் உயிரினங்கள் போன்ற பதப்படுத்தப்பட்ட காட்சிக் கூடங்களை பார்த்தும் அங்குள்ள டைனோசர் அசைவு மற்றும் ஒலிக் காட்சியைக் கண்டும் பிரமித்தனர். 

புதுக்கோட்டை தொல்லியல் தலங்களில் சிவகங்கை தொல்நடைக் குழுவினர் தொல்நடைப் பயணம்..
 
பின்னர் சேதுபதி மன்னர்களால் கட்டப்பட்ட திருமயம் மலைக்கோட்டை, கோட்டையின் இடைப்பகுதியில் அமைந்துள்ள சிவன் குடைவரை, திருமயம் மலையில் தென்பகுதியில் அமைந்துள்ள ஏழாம் நூற்றாண்டு திருமால் குடைவரைக்கோவில். சிவன் கோவில் போன்றவற்றை கண்டனர், மேலும் அங்குள்ள கல்வெட்டுகள் இசை சார்ந்த கல்வெட்டு லிங்கோத்தவர் சிற்பம்,  சிவனுக்கு வாயிற்காவலராக நிற்கும் எமன் மற்றும் சித்திரகுப்தர் சிற்பங்களை பார்த்தும் மகிழ்ந்தனர். இந்த தொல்நடைப் பயணம் மிகுந்த மகிழ்ச்சி அளித்தவுடன் தொல்லியல் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தியதாக கலந்து கொண்டவர்கள் கூறினர், இதில் சிவகங்கை தோல்நடைக்குழு தலைவர் நான் சுந்தரராஜன் செயலர் இரா நரசிம்மன் துணைத்தலைவர் முனீஸ்வரன் ஓய்வு பெற்ற வேளாண்மை இணை இயக்குநர் இளங்கோவன், ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் முருகானந்தம், ஆசிரியர் முத்து காமாட்சி இந்திரா, ஈஸ்வரி, லோகமித்ரா ஆகியோருடன் 25 மாணவர்கள் உட்பட என்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர், என்று தெரிவித்தார்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lok Sabha Speaker Election: பிடிகொடுக்காத பாஜக..! இன்று மக்களவை சபாநாயகர் தேர்தல், ஓம் பிர்லா Vs கொடிக்குன்னில் சுரேஷ்
Lok Sabha Speaker Election: பிடிகொடுக்காத பாஜக..! இன்று மக்களவை சபாநாயகர் தேர்தல், ஓம் பிர்லா Vs கொடிக்குன்னில் சுரேஷ்
Rasipalan: மகரத்துக்கு நம்பிக்கை..கும்பத்துக்கு கவனம்: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Rasipalan: மகரத்துக்கு நம்பிக்கை..கும்பத்துக்கு கவனம்: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Today Movies in TV, June 26: ஏழுமலை, வில்லு, வெந்து தணிந்தது காடு.. டிவியில் இன்றைய படங்கள் என்னென்ன?
Today Movies in TV, June 26: ஏழுமலை, வில்லு, வெந்து தணிந்தது காடு.. டிவியில் இன்றைய படங்கள் என்னென்ன?
Kottukkaali : சிறப்பு விருது பெற்ற சூரியின் கொட்டுக்காளி...உணர்ச்சிவசப்பட்ட நடிகை அனா பென்
Kottukkaali : சிறப்பு விருது பெற்ற சூரியின் கொட்டுக்காளி...உணர்ச்சிவசப்பட்ட நடிகை அனா பென்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Mamata banerjee : ”காங்கிரஸ் எங்ககிட்ட கேட்கல” மீண்டும் அதிருப்தியில் மம்தாSubramanian swamy slams Modi :  ”பொய் சொல்லும் மோடி”விளாசும் சுப்ரமணியன் சுவாமி”நீங்க என்ன பண்ணீங்க”DMK MLA on kalla sarayam | ”என் தொகுதியிலேயே சாராயமா?”ON THE SPOT-ல் ரெய்டு! திமுக MLA Mass சம்பவம்!lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lok Sabha Speaker Election: பிடிகொடுக்காத பாஜக..! இன்று மக்களவை சபாநாயகர் தேர்தல், ஓம் பிர்லா Vs கொடிக்குன்னில் சுரேஷ்
Lok Sabha Speaker Election: பிடிகொடுக்காத பாஜக..! இன்று மக்களவை சபாநாயகர் தேர்தல், ஓம் பிர்லா Vs கொடிக்குன்னில் சுரேஷ்
Rasipalan: மகரத்துக்கு நம்பிக்கை..கும்பத்துக்கு கவனம்: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Rasipalan: மகரத்துக்கு நம்பிக்கை..கும்பத்துக்கு கவனம்: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Today Movies in TV, June 26: ஏழுமலை, வில்லு, வெந்து தணிந்தது காடு.. டிவியில் இன்றைய படங்கள் என்னென்ன?
Today Movies in TV, June 26: ஏழுமலை, வில்லு, வெந்து தணிந்தது காடு.. டிவியில் இன்றைய படங்கள் என்னென்ன?
Kottukkaali : சிறப்பு விருது பெற்ற சூரியின் கொட்டுக்காளி...உணர்ச்சிவசப்பட்ட நடிகை அனா பென்
Kottukkaali : சிறப்பு விருது பெற்ற சூரியின் கொட்டுக்காளி...உணர்ச்சிவசப்பட்ட நடிகை அனா பென்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Indian 2 Trailer Review:
Indian 2 Trailer Review: "காந்திய வழியில் நீங்க! நேதாஜி வழியில் நான்" எப்படி இருக்கு இந்தியன் 2 ட்ரெயிலர்?
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
Indian 2:
Indian 2: "நான்கு நாட்கள் கயிற்றில் தொங்கிய கமல்" பிரமித்த இயக்குனர் ஷங்கர்!
Embed widget