மேலும் அறிய
Advertisement
ஒண்டிவீரனின் 250-வது நினைவு தினம், தென்காசியில் அனுசரிக்கப்பட்டது !
தென்காசி மாவட்டம் பச்சேரி கிராமத்தில் முதல் சுதந்திர போராட்ட மாவீரர் ஒண்டிவீரனின் 250-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
தென்காசி மாவட்டம் நெல் கட்டும் செவல் அருகே உள்ள பச்சேரி கிராமத்தில் பிறந்தவர், முதல் சுதந்திர போராட்ட வீரர் ஒண்டி வீரன். இவர் தான் 1755-ஆம் ஆண்டு சுதந்திர போராட்டத்திற்கு முதல் முழக்கமிட்ட மாவீரர் ஆவார். 1767 ம் ஆண்டு ஆங்கிலேயருடன் நடந்த போரில் ஆங்கிலேய தளபதி கர்னல் எராலின் படையினை இரண்டாயிரம் வீரர்களுடன் போரிட்டு வெற்றி பெற்றார் என வரலாறு கூறுகிறது. மேலும் 2000 ம் ஆண்டு தமிழ் நாடு அரசிடம் ஒண்டி வீரரின் வாரிசுதாரர்கள் மாவீரன் ஒண்டி வீரரின் நினைவாக நினைவு மண்டபம் கட்டவேன்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். இதன் பலனாக பாளையங்கோட்டையில் ரூபாய் 50 இலட்சம் செலவில் ஒண்டிவீரன் மணிமண்டபம் அப்போதைய தமிழ்நாடு முதல்வரால் காணொளிக் காட்சி மூலம் 1 மார்ச் 2016 அன்று திறந்து வைக்கப்பட்டது.
இவரது நினைவு தினம் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அப்போது பச்சேரியில் உள்ள நினைவு தூண் மற்றும் பாளையங்கோட்டையில் உள்ள நினைவு மணி மண்டபத்தில் மாவீரர் ஒண்டி வீரரின் வாரிசுதாரர்கள், பல வேறு மாவட்டங்களை சேர்ந்த பொது மக்கள், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர், அரசு அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம். ஆனால் சென்ற ஆண்டு கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான கொரோனா ஊரடங்கு அமலில் இருந்ததாலும், தென்காசி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததாலும் இந்நிகழ்விற்கு தென்காசி மாவட்ட பொதுமக்கள் மற்றும் வெளி மாவட்ட பொது மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது.
அதே போல் இந்த ஆண்டும் கொரானோ பெருந்தொற்று காரணமாக நினைவு தின நிகழ்ச்சிக்கு பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. மேலும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி இன்று பச்சேரி கிராமத்தில் உள்ள மாவீரர் ஒண்டி வீரரின் நினைவு தூணுக்கு தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ் மாலை அணிவித்து மரியாதை செய்தார். மேலும் இந்த விழாவிற்கு அதிமுகவின் முன்னாள் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜ லெட்சுமி, திராவிட முன்னேற்ற கழகத்தின் மாநில அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி மற்றும் தமிழ் புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் என திரளானோர் கலந்து கொண்டு மாவீரர் ஒண்டி வீரரின் நினைவு துணிற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Karankadu Eco Tourism : காரசார நண்டு, கடல் பயணம், காரங்காடு சூழல் சுற்றுலா.. கண்டிப்பா ஒரு டூர் போடுங்க..!
ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழாத வண்ணம் பாதுகாப்பு பணிக்காக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ண ராஜ் தலைமையில் 4 மாவட்ட கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர்கள், 10 மாவட்ட துணை காவல் துறை கண்காணிப்பாளர்கள், 36 காவல் துறை ஆய்வாளர்கள் உட்பட 1242 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ”ஒரு விழிப்புணர்வுதான்” - பூக்கடைக்காரர் மோகன்: மதுரையில் மணக்கும் மல்லிகைப்பூ மாஸ்க் !
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
மதுரை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion