மேலும் அறிய
Advertisement
Thaipusam 2024: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவிந்து வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்
கோயிலுக்கு இடப்புறமாகவும் இலவச தரிசனத்தில் செல்பவர்கள் கோயிலுக்கு வலப்புறமாகவும் கிரிவலப் பாதை நெடுக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் - பழமுதிர்சோலை
தமிழகம் முழுவதும் தைப்பூச விழா இன்று விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் கடவுள் முருகனுக்கு உகந்த மாதமாக தை மாதம் விளங்கி வருகிறது. தை மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தில் அல்லது அந்த தினத்தையொட்டி உள்ள பூச நட்சத்திரத்தில் வருவது தைப்பூசம் ஆகும். எல்லா ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோயில்களிலும், சிவன் கோயில்களிலும் தைப்பூச விழா சிறப்பாக கொண்டாடப்படும். மதுரையில் திருப்பரங்குன்றம் மற்றும் பழமுதிர்சோலை என இரண்டு ஆறுபடை வீடுகளும் மாவட்டத்தில் பல்வேறு சிறப்புமிக்க, பழமை வாய்ந்த முருகன் கோயில்கள் உள்ளன. இந்நிலையில் திருப்பரங்குன்றம் தைப்பூசத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் குவிந்து வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்.
பூச நட்சத்திரமும், பௌர்ணமி திதியும் ஒருசேர வரக்கூடிய நாளே தைப்பூசம் என்று சொல்லப்படுகிறது. அசுரனை அழிக்க தேவர்கள் சிவபெருமானிடம் வேண்டியதை அடுத்து சிவபெருமான் நெற்றியில் இருந்து வெளிவந்த தீப்பொறியில் உருவான கந்தனிடம் தாயார் சக்தி தேவி அசுரனை அழிப்பதற்காக வேல் கொடுத்தது, தைப்பூச நாள் என்பதால் இந்த நாள் தமிழர்களால் மிகவும் சிறப்பான நாளாக கொண்டாடப்படுகிறது. சிவபெருமான் ஆலயங்களிலும், முருகப்பெருமான் ஆலயங்களிலும் ஏராளமான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்வர்.
தமிழகம் மட்டுமல்லாது சிங்கப்பூர், மலேசியா என உலகெங்கிலும் உள்ள முருகனின் திருக்கோவில்களில் தைப்பூசத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும் இந்த நாளில் முருகன் கையில் உள்ள வேலுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுவது வழக்கம். தைப்பூசத் திருநாள் பழனியில் தான் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் என்றாலும், முருகனின் அறுபடை வீடுகளிலும் தைப்பூசத் திருநாள் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும்.
அதன் ஒரு பகுதியாக ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான அருள்மிகு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மதுரை, திருமங்கலம், உசிலம்பட்டி, சோழவந்தான், மேலூர் மட்டுமின்றி சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து முருகனை தரிசனம் செய்து வருகின்றனர். கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக கட்டண தரிசனத்தில் வருபவர்கள் கோவிலுக்கு இடப்புறமாகவும் இலவச தரிசனத்தில் செல்பவர்கள் கோவிலுக்கு வலப்புறமாகவும் கிரிவலப் பாதை நெடுக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருப்பதற்கு நூற்றுக்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் மூலம் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கூடுதல் பாதுகாப்பிற்காக 150-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தற்போது திருப்பரங்குன்றம் பகுதியில் பாதுகாப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - TN Fishermen: மீண்டும் அட்டூழியம்..! தமிழக மீனவர்கள் 6 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படை
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - PMK Meeting: சூடுபிடிக்கும் நாடாளுமன்ற தேர்தல் - பிப்ரவரி 1ல் பாமக பொதுக்குழு கூட்டம், கூட்டணி முடிவு வெளியாகுமா?
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
இந்தியா
தமிழ்நாடு
ஆன்மிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion