மேலும் அறிய
Advertisement
’250 கோடி கடன் வாங்கித்தருவதாக கூறி 5 கோடி அபேஸ் செய்த எஸ்.ஆர்.தேவர்’...! வீடு புகுந்து தூக்கிய தெலங்கான போலீஸ்
’’இது கொடுக்கல் வாங்கல் விவகாரம் புகார் மனுதாரருக்கு ஏற்கனவே நாங்கள் பணத்தை திருப்பிக் கொடுத்து உள்ளோம் என்றும் அதற்கான ரசீது எங்களிடம் உள்ளது’’
தெலுங்கானா மாநிலம் நல கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் லட்சுமி நாராயணன். இவர் ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் மருத்துவமனை உரிமையாளராக உள்ளார். லட்சுமி நாராயணனிடம் கடன் வாங்கித் தருவதாக கூறி கடந்த 2011ஆம் ஆண்டு காரைக்குடியைச் சேர்ந்த அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற கழக பொதுச் செயலாளரும், ஐந்து மாவட்ட விவசாய சங்கத் தலைவருமான எஸ்.ஆர்.தேவர் என்பவர் 5 கோடி ரூபாய் வாங்கியதாக கூறப்படுகிறது.
இதை சற்று கவனிக்கவும் - *Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*
மேலும் லோன் எதுவும் வாங்கி தரவில்லை என்று குற்றம் சாட்டப்பட்ட நிலையில் மருத்துவமனை நிர்வாகம் தெலுங்கானா போலீசில் கடந்த 2020ல் புகார் அளித்தது அதன், அடிப்படையில் தெலுங்கானா போலீசார் காரைக்குடியில் உள்ள அவரது வீட்டில் இருந்த எஸ்.ஆர்.தேவரை காரைக்குடி வடக்கு காவல் நிலைய போலீசார் உதவியுடன் கைது செய்து, காரைக்குடி முதன்மை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பாலமுருகன் முன்பு ஆஜர்படுத்தி மேல் விசாரணைக்காக தெலுங்கானா அழைத்துச் சென்றனர்.
சிவகங்கை மாவட்டம் தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - காரைக்குடியில் காரில் சிக்கிய 5 கோடி பணம்- நிலம் வாங்குவதற்காக எடுத்து செல்லப்பட்டதா?
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.ஆர் தேவர், இது கொடுக்கல் வாங்கல் விவகாரம் புகார் மனுதாரருக்கு ஏற்கனவே நாங்கள் பணத்தை திருப்பிக் கொடுத்து உள்ளோம் என்றும் அதற்கான ரசீது எங்களிடம் உள்ளது. இது தவறான புகார், நீதிமன்றம் மூலம் நான் குற்றமற்றவர் என்று நிரூபிப்பேன்" என தெரிவித்தார்.
மேலும் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Karankadu Eco Tourism : காரசார நண்டு, கடல் பயணம், காரங்காடு சூழல் சுற்றுலா.. கண்டிப்பா ஒரு டூர் போடுங்க..!
இந்த வழக்கு குறித்து சிவகங்கை மாவட்ட போலிசாரிடம் கேட்டபோது, எஸ்.ஆர் தேவர் பல்வேறு இடங்களில் லோன் வாங்கி தருவதாக ஏமாற்றி வருகிறார். இதை ஒரு தொழிலாகவே செய்துவருகிறார். இவ்வாறு ஏமாற்றுவதில் 30 ஆண்டுகளாக கை தேர்ந்தவர். அரசியல் மற்றும் விவசாயி என்ற தோற்றத்தை உருவாக்கி தொடர்ந்து குற்றங்கள் செய்துவருகிறார். இந்நிலையில் தெலுங்கானாவில் ஏமாற்றியுள்ளார். 250 கோடிக்கு கடன் வாங்கித் தருவதாக பல்வேறு நாடகங்களை அரங்கேற்றியுள்ளார். விமானம் மூலம் வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று நம்ப வைத்துள்ளார். இந்நிலையில் சுமார் 5 கோடியை தற்போது ஏமாற்றி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் என" தெரிவித்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion