மேலும் அறிய
Advertisement
மதுரையில் ஜல்லிக்கட்டு: போட்டிகள் நடைபெறும் இடங்களை சுற்றியுள்ள டாஸ்மாக் கடைகள் அடைப்பு !
அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளை முன்னிட்டு போட்டி நடைபெறும் பகுதிகளை சுற்றியுள்ள டாஸ்மாக் கடைகள் அடைப்பு
மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் பகுதியில் போட்டி நாளன்று போட்டி நடைபெறும் பகுதியை சுற்றியுள்ள 16மதுபானகடைகள் மற்றும் மனமகிழ்மன்றங்களில் மது விற்பனைக்கு தடை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு செய்துள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் வரும் 15ஆம் தேதி அவனியாபுரத்திலும், 16ஆம் தேதி பாலமேட்டிலும், 17ஆம் தேதி உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ள மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான பதிவு madurai.nic.in இணையதளம் மூலம் பதிவு கடந்த 10 ஆம் தேதி நண்பகல் 12.10மணிக்கு தொடங்கி இன்று மாலை 5 மணி வரை பதிவு நடைபெற்று நிறைவுபெற்றது.
இந்த ஆன்லைன் முன்பதிவில் மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்பதற்கு 9,699 காளைகளும், 5,399 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இவ்வாறு ஆன்லைன் மூலமாக பதிவு செய்தவர்களின் சான்றுகள் சரிபார்க்கப்பட்ட பின் தகுதியான நபர்களுக்கு மட்டுமே போட்டிகளில் பங்கேற்பதற்கான அனுமதி டோக்கன் பதிவிறக்கம் செய்ய இயலும். டோக்கன் பதிவிறக்கம் செய்த மாடுபிடிவீரர்கள் மற்றும் காளைகள் மட்டுமே ஜல்லிக்கட்டு விளையாட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது
மதுரை மாவட்டத்தில் நடைபெறும் உலக புகழ்பெற்ற அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக 9,699 காளைகளும், 5,399 மாடுபிடி வீரர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ளனர் - மாவட்ட ஆட்சியர் தகவல்.@mducollector @SRajaJourno@Stalin__SP @MSThanaraj @reportervignesh pic.twitter.com/aGtOkYrPmn
— arunchinna (@arunreporter92) January 12, 2023
ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் பகுதிகளில் சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவிட்டுள்ளார். அவனியாபுரம் போட்டிக்கு ஆளுநர் ரவி மற்றும் அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டி போட்டிக்கு அமைச்சர்கள் வருகை தரவுள்ளதாக வெளியான தகவலையடுத்து அந்த பகுதிகளில் சட்ட ஒழுங்கு பாதுகாப்பிற்காக மதுபான விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion