மேலும் அறிய
Advertisement
"தமிழ்நாட்டு சாலைகள் பார் சாலைகளாக மாறுவது வேதனை" - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
இளைய சமுதாயத்தை காப்பதற்கு நீதியரசர்கள் முன் வைத்திருக்கிற கேள்விகளுக்கு உரிய நடவடிக்கை எடுப்பதற்கு இந்த திமுக அரசு முன்வருமா என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்
இளைய சமுதாயத்தை காப்பதற்கு நீதியரசர்கள் முன் வைத்திருக்கிற கேள்விகளுக்கு உரிய நடவடிக்கை எடுப்பதற்கு இந்த திமுக அரசு முன்வருமா என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுதொடர்பாகப் பேசிய உதயகுமார், “போதைப் பொருள்கள் சமூகத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தும் மற்றும் அபாயகரமான சூழ்நிலையை உருவாக்கும் என்பதை அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை அதிமுக வலியுறுத்தி வருகிறது. ஆளுநரிடம் எதிர்க்கட்சித் தலைவர் போதை பொருள்களை கட்டுப்படுத்த திமுக அரசு நடவடிக்கை எடுக்க தவறியதை சுட்டிக்காட்டி உள்ளார். தமிழ்நாட்டிலே சட்ட விரோதமாக டாஸ்மாக் கடைகள் 24 மணி நேரமும் செயல்படுவதை நாம் பார்க்க முடிகிறது.
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தாய் திருநாடு, பாரம்பரிய, கலாச்சாரம் பண்பாடுமிக்க தாய் தமிழ் இனம், டாஸ்மாக் கடைகளில் 24 மணி நேரமும் காத்துக் கிடக்கிற அவலநிலை உள்ளது. இன்று ராமநாதபுரம் மாவட்டத்திலே திமுகவை சேர்ந்த இருவர் பல நூறு கோடி ரூபாயிலே போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டுஇருப்பது அதிர்ச்சி தகவலாக உள்ளது. டாஸ்மாக் மது விற்பனை குறித்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் உள்ள நீதியரசர்களே கேள்வி எழுப்பி உள்ளார்கள், டாஸ்மாக் கடையினுடைய நேரம் பொதுவாக 12 முதல் 10 மணி வரை என்று அறிவிக்கப்பட்டு இருந்தாலும் இன்றைக்கு 24 மணி நேரமும் செயல்படுகிறது, அது மட்டுமல்ல டாஸ்மாக் கடையில் விலை பட்டியலே கிடையாது, மதுபானங்கள் கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யப்படுகிறது.
21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு சட்டப்படி மது விற்பனை செய்யக்கூடாது என்ற அறிவுறுத்தல் செய்யப்படுகிறதா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. இன்றைக்கு நீதியரசர்கள் பட்டவர்த்தனமாக, வெட்ட வெளிச்சமாக திமுக அரசை தோலுரித்துக் காட்டியுள்ளார்கள். மாணவர்கள் மத்தியிலே அதிகமான போதை பழக்கம் இருப்பதை எதிர்க்கட்சித் தலைவர்எடப்பாடியார் சுட்டிக் காட்டியதை, நீதியரசர்களும் எழுப்பி உள்ளனர். மாணவர்களுக்கு மது விற்பனை முற்றிலும் தடை செய்யப்படவில்லையா என்கிற ஆச்சரியமாக கேள்வி கேட்டிருக்கிறார்கள். பாலாறு, தேனாறு ஓடிய தமிழ்நாட்டில், டாஸ்மாக் பார்கள் ஓடுகிற ஒரு அவல நிலை உள்ளது .பிள்ளைகளுக்கு மடிக்கணிணி கொடுத்து, கணினி புரட்சி ஏற்படுத்தி, வல்லரசு நாடுகளுக்கு இணையாக தமிழகத்தில் அறிவு ஆற்றல் மிகுந்த மாணவ சமுதாயத்தை உருவாக்கிய திட்டத்தை அதிமுக கொடுத்தது. ஜெயலலிதா ஆட்சியில் 500 டாஸ்மாக் கடைகளை மூடினார், எடப்பாடியார் காலத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இன்றைக்கு கணக்கில் அடங்காத பெட்டிக்கடை போல், மதுபான கடைகள் நாடெங்கும் திறக்கப்பட்டு இருக்கிறது, இதற்கு அதிகாரம் கொடுத்தது யார் எனத் தெரியவில்லை. மாவட்ட நிர்வாகத்தினுடைய எண்ணிக்கைக்கும், செயல்படுகிற மதுபான கடைகளுடைய எண்ணிக்கைக்கும் மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது. அரசு அதிகாரம் இல்லாமல், புற வழியில் அதிகாரத்தை கொடுத்தது யார் என்று கேள்வி இன்றைக்கு மக்கள் மத்தியில் விவாதத்தில் இருக்கிறது.
கல்விச்சாலைகள் செய்வோம் என்று சொன்ன தமிழ் நாட்டிலே, இன்றைக்கு பார்சாலைகளாக தமிழ்நாட்டுச்சாலைகள் மாறி இருப்பது வேதனையின் உச்சமாகும். இளைய சமுதாயத்தை காப்பதற்கு நீதியரசர்கள் முன் வைத்திருக்கிற கேள்விகளுக்கு உரிய நடவடிக்கை எடுப்பதற்கு இந்த திமுக அரசு முன்வருமா” என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion