மேலும் அறிய
மதுரை விமான நிலைய விரிவாகத்திற்கு தேவையான நிலத்தை தமிழக அரசு ஒப்படைக்கவில்லை - அமைச்சர் வி.கே.சிங்
மதுரை விமான நிலைய விரிவாகத்திற்கு தேவையான நிலத்தை தமிழக அரசு ஒப்படைக்கவில்லை. மத்திய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங் பேட்டி.

மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங்
தமிழகத்தில் கட்சி நிகழில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து விமான மூலம் மதுரை வந்த மத்திய விமான போக்குவரத்து துறை இணைஅமைச்சர் வி.கே.சிங் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
மதுரை விமான நிலைய விரிவாக்கம் குறித்த கேள்விக்கு
மதுரை விமான நிலைய விரிவாகத்திற்கு தேவையான நிலத்தை தமிழக அரசு ஒப்படைக்கவில்லை.
மதுரை விமான நிலைய 24 மணி நேர சேவை குறித்த கேள்விக்கு
மத்திய சிவில் விமான போக்குவரத்து துறையில் ஏற்பட்ட மாற்றங்களுக்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் எங்கிருந்து எங்கு வேண்டுமானாலும் சேவை நடத்திக் கொள்ள விமான சேவை நிறுவனங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நள்ளிரவு இரண்டு மணிக்கு வேண்டுமென்றாலும் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் நாங்கள் அதற்கு தயாராக உள்ளோம்.

சர்வதேச விமான நிலையமாக அறிவிப்பது குறித்த கேள்விக்கு
அறிவித்தால் தான் சர்வதேச விமான நிலையம் என்று இல்லை சுங்க இலக்க சேவை இருந்தால் சர்வதேச விமானங்கள் வந்து செல்லலாம் மதுரை விமான நிலையத்தில் சுங்கலாக்கா சேவை உள்ளதால் சர்வதேச விமானங்கள் வந்து செல்கின்றன. விமானங்கள் அதிகமாகும் பட்சத்தில் அது குறித்து ஆலோசிக்கலாம்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த கேள்விக்கு
விதிமுறைகள் பின்பற்றப்படுகிறது. கொரோனா விதிமுறைகளை அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும், அதனை செயல்படுத்தி கடைபிடிக்க வேண்டியது பொதுமக்கள் தான் என்றார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி டீ தூள் தயாரிப்பு - 2 பேர் கைது; 400 கிலோ டீ தூள் பறிமுதல்
மேலும் செய்திகள் படிக்க - மு.க அழகிரியை சந்தித்து சால்வை அணிவித்த நிதி அமைச்சரின் ஆதரவாளரால் பரபரப்பு - திமுகவில் மீண்டும் முக அழகிரியின் கை ஓங்குகிறதா?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
வணிகம்
உலகம்
அரசியல்
கிரிக்கெட்





















