தேனி : குச்சனூரில் சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோயில் ஆடித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூரில் சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோயில் ஆடித் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்..
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூரில் சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோயில் அமைந்துள்ளது. தமிழகத்தில் திருநள்ளாறுக்கு அடுத்தபடியாக புகழ்பெற்ற சனி வழிபாடு மற்றும் தோஷ நிவர்த்தி ஸ்தலமாக இந்த சனீஸ்வர பகவான் கோயில் விளங்குகிறது.
இங்கு ஆண்டுதோறும் ஆடி திருவிழா கொண்டாடப்படும். ஆடி மாதங்களில் ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் வழிபாடு சிறப்பாக நடைபெறும். இதற்காக தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சனிபகவானை தரிசித்து சனி பகவானின் அருள் பெற்று செல்வது வழக்கம்.
'என் மகள் பார் நடத்துறாரா? ஆதாரம் இருக்கா? கோர்ட்ல பார்க்கிறேன்' - கொதித்தெழுந்த ஸ்மிருதி ராணி!
புகழ்பெற்ற சனி தோஷ நிவாரண ஸ்தலமான இக்கோவிலின் முன் பகுதியில் அமைந்துள்ள சுரபி நதியில் நீராடி,எள் தீபமிட்டு சனீஸ்வர பகவானுக்கு விளக்கேற்றி சனியின் வாகனமான காக்கைக்கு சிறப்பு பூஜைகள் செய்து மண்ணால் செய்யப்பட்ட காக்கை வாகனத்தை தலையை சுற்றி உடைத்து சனி நிவர்த்தி பெறுவது இக்கோவிலின் சிறப்பு.
Uttar Pradesh: விளையாடிக்கொண்டிருந்த 4 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை! உபியில் கொடூரம்!
இந்த ஆண்டிற்கான ஆடித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியுள்ளது, வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இரண்டாவது சனி வாரதத்தில் சனீஸ்வர பகவான் நீலாதேவி திருக்கல்யாணம் நடைபெறும்.
மூன்றாவது வாரத்தில் ஆடிப்பெரும் திருவிழாவில் சக்தி கரகம் எடுத்தல், பகவானுக்கு மஞ்சள் காப்பு சாற்றுதல், இரவில் சாமி புறப்பாடு உள்ளிட்ட ஆடிப் பெருந்திருவிழா நடைபெறும். நான்காவது வாரத்தில் சோனை கருப்பசாமி பொங்கல் விழாவும் ஐந்தாவது வாரமான ஆகஸ்ட் 20ஆம் தேதி கொடி இறக்கி பூஜைகள் சிறப்பாக நிறைவு பெரும்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் இந்த கோயிலுக்கு வருவார்கள் என்பதால் தேனி, கம்பம், ஆண்டிபட்டி, போடி,தேவாரம் உள்ளிட்ட மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் இருந்து சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றது.
இந்த உலகமே தப்புன்னு சொல்லுச்சு.. அம்மா கூட நின்னாங்க - தேசிய விருது நாயகி லக்ஷ்மி நெகிழ்ச்சி!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்