மேலும் அறிய
Advertisement
Madurai: மு.க.அழகிரிக்கு பிறந்த நாள்: ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம் !
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் பிறந்த நாள் விழாவை முன்ளிட்டு மதுரை முனிச்சாலை பகுதியில் மு.க.அழகிரி ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினார்கள்
மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும் டாக்டர்.கலைஞரின் மகனும் முன்னாள் மத்திய இணை அமைச்சருமான மு.க.அழகிரியின் பிறந்த தினம் ஜனவரி-30 ஆம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு மதுரை முனிச்சாலை பகுதியில் அழகிரியின் தீவிர ஆதரவாளரான சேட் என்ற முகமது உசேன் தலைமையில் அழகிரி ஆதரவாளர்கள் முபாரக் மந்திரி உதயகுமார் உள்ளிட்டோர் அப்பகுதி மக்களுடனும் தி.மு.க. தொண்டர்களுடனும் அழகிரியின் பிறந்தநாளை பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கியும் ஏழை எளியவர்களுக்கு இலவச வேட்டி சேலை இலவச மூன்று சக்கர வாகனம் இலவச ட்ரை சைக்கிள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கொண்டாடினார்கள்.
கடந்த சில வருடங்களாக மு.க.அழகிரி அரசியலில் ஒதுங்கி இருந்தாலும் அவருடைய ஆதரவாளர்கள் ஜனவரி 30 ஆம் தேதியான அழகிரி பிறந்தநாளில் மதுரையில் பல்வேறு பகுதியில் இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்தும் நலத்திட்ட உதவிகள் வழங்கியும் பிறந்த நாளை கொண்டாடுவது வழக்கம். அதேபோல அழகிரியின் தீவிர ஆதரவாளர்கள் நிறைந்த முனிச்சாலை பகுதியில் அவருடைய பிறந்த தினத்திற்கு ஒரு நாள் முன்னதாகவே பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி நலத்திட்ட உதவிகள் செய்து அவரது பிறந்தநாளை அழகிரியின் ஆதரவாளர்களும் தி.மு.க. தொண்டர்களும் கொண்டாடினார்கள்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்படும் - கே.எஸ்.அழகிரி
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion