சூப்பர் சரவணா ஸ்டோர்ஸில் பயங்கர தீ விபத்து.... மதுரையில் பரபரப்பு
தொடர்ந்து தீ பற்றி எறிந்ததால் மாட்டுத்தாவணி சாலை முழுவதும் புகை மண்டலமாக சூழ்ந்தது.

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் சார்பாக சுமார் பத்து தளங்கள் கொண்ட ஐந்து ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட வணிகவளாகம் செயல்பட்டு வருகிறது. பார்கிங் வசதிகளுடன் கூடிய இந்த வணிக வளாகத்தில் தங்க நகை முதல் மளிகை பொருட்கள் வரை வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
#fire | மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோரில் 9-வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. பொதுமக்களை அனைவரையும் வெளியேற்றி தீயை அணைக்க முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் மற்றும் உதவி ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.@abpnadu pic.twitter.com/Y8lXgjkeBy
— arunchinna (@arunreporter92) March 1, 2023


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்





















